ரூ.99,999ல் புதிய ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இனி எல்லோருக்கும் ஏத்தர்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஸ்போர்ட்டியான பிரிமீயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் பிரபலமடைந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தற்போது அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் நோக்கில் புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் நடந்த அந்நிறுவனத்தின் ஏத்தர் கம்யூனிட்டி டே 2026 என்ற வருடாந்திர நிகழ்ச்சியில் அறிமுகமான இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை ரூ.99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் ஏத்தர் நேரடியாக களமிறங்கியுள்ளது. இதுவரை 450 சீரிஸ் மற்றும் குடும்பப் பயன்பாட்டை மையமாகக் கொண்ட ரிஸ்டா போன்ற மாடல்களுடன் பிரிமீயம் பிரிவில் இருந்த ஏத்தர், புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் குடும்ப பயன்பாட்டுப் பிரிவில் அதிக வாடிக்கையாளர்களை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

Ather Konarc EV

ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே புதிய ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டரில் பல்வேறு பேட்டரி, ரேஞ்ச் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.. பேஸ் வேரியண்ட்டில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ ரேஞ்ச் வழங்கும். இந்த வேரியண்ட்டானது ரூ.99,999 விலையில் கிடைக்கிறது. இதற்கு அடுத்ததாக 125 கிமீ ரேஞ்ச் கொண்ட வேரியண்ட்டானது ரூ.1,21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read

மேலும், 161 கிமீ ரேஞ்ச் வழங்கும் உயர்நிலை வேரியண்ட்டும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,44,999 வரை இருக்கும் என ஏத்தர் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தினசரி பயண தூரம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப மாடலை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றொரு 450W சார்ஜரை பயன்படுத்தினால் 0-80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்ய 2 மணிநேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Ather Konarc EV

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், எதிர்காலத்தில் 200 கிமீ ரேஞ்ச் கொண்ட கோனார்க் மாடலையும் ஏத்தர் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதிக ரேஞ்ச் கொண்ட அந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் வர வாய்ப்புள்ளது.

Also Read

ஏத்தர் நிறுவனத்தின் புதிய தலைமுறை EL என்ற முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் மாடலாக கோனார்க் வந்துள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு விலை மற்றும் பயன்பாட்டு பிரிவுகளில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்க இந்த பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்பட உள்ளது.

Ather Konarc EV

ஏற்கனவே உள்ள 450 சீரிஸ் ஏத்தர் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது கோனார்க் வடிவமைப்பு அதிக குடும்பப் பயன்பாட்டை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மெட்டல் பாடி, நீளமான ஒற்றை இருக்கை, நடைமுறைக்கு ஏற்ற ஃப்ளோர்போர்டு மற்றும் வழக்கமான குடும்ப ஸ்கூட்டர் தோற்றம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. 31 லிட்டர் ஸ்டோரேஜ் இடவசதியும் உள்ளது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் பெரிய திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு 450W சார்ஜர் வழங்கப்படுகிறது. ஏர்வாக் என்ற வசதி மூலமாக ஸ்கூட்டரை தள்ளும் சூழல் ஏற்பட்டால், மெதுவாக நகரும் தொழில்நுட்ப வசதி உள்ளது. இதனால், தள்ளிக் கொண்டு செல்லும் சூழலில் இது கைகொடுக்கும்.

ரூ.99,999 ஆரம்ப விலையுடன் வந்துள்ள புதிய ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் இந்த சந்தையில் முன்னிலை வகிக்கும் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். அதே நேரத்தில் 125 கிமீ ரேஞ்ச் கொண்ட வேரியண்ட்டானது ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா ஸ்கூட்டருடன் போட்டியிடுகிறது.

இந்த ஸ்கூட்டருக்கு 10,000 கிமீ அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் இடைவெளி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ தூரத்திற்கான ஸ்டான்டர்டு வாரண்டியும், 5 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ தூரத்திர்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் உள்ளது. மேலும், பேட்டரிக்கு 10 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி திட்டங்களும் உள்ளதாக ஏத்தர் தெரிவித்துள்ளது.

Article Published On: Saturday, August 29, 2026, 13:06 [IST]
English summary
Ather konarc electric scooter launched rs 99999 range features warranty
மேலும்... #new launches #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X