ஸ்கூட்டர் விலை ஏற்கனவே 1 லட்ச ரூபா கூட இல்ல... இதுல முதல் 10 ஆயிரம் பேருக்கு சலுகை வேற!!

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited), தனது புதிய சேத்தக் சி25 (Chetak C25) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள ஷோரூம்களில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. பொங்கல் (Pongal) பண்டிகையை டார்க்கெட் செய்து வெளியிடப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு, அறிமுகமானதில் இருந்து சந்தைகளில் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வரவேற்பை மேலும் அதிகரிக்கும் விதமாக சிறப்பு சலுகையை பஜாஜ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. சேத்தக் சி25 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.91,399 ஆகும். எனினும், முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.4,299 பணம் தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த இ-ஸ்கூட்டர் ரூ.87,100 என்ற குறைந்த விலையில் கிடைக்கும்.

bajaj auto announces surprise offer for new chetak c25 electric scooter

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனைகளும் டெலிவிரிகளும் முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. அன்றாட நகரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சேத்தக் சி25, இளமையான மற்றும் நவீனமான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், பழைய காலத்தில் இருந்து சேத்தக் ஸ்கூட்டர்களுக்கே உண்டான உறுதி, வலிமை மற்றும் நம்பகத்தன்மை போன்ற முக்கிய பாரம்பரிய மதிப்புகளை உறுதியாகப் பின்பற்றுகிறது.

இதன் பிரீமியம் தரத்திலான உலோக உடல், மென்மையான தனித்துவமான கட்டுமானம் மற்றும் துடிப்பான கலர் ஆப்ஷன்கள் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கின்றன. புதிய சி25-இன் கச்சிதமான வடிவமைப்பு மற்றும் சுறுசுறுப்பான ஹேண்ட்லிங், நெரிசல் மிகுந்த நகரப் போக்குவரத்து சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைகின்றன. 2.5 kWh பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒருமுறை முழுவதாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 113 கி.மீ வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

bajaj auto announces surprise offer for new chetak c25 electric scooter

இது தினசரி பயணங்களுக்கும், குறுகிய நகரப் பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும். புதிய சேத்தக் சி25 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள ஹப் மோட்டார் 2.2 kW (2.9 bhp) ஆற்றலை உற்பத்தி செய்கிறது; இதன் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 55 கி.மீ ஆகும். இருவருடன் 19 சதவீத சாய்வான ஏற்றத்திலும் இது எளிதாகப் பயணிக்கும்.

107 கிலோ எடையுள்ள இந்த இ-ஸ்கூட்டரின் இருக்கை ஆனது தரையில் இருந்து 763 மிமீ உயரத்தில் உள்ளது. இருக்கைக்கு அடியில் 25 லிட்டர் பூட் இடவசதி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பார்க் செய்த பின்னரும் பயணிகளுக்கு வெளிச்சம் காட்டும் ஹெட்லைட் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற அம்சங்கள் இதன் அன்றாட நடைமுறைத்தன்மையை அதிகரிக்கின்றன.

bajaj auto announces surprise offer for new chetak c25 electric scooter

750 வாட் ஆஃப்-போர்டு சார்ஜர் மூலம் பேட்டரியை 2 மணிநேரம் 25 நிமிடங்களில் 0- 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம்; சுமார் நான்கு மணிநேரத்தில் இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் திரை போன்ற புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பை புதிய சி25 கொண்டுள்ளது.

சேத்தக் வரிசையில் உள்ள 35 மற்றும் 30 வேரியண்ட்களுக்கு இணையான அம்சங்களை கொண்டிருக்கும் புதிய சேத்தக் சி25 ஆனது விற்பனையில் டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter), ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X), ஹீரோ விடா விஎக்ஸ்2 (Hero Vida VX2) மற்றும் மிக சமீபத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆம்பியர் மேக்னஸ் ஜி மேக்ஸ் (Ampere Magnus G Max) போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நகர்ப்புறங்களில் எளிதான மற்றும் சுதந்திரமான எலெக்ட்ரிக் வாகன பயணத்தை விரும்புவோருக்கு சி25-ஐ அணுகக்கூடியதாக மாற்றுவதற்காகவே இந்த அறிமுக சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பஜாஜ் சேத்தக் வரிசையில் மிகவும் மலிவு விலையுள்ள இ-ஸ்கூட்டர் இதுவாகும். இதன் மூலம், இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 19, 2026, 21:02 [IST]
English summary
Bajaj auto announces surprise early bird offer for new chetak c25 for first 10000 customers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X