இதைவிட கம்மி விலையில் இந்த பல்சர் பைக்கை தர முடியாது... பஜாஜின் புதிய முயற்சி!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் என்160 பைக்கில் புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக, விலைமிக்க ஹார்ட்வேர் பாகங்களை இந்தியாவின் 160சிசி பைக்குகள் பிரிவிற்கு பஜாஜ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ரூ.1.22 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பல்சர் என்160 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பல்சர் என்160 பைக்கில் ஸ்போர்டியான பெர்ஃபார்மன்ஸ், நம்பிக்கையான பிரேக் சிஸ்டம் மற்றும் பிரீமியம் தரத்திலான ஸ்டைல் உள்ளிட்டவற்றை சேர்க்கும் விதமாக இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும் பல்சர் என்160 பைக்கின் ரூ.1.16 லட்சம் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லை.

new variant in bajaj pulsar n160

மார்க்கெட்டில், சிங்கிள்-சேனல் ABS மற்றும் டபுள்-சேனல் ABS என இரு விதமான சஸ்பென்ஷன் ஆப்ஷன்களில் பல்சர் என்160 விற்பனை செய்யப்படுகிறது. மேலே கூறப்பட்ட ஆரம்ப விலையான ரூ.1.16 லட்சத்தில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் இந்த பைக் கிடைக்கும். டபுள்-சேனல் ABS உடன் இரண்டாக பிளவுப்பட்ட அல்லது பிளவுப்படாத இருக்கை உடன் இந்த பைக் கிடைக்கிறது.

இருக்கையை இரண்டாக பிளவுப்பட்டதாக வாங்கினால் விலை கொஞ்சம் அதிகம் ஆகும். இருக்கையை இரண்டாக பிளவுப்பட்டதாக பெறும்போது சஸ்பென்ஷனுக்கு பிரீமியம் தரத்திலான USD ஃபோர்க்குகள் கிடைக்கும். இத்தகைய சஸ்பென்ஷன் செட்-அப்பை பெற பல்சர் என்160 பைக்கில் இருக்கையை இரண்டாக பிளவுப்பட்டதாக வாங்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், இனி சிங்கிள்-பீஸில் இருக்கையை வாங்கினாலும் யுஎஸ்டி சஸ்பென்ஷனை பெறலாம்.

new variant in bajaj pulsar n160

இதற்காக புதியதாக டபுள்-சேனல் USD என்கிற பெயரில் புதிய வேரியண்ட் பல்சர் என்160 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.22 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, குறைந்த விலையில் இந்த பல்சர் பைக்கை USD சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் உடன் வாங்கலாம்.

பல்சர் என்160 பைக்கின் புதிய டபுள்-சேனல் USD வேரியண்ட்டின் தோற்றத்தில் முதலில் நம்மை வசீகரிப்பது என்னவென்றால், தங்க நிறத்திலான USD சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் ஆகும். இது விலை குறைவான, வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளுக்கு பதிலாக வழங்கப்படும். மேலும், ஏற்கனவே கூறியதுபோல் டபுள்-சேனல் ஆண்டி-பிரேக் சிஸ்டத்துடன் இந்த வேரியண்ட்டை பெறலாம்.

இவற்றுடன், உதவி & ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இந்த பைக்கில் கிடைக்கும். இது, பிரேக்கை மிகவும் அதிகமாக அழுத்தும்போது பைக்கின் பின் சக்கரத்திற்கு சாலையில் பிடிமானம் இல்லாமல் போகும் சூழலை தவிர்த்து, மென்மையாக கியர்களை மாற்ற உதவும். தொழிற்நுட்ப அம்சங்களாக எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்கிங் வசதி உள்ளிட்டவை என்160 பைக்கில் வழங்கப்படுகின்றன.

பல்சர் என்160 பைக்கின் புதிய டபுள்-சேனல் USD வேரியண்ட்டில் இருக்கை இரண்டாக பிளவுப்பட்டதாக இல்லாமல், சிங்கிள்-பீஸில் கிடைக்கும். உண்மையில், பைக்குகளில் இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கைகள் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தாலும், சிங்கிள்-பீஸ் இருக்கை தான் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். இந்த புதிய வேரியண்ட்டை நான்கு விதமான கலர் ஆப்ஷன்களுள் ஒன்றில் வாங்கலாம் என பஜாஜ் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டைலான மற்றும் பிரீமியம் தரத்தில் செயல்படும் யுஎஸ்டி சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் உடன் பஜாஜ் பல்சர் என்160 பைக்கை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த புதிய வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். சிங்கிள்-பீஸ் இருக்கை உடன் பைக்குகளை விரும்புபவர்களையும் இந்த புதிய வேரியண்ட் ஈர்க்கிறது. பல்சர் என்160 பைக்கின் மற்ற வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில் என்ஜின் சிஸ்டத்தில் இந்த புதிய வேரியண்ட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்.

Article Published On: Thursday, May 21, 2026, 17:01 [IST]
English summary
Bajaj auto introduces new variant in pulsar n160 in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+