இந்த காலத்திலும் 1 லட்ச ரூபாய்க்குள் பல்சர் பைக்கா!! பஜாஜ் ஷோரூம் எல்லாம் இப்பவே நிரம்ப துவங்கிடுச்சு!
உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited), தனது மிகவும் பிரபலமான பல்சர் 125 பைக்கிற்கு ஸ்டைலான மேம்பாடுகளை அறிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் துணிச்சலான (Definitely Daring) அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி இண்டிகேட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எல்இடி லைட்டிங் சேர்க்கப்பட்டதன் மூலம், மோட்டார்சைக்கிளின் தோற்றம் மேம்பட்டுள்ளதுடன், ஓட்டும் ஓட்டுநரின் பார்வைத் தெளிவும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், புதிய பல்சர் 125 பைக்கில் புதுப்பிக்கப்பட்ட வண்ணங்கள் மற்றும் கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் கார்பன் ஃபைபர் சிங்கிள் சீட் மற்றும் கார்பன் ஃபைபர் இரட்டை சீட் என இரு வேரியண்ட்களுக்கும் புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

கருப்பு கிரே (Black Grey), கருப்பு ரேசிங் ரெட் (Black Racing Red), கருப்பு சியான் ப்ளூ (Black Cyan Blue) மற்றும் டேன் பீஜ் உடன் ரேசிங் ரெட் (Racing Red with Tan Beige) ஆகியவை புதிய கலர் ஆப்ஷன்களில் அடங்குகின்றன. இவை பல்சர் 125 பைக்கின் ஸ்போர்ட்டி தன்மையையும், காட்சி அழகையும் மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட பல்சர் 125, நாடு முழுவதும் உள்ள பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்க துவங்கியுள்ளன. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 2026ஆம் ஆண்டு பைக்குகளை இந்திய சந்தையில் வெளியிட்டு வரும் நிலையில், பல்சர் 125-இன் புதிய பதிப்பை ரூ.89,910 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக, பல்சர் 125 பைக்கில் இப்போது எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட பல்சர் 125 பைக் சிங்கிள் சீட் மற்றும் இரண்டாக பிரிக்கப்பட்ட ஸ்பிளிட் சீட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேற்கூறப்பட்ட ரூ.89,910 ஆனது சிங்கிள் சீட் வேரியண்ட்டின் விலை ஆகும். ஸ்பிளிட் சீட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.92,046 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய பல்சர் 125 பைக்கை விட இந்த இரண்டு வேரியண்ட்களின் விலைகளும் ரூ.2,400 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், விலை குறைவான பஜாஜ் பல்சர் 125 நியான் (Neon) வேரியண்டிற்கு மேற்கூறப்பட்ட மேம்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பல்சர் 125 பைக்கில் மிக முக்கியமான மேம்பாடு, புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இவை அதிக வெளிச்சத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹெட்லைட் வடிவமைப்பு, கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பல்சர் 150 பைக்கில் நாம் கண்டது போலவே உள்ளது. இயந்திர ரீதியாக, இந்த மோட்டார்சைக்கிள் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இதில் அதே நிலையான டெலஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பின்பக்கத்திலும் தொடர்கின்றன. மேலும், புதிய பல்சர் 125 பைக்கிலும் 17 அங்குல அலாய் சக்கரங்களே வழங்கப்பட்டுள்ளன.
பிரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. இந்த 125சிசி பல்சர் பைக் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரையையும் கொண்டுள்ளது. இது பல இணைப்பு அம்சங்களுக்கு வழி வகுக்கிறது. மேலும், 2026 பஜாஜ் பல்சர் 125 பைக் அதே 124.4சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதுப்பிக்கப்பட்ட எல்இடி விளக்குகள், பல்சர் 125 பைக்கின் கவர்ச்சியான தோற்றத்துடனும் கம்பீரமான உடல் கோடுகளுடனும் இணைந்து, சாலையில் இயங்கும்போது பைக்கிற்கு மேலும் சிறப்பான ரைடிங் பொசிஷனை வழங்குகின்றன. அதேநேரம், இந்த மேம்பாடுகளுடன் சிறந்த செயல்திறன், அன்றாடப் பயன்பாட்டிற்கான வசதி மற்றும் தனித்துவமான ஸ்டைலிங் ஆகிய நிரூபிக்கப்பட்ட அம்சங்களை பல்சர் 125 தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









