நாளை அறிமுகமாகிறது புதிய ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... கடுமையான இறுதிக்கட்ட சோதனைகள்!!

இதுவரை ஸ்போர்ட்டியான பிரிமீயம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கவனம் செலுத்தி வந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் முதல்முறையாக விலை குறைவான சந்தையில் களமிறங்குவதற்கு ஆயத்தமாகிவிட்டது. கோனார்க் என்ற பெயரில் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட கோனார்க் என்ற புத்தம் புதிய ஸ்கூட்டரை நாளை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இதுவரை ஏத்தர் ஸ்கூட்டர்கள் மீது தொழில்நுட்ப அளவிலான பிரச்னைகள் அதிகம் இல்லாததால், இந்த ஸ்கூட்டரிலும் அது வந்துவிட்டக்கூடாது என்ற கவனதத்துடன், 1 லட்சம் கிமீ தூரம் அளவுக்கு ஓடியதற்கான கடுமையான சோதனைகளுக்கு இந்த புதிய மாடல் உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

Ather EL Scooter

தற்போது இந்த சோதனைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. கோனார்க் ஸ்கூட்டரின் கட்டமைப்பு மற்றும் நீடித்த உழைப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் குறித்த தகவல்களை ஏத்தர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஏத்தரின் பிரத்யேக சோதனை மையமான தி ஜூகர்நாத் (The Juggernaut) மையத்தில் புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தகவலின்படி, ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த நீடித்துழைப்பை பரிசோதிக்க சுமார் 2,000 விதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக, கீழே விழுந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும், அதிக எடையைத் தாங்கும் திறன், அதிர்வு மற்றும் தொடர்ச்சியான இயக்கம் உள்ளிட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண பயன்பாட்டில் நீண்ட காலத்துக்கு ஏற்படும் தேய்மானத்தை விரைவாக மதிப்பிடும் வகையில், 1 லட்சம் கிமீ பயணத்திற்கு இணையான சோதனைகளும் நடத்தப்பட்டு உள்ளதாக ஏத்தர் தெரிவித்துள்ளது.

மழைக்காலத்தில் இந்திய சாலைகளில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களையும் கருத்தில் கொண்டு பல சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கனமழை, ஆழமான தண்ணீரை கடக்கும்போது ஏதாவது பிரச்னைகள் ஏற்படுகிறதா மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு ஸ்கூட்டரின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பிரேக், சஸ்பென்ஷன், ஸ்டாண்ட் மற்றும் சுவிட்ச்கள் போன்ற முக்கிய பாகங்களின் நீடித்த உழைப்பும் தனித்தனியாக சோதனை செய்யப்பட்டுள்ளது. புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டீல் சேஸிஸ், மெட்டல் பாடி பேனல்கள், ஸ்விங் ஆர்மில் பொருத்தப்பட்ட மின் மோட்டார் ஆகியவை இடம்பெறுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்புறத்தில் 14 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 12 அங்குல சக்கரமும் வழங்கப்பட உள்ளன.

பெங்களூரில் நாளை நடைபெற உள்ள ஏத்தர் கம்யூனிட்டி டே என்ற வருடாந்திர நிகழ்ச்சியில், இந்த புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் பேட்டரி, ரேஞ்ச், செயல்திறன் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது வெளியிடப்படும். இந்த பண்டிகை காலத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இது சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, August 28, 2026, 10:14 [IST]
English summary
Ather konark electric scooter durability tests prior launch tomorrow india
மேலும்... #electric scooter #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out