இனி வர போகும் பல்சர் பைக்குகளை யாரும் இப்படி எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க! தீபாவளி சமயத்தில் அறிமுகம்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான பைக் மாடல்களில் ஒன்றான பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) புதிய அவதாரத்தில் வரப்போகிறது. ஆம், பஜாஜ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'பல்சர் கிளாசிக்' (Pulsar Classic) பைக்குகளை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலோ சந்தைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தற்போதைய பல்சர் 125 மற்றும் பல்சர் 150 பைக் மாடல்களுக்குப் பதிலாக வரவிருக்கும் இந்த புதிய மாடல்களின் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே சாலைகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது பைக் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த அடுத்த தலைமுறை பல்சர் கிளாசிக் பைக்கு்கள் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட உள்ளன.

next-gen pulsar classic bikes

இது ஏதோ சாதாரண டிசைன் மாற்றம் மட்டுமல்ல, பைக்கின் முழு கட்டமைப்பையும் பஜாஜ் நிறுவனம் மாற்றியமைத்து வருகிறது என்பதை முன்னதாக வெளியான ஸ்பை படங்கள் உறுதிப்படுத்தி இருந்தன. இந்த புதிய பிளாட்பார்ம் பைக்கின் ரைடிங் மற்றும் ஹேண்ட்லிங்கை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தற்போதைய பல்சர் 125 மற்றும் பல்சர் 150 பைக்குகளில் இருக்கும் இரட்டை-ஷாக் (twin-shock) சஸ்பென்ஷனுக்கு பதிலாக, புதிய மாடல்களில் மோனோஷாக் (monoshock) ரியர் சஸ்பென்ஷன் செட்டப் வரப்போவது பைக் ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம், மாஸ் மாறாத அதே கம்பீரமான பல்சர் லுக்கை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

next-gen pulsar classic bikes

சோதனை ஓட்டத்தில் இருக்கும் பைக்குகள் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தாலும், அதன் கம்பீரமான தோற்றம் பல்சரின் பாரம்பரிய அடையாளத்தை அப்படியே தக்கவைத்துள்ளதை பார்க்க முடிகிறது. பல்சருக்கே உரித்தான மஸ்குலர் பெட்ரோல் டேங்க், ஸ்போர்ட்டியான வடிவமைப்பு மற்றும் ஆக்ரோஷமான லுக் ஆகியவை இதிலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

இதனுடன், கூர்மையான பாடி பேனல்கள், புதிய LED லைட்டிங் மற்றும் அட்டகாசமான கிராபிக்ஸ் ஆகியவை இந்த பைக்கை இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தமானதாக மாற்றப் போகிறது. மேலும், இந்த புதிய தலைமுறை பல்சர் பைக்குகளின் தொழிற்நுட்ப அம்சங்களும் உங்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.

இதில் முழு எல்இடி (Full-LED) விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை மற்றும் புளூடூத் கனெக்டிவிட்டி போன்ற நவீன அம்சங்கள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் (turn-by-turn navigation) போன்ற வசதிகளும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால், சந்தையில் இருக்கும் பிரீமியம் தரத்திலான மற்ற பைக்கிற்கு இந்த பல்சர் கிளாசிக் பைக் மாடல்கள் செம டஃப் கொடுக்கும் என்று நம்பலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பல்சர் பைக்குகளில் பஜாஜ் நிறுவனம் தற்போதைய 125சிசி மற்றும் 150சிசி என்ஜின் ஆப்ஷன்களையே தொடர்ந்து பயன்படுத்தும் எனத் தெரிகிறது. ஆனால், இந்த என்ஜின்கள் முன்பை விட அதிக மைலேஜ், சிறந்த செயல்திறன் மற்றும் குறைந்த மாசு உமிழ்வை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் இந்த மெகா அப்டேட், இந்திய பைக் சந்தையில் மீண்டும் ஒரு புதிய அலையை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Article Published On: Thursday, June 18, 2026, 17:13 [IST]
English summary
Bajaj auto working on next generation pulsar classic bikes expecting launch around diwali
மேலும்... #bajaj auto #pulsar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out