ஹீரோ, ஹோண்டாவை விட மேட்-இன்-இந்தியா பஜாஜை விரும்பும் மக்கள்! கப்பல்களில் லட்சக்கணக்கில் செல்லும் பல்சர் பைக்ஸ்

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ததை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிகமாக வெளிநாடுகளுக்கு பஜாஜ் ஏற்றுமதி செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இதில், இருசக்கர வாகனங்கள் நம்பிக்கைக்கு உரியவைகளாக பஜாஜ் நிறுவனத்திற்கு விளங்குகின்றன. ஏனெனில், ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக இருசக்கர வாகனங்களை பஜாஜ் விற்பனை செய்கிறது.

bajaj auto april sales report

இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கு இணையான எண்ணிக்கையிலான பஜாஜ் இருசக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், புனேவில் உள்ள பஜாஜ் தொழிற்சாலை ஓய்வே இன்றி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 63 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் பஜாஜ் விற்பனை செய்துள்ளது.

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 615 இருசக்கர வாகனங்களை மட்டுமே உள்நாட்டு சந்தையில் பஜாஜ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, பஜாஜ் நிறுவனத்தின் உள்நாட்டு 2-வீலர்கள் விற்பனை 11% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் புது, புது பஜாஜ் பல்சர் (Pulsar) பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது இதற்கு காரணமாக இருக்கலாம்.

bajaj auto april sales report

ஏற்கனவே கூறியதுபோல், கடந்த ஏப்ரல் மாதத்தில், பஜாஜ் உள்நாட்டில் விற்பனை செய்ததை காட்டிலும் அதிக 2-வீலர்களை வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பஜாஜ் 2-வீலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 890 யூனிட்கள் ஆகும்.

அதாவது, உள்நாட்டில் விற்பனை செய்ததை காட்டிலும் கூடுதலாக 19 ஆயிரத்து 827 இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு பஜாஜ் ஏற்றுமதி செய்துள்ளது. அதேநேரம், 2025 ஏப்ரலில் வெறும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 322 பஜாஜ் 2-வீலர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன; அதாவது 2026 ஏப்ரலை காட்டிலும் சுமார் 1 லட்சம் யூனிட்கள் குறைவாக.

உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து பார்த்தால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 953 இருசக்கர வாகனங்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 3-சக்கர வாகனங்களை பொறுத்தவரையில், மொத்தம் 73 ஆயிரத்து 839 யூனிட்களை கடந்த மாதத்தில் பஜாஜ் விற்பனை செய்துள்ளது.

Segment April 2026 Sales April 2025 Sales YoY
2W Domestic 2,10,063 1,88,615 +11%
2W Exports 2,29,890 1,29,322 +78%
2W Total 4,39,953 3,17,937 +38%
CV Domestic 38,147 32,000 +19%
CV Exports 35,692 15,873 +125%
CV Total 73,839 47,873 +54%
Total Domestic 2,48,210 2,20,615 +13%
Total Exports 2,65,582 1,45,195 +83%
Grand Total 5,13,792 3,65,810 +40%

இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை, 38 ஆயிரத்து 147 யூனிட்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 35 ஆயிரத்து 692 யூனிட்கள் ஆகும். அதாவது, 2-வீலர்களை போன்று பஜாஜின் 3-வீலர்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கு இணையாக வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், 2025 ஏப்ரலில் 15 ஆயிரத்து 873 யூனிட் பஜாஜ் 3-வீலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் என இரண்டையும் சேர்த்து கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 210 யூனிட் வாகனங்களை உள்நாட்டு சந்தையிலும், 2 லட்சத்து 65 ஆயிரத்து 582 யூனிட் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் பஜாஜ் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 5 லட்சத்து 13 ஆயிரத்து 792 யூனிட் வாகனங்களை கடந்த மாதத்தில் பஜாஜ் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2025 ஏப்ரலில் இந்த எண்ணிக்கை வெறும் 3 லட்சத்து 65 ஆயிரத்து 810 யூனிட்களாக மட்டுமே பதிவாகி இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்ததை காட்டிலும் வெளிநாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை பஜாஜ் ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இருந்து, ஒரு சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமாக பஜாஜ் வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக வளர முடியவில்லை என்றாலும், இவ்வாறு பல நாடுகளில் தனது வாகனங்களை விற்பனை செய்வது பஜாஜ் நிறுவனத்திற்கு பெரிதும் அனுகூலமாக இருக்கும்.

Article Published On: Tuesday, May 5, 2026, 10:46 [IST]
English summary
Bajaj auto sold more than 5 lakh vehicles in april 2026 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+