ஓலாவின் ஆட்டத்தை முடிக்க வரும் பஜாஜ் ஸ்கூட்டர்... இந்த பொங்கலுக்கு ஒன்றை வாங்கிவிட வேண்டியதுதான்!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் புதிய தலைமுறை சேத்தக் (Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக விரைவில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்தியாவில் பலமுறை சோதனை ஓட்டங்களில் காணப்பட்ட புதிய சேத்தக், அதன் அடையாளமான பழமையான சேத்தக் ஸ்கூட்டர் வடிவமைப்பைத் தக்கவைத்துக்கொண்டு, சில புதிய மாற்றங்களுடன் வரவுள்ளது.

இதன் அறிமுக தேதி எப்போது என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு இந்த புதிய தலைமுறை சேத்தக் அறிமுகமாகவுள்ளதாக தற்போது பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. டீசர் ஒன்றின் மூலமாக இதனை அதிகாரப்பூர்வமாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.

new bajaj chetak ev electric scooter teaser

இந்த டீசரில், புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பின்பக்க எல்இடி டெயில் விளக்குகள் காட்டப்பட்டுள்ளன. தற்போதைய சேத்தக் ஸ்கூட்டர்களில் இல்லாத இந்த W-வடிவ டெயில் லைட் வடிவமைப்பு, ஒருங்கிணைந்த எல்இடி டர்ன் இன்டிகேட்டர்களுடன் ஸ்கூட்டருக்கு தனித்துவமான அழகியலை வழங்குகிறது. டெயில் லைட் பகுதிக்கு மேலே 'சேத்தக்' பேட்ஜ் தெளிவாகக் காணப்படுகிறது.

இது தற்போதைய மாடல்களில் உள்ள தனித்தனி விளக்கு அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதற்கு முன் வெளியான ஸ்பை படங்களில் புதிய எல்இடி ஹெட்லைட் வடிவமைப்பும், சேத்தக் லோகோவிற்கு பதிலாக எல்இடி ஹெட்லைட்டில் 'சேத்தக்' எழுத்துக்களும் இடம்பெறும் என்பதை அறிய முடிந்தது. பின்பக்கத்தில் டயர் ஹக்கர், அத்துடன் மெல்லிய ORVM ஸ்டால்க்குகள் உள்ளிட்ட மேம்பாடுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

new bajaj chetak ev electric scooter teaser

தற்போது பஜாஜ் சேத்தக் 30-சீரிஸ் மற்றும் 35-சீரிஸ் என இரண்டு முக்கிய மாடல்களில் கிடைக்கிறது. 30-சீரிஸ் 3.0 kWh பேட்டரி பேக்குடன் ஒரு வேரியண்ட்டிலும் (3001), 35-சீரிஸ் பெரிய 3.5 kWh பேட்டரி பேக்குடன் மூன்று வேரியண்ட்களிலும் (3501, 3502, 3503) கிடைக்கின்றன. பெரிய பேட்டரி அதிக ரேஞ்சை வழங்குகிறது.

வரவிருக்கும் புதிய சேத்தக் இ-ஸ்கூட்டரில், விலைமிக்க டாப் வேரியண்ட்களில் TFT டச் ஸ்கிரீன் மற்றும் குறைந்த விலை வேரியண்ட்களில் எளிமையான எல்சிடி திரை எதிர்பார்க்கப்படுகிறது. பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, தற்போதைய மாடல்களைப் போன்ற 3 kWh மற்றும் 3.5 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் அப்படியே எதிர்பார்க்கப்படுகின்றன.

சமீபத்திய ஸ்பை படங்களில், புதிய சேத்தக் ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போதைய சேத்தக் ஸ்கூட்டர்களில் மத்தியில் மிட்-மவுண்டட் எலக்ட்ரிக் மோட்டார் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முழு விவரங்கள் ஜனவரி 14 அன்று ஸ்கூட்டர் வெளியாகும் போது தெரியவரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் பஜாஜ் சேத்தக் தற்போது கணிசமான சந்தைப் பங்கைப் கொண்டுள்ளது. புதிய சேத்தக்கின் வெளியீடு, டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) போன்ற போட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுவதுடன், பஜாஜின் சந்தைப் பங்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொங்கல் பண்டிகையின் போது அறிமுகமாகுவதால், துவக்கத்திலேயே புதிய சேத்தக்கிற்கு புக்கிங் (Booking) குவியும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 8, 2026, 11:17 [IST]
English summary
Bajaj auto announces launch date of new chetak ev electric scooter check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+