260 கிமீ ரேஞ்ச்... ரூ.1.25 லட்சத்தில் Avore EX எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!

இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் இதுவரை ஸ்கூட்டர்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், சமீப காலமாக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவிலும் போட்டி வேகமெடுத்து வருகிறது. ரிவோல்ட், ஓபன், ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ், டார்க் போன்ற நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தின. இந்த வரிசையில், குஜராத்தைச் சேர்ந்த Avore Electric நிறுவனமும் சேர்ந்துள்ளது. இன்று தனது EX என்ற பிராண்டில் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய அவோர் EX வரிசையில் EX 2S, EX 2 மற்றும் EX 1 என மூன்று வேரியண்ட்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.1.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என்ற ஆரம்ப விலையில் 160 கிமீ முதல் 260 கிமீ வரை IDC சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் கொண்டதாகவும், 114 கிமீ/மணி வரை உச்ச வேகம் செல்லும் திறன் வாய்ந்ததாக இந்த எலெக்ட்ரிக் பைக் வந்துள்ளது. மேலும், 1500W ஆன்போர்டு ஃபாஸ்ட் சார்ஜர், 250Nm டார்க் வழங்கும் மின் மோட்டார் மற்றும் முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியற்றுடன் இந்த புதிய மின்சார பைக் வரிசை இந்தியாவில் களமிறங்கி உள்ளது.

Avore EX Series EV Bike Launch

இந்திய தொழில்நுட்பத்தில் உருவான பைக்!

இந்த பைக்குகள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளாக அகமதாபாத்தில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் (BMS), பேட்டரி பேக், மின் மோட்டார், மோட்டார் கண்ட்ரோலர், DC-DC கன்வெர்ட்டர், ஆன்போர்டு சார்ஜர், டிஸ்ப்ளே, ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட முக்கிய அமைப்புகளை நிறுவனமே சொந்தமாக உருவாக்கியுள்ளது. மேலும், இதுவரை 120-க்கும் மேற்பட்ட அறிவுசார் உரிமை (IP) விண்ணப்பங்களையும் தாக்கல் செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Variant Battery IDC Range Top Speed Ex-showroom Price
EX1 3.24 kWh 160 km 100 kmph ₹1.24 lakh
EX2 5.0 kWh 255 km 100 kmph ₹1.59 lakh
EX2S 5.0 kWh 260 km 114 kmph ₹1.99 lakh

டிசைன்

Avore EX Series எலெக்ட்ரிக் பைக்குகள் முதல் பார்வையிலேயே நவீன டிசைனில் கவர்ந்து இழுக்கிறது. எலக்ட்ரிக் வாகனம் என்ற தோற்றத்தை விட, பாரம்பரிய பெட்ரோல் மோட்டார்சைக்கிள் தோற்றத்தையே மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், LED DRL, கம்பீரமான டேங்க் வடிவமைப்பு, ஸ்போர்ட்டியான பின்புற வடிவமைப்பு, அலாய் வீல்கள், டூயல்-டோன் பெயிண்ட் மற்றும் தரமான ஃபினிஷிங்குடன் தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. குறிப்பாக, EX2S மற்றும் EX2 வேரியண்ட்களில் டூயல்-டோன் நிறங்கள் வழங்கப்படுகின்றன. EX1 மாடலில் சிங்கிள்-டோன் வண்ணத் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சிறப்பம்சம்

EX Series எலெக்ட்ரிக் பைக்கின் மூன்று வேரியண்ட்டுகளிலுமே முழுவதும் Rare-Earth Free Permanent Magnet Synchronous Motor (PMSM) பயன்படுத்தப்பட்டுள்ளது. வேரியண்ட்களைப் பொறுத்து 7.5 kW முதல் 10.5 kW வரை அதிகபட்ச பவர் கிடைக்கிறது. அதேசமயம், மூன்று வேரியண்ட்களிலும் 250Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. நகரப் போக்குவரத்திலும், நெடுஞ்சாலை பயணங்களிலும் சிறந்த செயல்திறனை வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. EX1 மற்றும் EX2 மாடல்களின் உச்ச வேகம் மணிக்கு 100 கிமீ என்றும் EX2S மாடல் அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வரையிலான வேகம் செல்லும்.

ரேஞ்ச்

Avore EX Series-ன் மிகப்பெரிய ஹைலைட் அதன் ரேஞ்ச்தான். அடிப்படை EX1 வேரியண்ட்டானது அதிகபட்சமாக 160 கிமீ IDC ரேஞ்ச் வழங்குகிறது. EX2 மாடல் 255 கிமீ தூரம் வரையிலும், EX2S மாடல் அதிகபட்சமாக 260 கிமீ (IDC சான்றுபடி) ரேஞ்ச் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. EX1 மாடலில் 3.24 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ள நிலையில், EX2 மற்றும் EX2S மாடல்களில் 5 kWh பேட்டரி இடம்பெற்றுள்ளது.

வீட்டிலேயே ஃபாஸ்ட் சார்ஜிங்!

இந்த பைக்கின் மற்றொரு முக்கிய பலம் அதன் சார்ஜிங் வசதி. மூன்று வேரியண்ட்களிலும் 1500W ஆன்போர்டு ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 5A அல்லது 15A வீட்டு மின் சாக்கெட்டிலும் நேரடியாக சார்ஜ் செய்ய முடியும். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 20 முதல் 80 சதவீதம் வரை சுமார் 2 மணி நேரத்திலும், 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் வரையிலும் பிடிக்கும்.

Feature Details
Motor Rare-Earth Free PMSM Motor
Peak Wheel Torque 250 Nm
Charging 1500W On-board Fast Charger
Charging Time 20-80%: 2 hrs | Full Charge: 4 hrs
Operating System AVORE Sense OS with Synapse AI
Ride Features Performance Mode, Manual Gear Mode, Park Assist
Warranty 5 Years / 60,000 km (Battery)
Safety Standards AIS-156 & AIS-038 Certified

அம்சங்கள்... AI முதல் Park Assist வரை!

Avore EX Series வெறும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மட்டுமல்ல; இது மென்பொருள் (Software) சார்ந்த பல புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மோட்டார்சைக்கிள் ஆக வந்துள்ளது. தினசரி பயணத்தை எளிதாக்குவதோடு, வாகனத்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் பல அம்சங்களை நிறுவனம் இதில் வழங்கியுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள AVORE Sense Operating System இந்த மோட்டார்சைக்கிளின் மைய கட்டுப்பாட்டு மென்பொருளாக செயல்படுகிறது. பேட்டரி, மோட்டார், ரைடிங் மோடுகள், வாகனத்தின் பல்வேறு மின்னணு அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சீரான செயல்திறனை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் வழங்கப்பட்டுள்ள Avore Synapse AI செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பயனர் ஓட்டும் முறையை (Riding Pattern) பகுப்பாய்வு செய்து, ஆற்றல் பயன்பாட்டை மேம்படுத்தவும், பேட்டரி திறனை திறமையாக பயன்படுத்தவும் இது உதவுகிறது.

அதேபோல், Syft Manual Gear Mode மூலம் வழக்கமான பெட்ரோல் பைக்கை ஓட்டும் அனுபவத்தைப் போன்ற உணர்வை பெற முடியும். உண்மையில் கியர்கள் இல்லாவிட்டாலும், கியர் மாற்றுவது போன்ற அனுபவத்தை மென்பொருள் மூலம் உருவாக்குகிறது.

நகரங்களில் பார்க்கிங் செய்யும் போது மிகவும் பயனுள்ள அம்சமாக Park Assist (PAM+) வழங்கப்பட்டுள்ளது. குறுகிய இடங்களில் பைக்கை முன்னோக்கி அல்லது பின்னோக்கி மெதுவாக நகர்த்துவதற்கு இந்த வசதி உதவுகிறது. குறிப்பாக அதிக எடை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை கையாளும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாதுகாப்பு மற்றும் வாரண்டி

Avore நிறுவனம் இந்த பைக்கை இந்திய சாலை நிலைகளை கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ளதாக கூறுகிறது. EX Series, AIS-156 மற்றும் AIS-038 பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரி NATRAX மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், Battery Management System (BMS)-க்கு ICAT அங்கீகாரமும் கிடைத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 5 ஆண்டுகள் அல்லது 60,000 கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் தகவல்படி, இந்த பைக்குகள் 1,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலை சோதனை மற்றும் 2,500 மணி நேர டைனமோமீட்டர் (Dyno) சோதனை ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்த பிறகே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விலை மற்றும் வேரியண்ட்கள்

Avore EX Series, EX1, EX2 மற்றும் EX2S என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் ரூ.1.24 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து தொடங்குகிறது. இந்த அறிமுக விலைகள் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன் பிறகு ஒவ்வொரு வேரியண்டின் விலையும் ரூ.10,000 வரை அதிகரிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.799 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆரம்பத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் விற்பனை தொடங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக தென்னிந்தியா மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். டெலிவரிகள் சுமார் இரண்டு மாதங்களில் தொடங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

Avore EX Series-ன் வருகை, இந்திய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 160 முதல் 260 கிமீ வரை IDC ரேஞ்ச், 1500W ஆன்போர்டு ஃபாஸ்ட் சார்ஜர், 250Nm டார்க் கொண்ட மின் மோட்டார்-பேட்டரி பேக், AI அடிப்படையிலான மென்பொருள் அம்சங்கள் மற்றும் முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவை இதன் மிகப்பெரிய பலமாக இருக்கின்றன.

அதேநேரத்தில், Avore ஒரு புதிய பிராண்டாக இருப்பதால், அதன் விற்பனை மற்றும் சேவை வலையமைப்பு, நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றை நிரூபிக்க வேண்டிய சவாலும் உள்ளது. அந்த சவாலை வெற்றிகரமாக சமாளித்தால், Revolt, Oben, Ola Roadster X போன்ற மாடல்களுக்கு Avore EX Series ஒரு வலுவான மாற்று தேர்வாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Article Published On: Tuesday, July 28, 2026, 18:07 [IST]
English summary
Avore ex series electric bike launched india price range features
மேலும்... #electric bike #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out