நேற்று வரை இந்த பைக்கை வாங்கியவர்களுக்கு இப்போ விலையை கேட்டால் பொறாமையா இருக்கும்! பஜாஜின் அதிரடி நடவடிக்கை!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் 'டோமினார் 400' (Dominar 400) பைக்கை 350சிசி என்ஜின் உடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய அரசாங்கம் 400சிசி பைக்குகளுக்கான ஜிஎஸ்டி (GST)-ஐ 28%-இல் இருந்து 40% ஆக அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை பஜாஜ் கையில் எடுத்துள்ளது. புதிய டோமினார் 400 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம் 350சிசி மற்றும் அதற்கு கீழான பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை 28%-இல் இருந்து 18% ஆக குறைத்தும், 350சிசி-க்கு மேலான பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை 28%-இல் இருந்து 40% ஆக அதிகரித்தும் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, பைக் நிறுவனங்கள் தங்களது 400சிசி பைக்குகளை 350சிசி-க்கு மாற்றி வருகின்றன.

bajaj auto introduces dominar 400 with new 350cc engine

அதன்படி, டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் 400சிசி பைக்குகளை சமீபத்தில் புதிய 350சிசி என்ஜின் உடன் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், இந்தியாவில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் அதன் டோமினார் 400 பைக்கை புதிய 350சிசி என்ஜின் உடன் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

350சிசி என்ஜின் உடனான புதிய டோமினார் 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2.04 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இந்த பைக்கின் முந்தைய விலையை காட்டிலும் ரூ.37,000 குறைவாகும். டிரையம்ப் பைக்குகளை போலவே, டோமினார் 400 பைக்கிலும் என்ஜினின் போர் (Bore)-இல் எந்த மாற்றமும் செய்யாமல், ஸ்ட்ரோக்கின் நீளத்தை குறைத்து புதிய 349சிசி என்ஜினாக மாற்றியுள்ளனர்.

bajaj auto introduces dominar 400 with new 350cc engine

டிரையம்ப் பைக்குகளின் என்ஜினில் இந்த மாற்றத்தால் என்ஜின் பவர் சற்றே குறைந்திருந்தாலும், டார்க் திறன் 5 என்.எம் அளவிற்கு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் பஜாஜ் டோமினார் 400 பைக் விஷயத்தில் என்ஜின் பவரில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், 0.6 எச்பி அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை நிச்சயமாக டோமினார் 400 பக்கம் ஈர்க்கும்.

இருப்பினும், டோமினார் 400 பைக்கின் என்ஜின் டார்க் திறன் 1.8 என்.எம் குறைந்துள்ளது. டோமினார் 400 பைக்கின் புதிய 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 40.6 எச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 33.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜினின் அளவு சற்று சிறியதாகி உள்ளதால், முன்பை விட கூடுதலாக 200 ஆர்பிஎம் வேகத்தில் என்ஜின் இயங்கினால் தான் அதிகப்பட்ச எச்பி ஆற்றலை எட்டும். அதாவது, கூடுதலாக ஆக்ஸலரேஷன் (Acceleration) கொடுக்க வேண்டும். அதேபோல், அதிகப்பட்ச டார்க் திறனை எட்ட 1000 ஆர்பிஎம் வேகத்தில் என்ஜின் இயங்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்ஜின் மாற்றத்தால், டோமினார் 400 பைக்கின் எடை 3 கிலோ வரையில் குறைந்துள்ளது. தற்போது இந்த பைக்கின் எடை 190 கிலோ ஆகும். முன்பு, டோமினார் 400 பைக்கில் கேடிஎம் (KTM) நிறுவனத்தின் 373சிசி என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த என்ஜினில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டு டோமினார் 400 பைக்கில் வழங்கப்பட்டுள்ளதா அல்லது முற்றிலுமாக ஒரு புதிய என்ஜினை உருவாக்கி பஜாஜ் வழங்கியுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களை போன்று, புதிய 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டு இருப்பினும், டோமினார் 400 பைக்கின் பெயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.37,000 விலை குறைந்துள்ளதால், டோமினார் 250 பைக்கை விட வெறும் ரூ.26,000 கூடுதலான விலையில் டோமினார் 400 கிடைக்கிறது. இதேபோன்று, விரைவில் பல்சர் என்.எஸ்400இசட் (Pulsar NS400Z) பைக்கின் என்ஜினையும் பஜாஜ் விரைவில் மாற்றும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2026, 18:59 [IST]
English summary
Bajaj auto introduces dominar 400 with new 350cc engine check all details here
மேலும்... #bajaj auto #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+