ஏத்தர் கோனார்க் EV ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்ச் இதுதான்... நிறுவனமே வெளியிட்ட தகவல்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏத்தர் கோனார்க் (Ather Konarc) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்ச் குறித்த முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறித்து பேசும்போது, நிறுவனங்கள் குறிப்பிடும் IDC ரேஞ்ச் மற்றும் நிஜ உலக பயன்பாட்டில் கிடைக்கும் ரேஞ்ச் ஆகியவற்றுக்கு இடையே வித்தியாசம் இருக்கும். ஆனால், ஏத்தர் கோனார்க்கை பொறுத்தவரை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலிலேயே TrueRange எனப்படும் நடைமுறை பயன்பாட்டில் எவ்வளவு தூரம் செல்லும் என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் S மற்றும் Z ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதில், கோனார்க் எஸ் மாடலானது S 100, S125 மற்றும் ஏ161 ஆகிய மூன்று வேரியண்ட்டுகளிலும், அதிக தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய கோனார்க் இசட் மாடலானது Z125 மற்றும் Z161 ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கோனார்க் எஸ் மாடலில் உள்ள மூன்று வேரியண்ட்டுகள் மட்டுமே தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. கோனார்க் இசட் மாடல் பின்னர் கொண்டு வரப்படும்.
இந்த நிலையில், கோனார்க் எஸ் ஸ்கூட்டரின் ரேஞ்ச் விபரங்கள் வழக்கம்போல் IDC சோதனை நிலைகளின்படி வெளியிடப்பட்டது. அத்துடன் தற்போது கோனார்க் எஸ் மாடலின் உண்மையான ரேஞ்ச் விபரங்களையும் ஏத்தர எனெர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை வைத்து உண்மையாக முழு சார்ஜில் இந்த ஸ்கூட்டர் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொண்டு வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.

கோனார்க் S 100 என்ற பேஸ் வேரியண்ட்டிற்கு ஏத்தர் நிறுவனம் 100 கிமீ IDC ரேஞ்சை குறிப்பிட்டுள்ளது. ஆனால், TrueRange எனப்படும் நடைமுறை பயன்பாட்டு ரேஞ்ச் என்பது 80 கிமீ ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கோனார்க் S 125 என்ற மிட் வேரியண்ட்டில் 125 கிமீ IDC ரேஞ்ச் தெரிவிக்கப்படுகிறது. இதன் TrueRange 100 கிமீ என ஏத்தர் தெரிவித்துள்ளது. இதனால், தினசரி அலுவலகப் பயணம் மற்றும் நகருக்குள் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும்.
அடுத்து கோனார்க் எஸ் வரிசையில் அதிக ரேஞ்ச் வழங்கும் மாடலாக S 161 உள்ளது. இதன் IDC ரேஞ்ச் 161 கிமீ என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிறுவனத்தின் TrueRange கணக்கீட்டின்படி நடைமுறை பயன்பாட்டில் 130 கிமீ வரை செல்லும் வாய்ப்பை வழங்கும். மூன்று வேரியண்ட்டுகளில் PMSM மோட்டார், IP67 தர மதிப்பீடு பெற்ற மோட்டார் மற்றும் அதிகபட்சமாக 70 கிமீ டாப் ஸ்பீடு கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 4.7kW பீக் பவர் மற்றும் 16 Nm டார்க் வழங்கப்படுகிறது.
இதனால், ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தெரிவிக்கப்படும் IDC ரேஞ்ச் வைத்து முடிவு செய்யாமல், நிறுவனமே குறிப்பிட்டுள்ள TrueRange என்ற விஷயத்தை கவனிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக அதிகபட்ச ரேஞ்ச் தேடும் வாடிக்கையாளர்களுக்கு S 161 மாடலின் 130 கிமீ TrueRange நிச்சயம் சிறப்பான தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications

