கேமரா கண்களில் சிக்கிய பஜாஜ் அட்வென்ச்சர் பைக்: புதிய தகவல்கள்

இந்தியாவில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிரிவில் களமிறங்க தயாராகி வரும் பஜாஜ் நிறுவனத்தின் புதிய பைக் மீண்டும் சோதனை செய்யப்படுவது கேமராவில் சிக்கியுள்ளது. இந்த முறை வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் மூலம் பைக்கின் எஞ்சின், TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்விட்ச்கியர் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

பஜாஜ் நிறுவனம் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் முதல்முறையாக களமிறங்க உள்ளது. பஜாஜ் பைக் பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய பைக் மாடல் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்பதால், எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அண்மையில் கிடைத்த சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களில் எஞ்சின் சிலிண்டரில் காணப்படும் குளிர்ச்சியூட்டும் துடுப்பு போன்ற அமைப்பு மற்றும் பெரிய ரேடியேட்டர் இல்லாதது, இது லிக்விட்-கூல்டு இன்ஜினுக்கு பதிலாக ஏர்/ஆயில்-கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான பல்சர் N250 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 249.07cc சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த எஞ்சின் 24.5 பிஎஸ் பவரையும் 21.5 என்எம் டார்க்கையும் வழங்கும். இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனம் அட்வென்ச்சர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எஞ்சின் டியூனிங் மற்றும் கியர் ரேஷியோவில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்தால், அதிக வேகத்தை விட குறைந்த மற்றும் நடுத்தர எஞ்சின் சுழல்வேகத்தில் சிறப்பான டார்க்கை வழங்கும் வகையில் இந்த பைக் வரும்.

புதிய பஜாஜ் அட்வென்ச்சர் பைக்கின் மற்றொரு முக்கிய அம்சமாக முழுமையான டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருப்பது ஸ்பை படங்களின் மூலமாக தெரியவந்துள்ளது. இதன்மூலமாக வேகம், ஆர்பிஎம், எரிபொருள் அளவு உள்ளிட்ட வழக்கமான தகவல்களுடன், கனெக்டிவிட்டி மற்றும் டர்ன் பை டரன் நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

பஜாஜ் தனது புதிய தலைமுறை பல்சர் மாடல்களில் அதிக தொழில்நுட்ப வசதிகளை வழங்கி வரும் நிலையில், இந்த அட்வென்ச்சர் பைக்கிலும் அதே அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். ஸ்பை படங்களில் வழக்கமான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பு தாத்பரியங்களை கொண்டிருப்பது தெரிகிறது. முன்புறத்தில் உயரமான மட்கார்டு அமைப்பு, உயரமான ஹேண்டில்பார் மற்றும் நீளமான ஒற்றை இருக்கை அமைப்பு ஆகியவை இதில் காணப்படுகின்றன.

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் ரைடிங் பொசிஷன் இருக்கும். முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஸ்போக் வீல்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய பஜாஜ் அட்வென்ச்சர் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இடம்பெறலாம்.

இந்த புதிய பஜாஜ் அட்வென்ச்சர் பைக் டிரெக்கர் (Trekker) என்ற பெயரில் வரலாம் என்று தெரிகிறது. ஆனால், பஜாஜ் நிறுவனம் இதுவரை புதிய அட்வென்ச்சர் பைக்கின் பெயர், விலை அல்லது முழுமையான தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

புதிய பஜாஜ் அட்வென்ச்சர் பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V, கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 போன்ற மாடல்களுக்கு இது போட்டியாக அமைய வாய்ப்புள்ளது. இந்த பைக் குறித்த யூகத்தின் அடிப்படையிலான தகவல்கள் மட்டுமே தற்போது உள்ளன. மிக விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Images: xpulse_trails_1729@Instagram

Article Published On: Monday, August 24, 2026, 12:19 [IST]
English summary
Bajaj adventure bike spied 249cc tft display trekker
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out