அடி மாட்டு விலையில் பஜாஜ் வெளியிட்ட புதிய பைக் மாடல்.. மைலேஜ் அள்ளுது!

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஒரு பைக்கின் விற்பனையை நிறுத்திவிட்டு, மற்றொரு பைக்கினை வெளியிட்டுள்ளது பஜாஜ். அவெஞ்சர் சீரிஸ் பைக்குகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும், மிகவும் ரிலாக்ஸ்டாக க்ரூஸ் செய்யும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வரும் உண்மையான க்ரூஸர் வகை பைக் பஜாஜ் அவெஞ்சர் தான். இரண்டு விதமான இன்ஜின்களுடன் இந்த பைக்கை விற்பனை செய்து வந்தது பஜாஜ்.

தற்போது அதில் ஒரு பைக்கின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தியிருக்கிறது. இதுவரை அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் மற்றும் அவெஞ்சர் 220 க்ரூஸ் என இரண்டு வகையான பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்து வந்தது. இதில் தற்போது அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் பைக் மாடலின் விற்பனையை பஜாஜ் நிறுத்தியுள்ளது. அதற்கு மாற்றாக பெரிய இன்ஜின் கொண்ட அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் (Avenger 220 Street) பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Bajaj Avenger 220 Street

இனி அவெஞ்சர் பைக்கை 220 ஸ்ட்ரீட் மற்றும் 220 க்ரூஸ் ஆகிய இரண்டு விடிவிலும் நாம் வாங்கலாம். அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் புதிய பைக் ஒன்றும் கிடையாது. முன்னேர இந்த பைக்கை இந்தியாவில் பஜாஜ் விற்பனை செய்துள்ளது. 2020ம் ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், ஆறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது இந்த பைக்.

220 க்ரூஸ் பைக் மாடலுக்குப் பயன்படுத்தப்படும் அதே பிளாட்ஃபார்மிலேயே 220 ஸ்ட்ரீட் பைக்கையும் பஜாஜ் உருவாக்கியிருக்கிறது. 220 க்ரூஸில் இருக்கும் அதே 220 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜினையே புதிய அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கிலும் பஜாஜ் கொடுத்துள்ளது. இந்த இன்ஜினானது 8,500 rpm-ல் 19 hp பவர் மற்றும் 7,000 rpm-ல் 17.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

Bajaj Avenger 220 Street

தற்போது விற்பனை நிறுத்தப்பட்ட அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் பைக்கின் இன்ஜினுடன் புதிய பைக்கின் இன்ஜினை ஒப்பிட்டுப் பார்ப்பது இன்னும் கொஞ்சம் தெளிவான பார்வையை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். 160 ஸ்ட்ரீட் பைக் மாடலில் 160.4 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த இன்ஜினானது 15 hp பவர் மற்றும் 13.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தது.

புதிய அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கினை தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் பஜாஜ் நிறுவனம் பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் விலை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது விற்பனையில் இருக்கும் அவெஞ்சர் 220 க்ரூஸ் மாடலை விட குறைவான விலையிலேயே புதிய அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கை பஜாஜ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 220 க்ரூஸ் பைக மாடலை ரூ.1.29 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது,

புதிய 220 ஸ்ட்ரீட் பைக்கை ரெட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யவுள்ளது பஜாஜ். இந்த பைக்கின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், டிஸ்க் பிரேக் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் செட்டப்பும் டிரம் பிரேக் செட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ABS வசதியையும் பஜாஜ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் பஜாஜின் இரண்டு அவெஞ்சர் மாடல் பைக்குகளும் அண்டர்ரேட்டட் என்றே சொல்ல வேண்டும். அவற்றுக்கு கிடைக்க வேண்டிய அளவு கவனம் கிடைக்கவில்லை. மிகவும் குறைவான விலையில் மிகவும் ரிலாக்ஸ்டாக பயணம் செய்யும் வகையிலான க்ரூஸர் பைக்காக இது இருக்கிறது. பைக்கின் டிசைனும் கிளாஸியாக எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவிலேயே இருக்கிறது. எனவே புதிய பைக் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் இந்த பைக்குகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

Article Published On: Tuesday, May 5, 2026, 13:01 [IST]
English summary
Bajaj avenger 160 street discontinued avenger 220 street debuted
மேலும்... #bajaj auto #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+