அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் தயாரிப்புகளை விஞ்சும் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). ஏத்தர் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Most Affordable Ather Electric Scooter) என்ற பெருமையை ரிஸ்டா தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்து வருகிறது.

இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஏத்தர் ரிஸ்டா பதிவு செய்து அசத்தியுள்ளது. ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17,960 ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Ather Rizta

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 10,052 ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 7,908 ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 78.67 சதவீத வளர்ச்சி ஆகும்.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் அது தொழில்நுட்ப ரீதியில் தலைசிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப வசதிகளை (Features) பொறுத்தவரையில், ஏத்தர் ஸ்டாக் 7 (Ather Stack 7) மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Ather Rizta EV

டேஷ்போர்டில் கிரிக்கெட் ஸ்கோர், ரிமோட் கண்ட்ரோல், பார்க் சேஃப் அலர்ட்கள் மற்றும் க்ராஷ் அலர்ட்கள் போன்ற வசதிகள் எல்லாம் இந்த தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை ஏத்தர் ரிஸ்டா எஸ் (S) மற்றும் ஏத்தர் ரிஸ்டா இஸட் (Z) ஆகியவை ஆகும். இவை இரண்டிலுமே 2.9 kWh மற்றும் 3.7 kWh பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. 2 வேரியண்ட்களிலும் இவற்றின் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) முறையே 123 கிலோ மீட்டர்கள் மற்றும் 159 கிலோ மீட்டர்களாக உள்ளது.

சார்ஜிங்கை பொறுத்தவரையில், ஏத்தர் க்ரிட் பயன்படுத்தினால், 2.9 kWh பேட்டரியை வெறும் 10 நிமிடங்களில் 15 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் அளவிற்கு சார்ஜ் செய்து விட முடியும். அதே நேரத்தில் 3.7 kWh பேட்டரியை வெறும் 10 நிமிடங்களில் 30 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் அளவிற்கு சார்ஜ் செய்து விடலாம். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிகளுக்கு 8 ஆண்டுகள் வரை வாரண்டி (Warranty) வழங்கப்படுகிறது.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 வேரியண்ட்களிலும் ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் இன்டிகேட்டர் என்று அனைத்துமே எல்இடிதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஏத்தர் ரிஸ்டா எஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை (Price) 1,17,499 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஏத்தர் ரிஸ்டா இஸட் வேரியண்ட்டின் விலை 1,32,998 ரூபாயாக இருக்கிறது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பலரும் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திகழ்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Wednesday, May 27, 2026, 18:16 [IST]
English summary
Ather rizta registers 79 per cent growth in april 2026 price range features rivals
மேலும்... #ather energy #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out