ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை மாத்த போறீங்களா? இதோ அவோர் எலெக்ட்ரிக் பைக்...!
இந்தியாவின் புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அவோர் எலெக்ட்ரிக் (Avore Electric) அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம், இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஒரு பார்வை நமக்கு கிடைத்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த சமர்த் இ-மொபிலிட்டி என்கிற தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிராண்ட் ஆக அவோர் எலெக்ட்ரிக் மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. தற்போதைக்கு நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்வது மட்டுமே தற்போதைக்கு அவோர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் திட்டமாக உள்ளது.

விலையுயர்ந்த எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்வது எல்லாம் இந்த நிறுவனத்தின் திட்டம் அல்ல. 125சிசி - 200சிசி பெட்ரோல் பைக்குகளுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் பைக்குகளை களமிறக்கவே இப்போதைக்கு அவோர் எலெக்ட்ரிக் நிறுவனம் விரும்புகிறது. அவ்வாறான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட முதல் அவோர் எலெக்ட்ரிக் பைக்கின் டீசர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரில் பைக் இருட்டான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதுபோல் காட்டப்பட்டு இருந்தாலும், அவோர் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அட்வான்ஸான பொறியியல் நுட்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதை இலைமறை காயாக பார்க்க முடிகிறது. பைக்கின் பாடி பேனல்கள் அனைத்தும் வளைக்கப்பட்டதாக பொருத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட்டின் டிசைன் ஆனது KTM, ஹீரோ பைக்குகளை ஒத்ததாக காட்சியளிக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு நிச்சயமாக இரு நிறங்களில் அவோர் நிறுவனம் பெயிண்ட்டை வழங்கும். இவற்றிற்கேற்ப, இந்த பைக்கில் அதிநவீன தொழிற்நுட்பங்களையும் எதிர்பார்க்கலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில், இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பல்வேறு வண்ணங்களில் ஒளிரக்கூடிய TFT திரை வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரை ஆனது ப்ளூடூத் உடன் இணைக்கக் கூடியதாகவும், ஒவ்வொரு திருப்பத்திற்கும் வழிக்காட்டுதலை வழங்கக் கூடியதாகவும் இருக்கும்.
அவோர் எலெக்ட்ரிக் பைக்கின் முழு தோற்றம் தற்போதுதான் முதல்முறையாக இந்த டீசரின் மூலம் தெரியவந்துள்ளது. அவோர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நேட்டீவ் டெக்னாலஜி பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் பைக் ஆனது நிறுவனத்தின் நீண்ட கால ஆராய்ச்சிகள், மேம்பாடுகள் மற்றும் பொறியியலின் பலன் ஆக கொண்டுவரப்படுகிறது.

டீசரில் பைக் நிற்கும் விதத்தை வைத்துப் பார்த்தால், இது செயல்படுதிறன்மிக்க எலெக்ட்ரிக் பைக் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவோர் நிறுவனத்தில் உருவாக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு EX அல்லது 2S என பெயர் சூட்டப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படலாம்.
பைக்கில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதை தற்போதைய டீசரில் பார்க்க முடிகிறது. அதேபோல், சக்கரங்கள் இரண்டிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது போலவும் டீசரில் தெரிகிறது. இத்தகைய அம்சங்கள் உடன் உருவாக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலையை ரூ.1.50 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். இந்த எலெக்ட்ரிக் பைக் சிலமுறை சோதனை ஓட்டங்களின் போதும் பொது சாலையில் அடையாளம் காணப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான மார்க்கெட் இப்போதுதான் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக களமிறக்கப்படும் புதிய அவோர் எலெக்ட்ரிக் பைக் ஆனது விற்பனையில் ஒபென் ரோர் மற்றும் ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications
