இந்தியாவில் பஜாஜ் வெளியிட்டுள்ளது புதிய விலை குறைவான பைக் இது தான்!

இந்தியாவில் புதிய அவெஞ்சர் பைக்கை வெளியிட்டுள்ளது பஜாஜ். இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் முறையான க்ரூஸர் வகை பைக்குகள் என்றால் அது பஜாஜின் அவெஞ்சர் சீரிஸ் தான். முன்னதாக இரண்டு விதமான இன்ஜின்களுடன் அவெஞ்சர் பைக்கை பஜாஜ் விற்பனை செய்து வந்தது.

ஒன்று அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 (Avenger Street 160), மற்றொன்று அவெஞ்சர் க்ரூஸ் 220 (Avenger Cruise 220). இந்த இரண்டு பைக்குகளிலும் இன்ஜின் மற்றும் வேறுபடால், ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸ் என்ற பெயருக்கு ஏற்ப கொடுக்கப்பட்டிருக்கும் அக்சஸரீஸ்களிலும் வேறுபாடுகள் இருந்து வந்தது.

Bajaj Avenger Street 220

இதில் சிறிய இன்ஜின் கொண்ட அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 பைக்கின் விற்பனையை இருந்து நீக்கியது பஜாஜ். அதற்கு மாற்றாக அவெஞ்சர் க்ரூஸ் 220 பைக்கைக் கொண்டு வரத் திட்டமிட்டது. இந்நிலையில், தற்போது அந்தப் புதிய பைக்கையே இந்தியாவில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். தங்களது வலைத்தளப் பக்கத்தில் புதிய பைக்கின் விலையைக் குறிப்பிட்டுள்ளது பஜாஜ்.

அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 பைக்கை 1.12 லட்சம் ரூபாய் என்ற விலையையொட்டி பஜாஜ் விற்பனை செய்து வந்த நிலையில், அதற்கு மாற்றாக புதிதாக அறிமுகப்படுத்திய அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 பைக்கை சற்று கூடுதலாக 1.30 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

Bajaj Avenger Cruise 220

இது அவெஞ்சர் க்ரூஸ் 220 பைக்கையும் விட சில ஆயிரங்கள் கூடுதலான விலை தான். 220 க்ரூஸ் பைக்கை இந்தியாவில் 1.28 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே பஜாஜ் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறைவான விலையைக் கொண்டிருந்தாலும், ஸ்ட்ரீட் பைக்கை விட க்ரூஸ் பைக்கில் பேக் ரெஸ்ட், பெரிய விண்டு ஷீல்டு என நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் கூடுதலான அக்சஸரீஸ்களும் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பைக்குகளிலும் இன்ஜின் தற்போது ஒன்று தான். 220 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜினே இரண்டு பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 18.76 hp பவர் மற்றும் 17.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்ட்ரீட் 220 பைக்கை எபோனி பிளாக் மற்றும் காக்டெயில் ஒயின் ரெட் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியிட்டுள்ளது பஜாஜ். ஸ்ட்ரீட் 160 பைக்கும் இதே நிறங்களிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் க்ரூஸ் 220 பைக்கை மூன் ஒயிட் மற்றும் அன்பர்ன் பிளாக் ஆகிய இரண்டு தனித்துவமான நிறங்களில் நாம் வாங்கலாம்.

புதிய 'ஸ்ட்ரீட்' மற்றும் முன்பிருந்தே இருக்கும் 'க்ரூஸ்' பைக்குகளில் இருக்கும் முக்கியமான வேறுபாடுகளைப் பார்க்கலாம். க்ரூஸ் பைக்கானது நீண்ட தூரப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பஜாஜ் உருவாக்கிய ஒன்று. எனவே மேலே கூறியது போல பேக் ரெஸ்ட், உயரமான விண்டுஷீல்டு ஆகியவை இதில் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஹேண்டில் பாரும் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கும். இதனால் ரிலாக்ஸ்டான ரைடை நாம் மேற்கொள்ள முடியும்.

ஆனால் ஸ்ட்ரீட் பைக்கில் மேலே கூறிய அம்சங்கள் இல்லாமல் இருப்பதோடு, ஹேண்டில் பாரும் சற்று கீழே இறக்கி நகரங்களில் ஓட்டுவதற்கு ஏற்ப அக்ரஸிவ்வான ரைடிங் பொசிஷன் கொடுக்கப்பட்டிருக்கும். க்ரூஸ் பைக்கானது சற்று கிளாஸியான டிசைனைக் கொண்டிருப்பதோடு, ரெட்ரோ ஃபீலையும் கொடுக்கும். அதற்கேற்ப அந்த பைக்கில் ஸ்போக் வீல்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ஸ்ட்ரீட் பைக் மாடர்னான வைபைக் கொடுக்கும். அதற்கேற்ற அம்சங்களையே ஸ்ட்ரீட் 220 பைக்கில் பஜாஜ் கொடுத்திருக்கிறது. குறிப்பாக ஸ்ட்ரீட் பைக்கில் ஸ்போக் வீல்கள் இல்லாமல் அலாய் வீல்களே கொடுக்கப்பட்டிருக்கும். நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இரண்டு பைக்குகளில் இருந்து ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பு விற்பனையில் இருந்த இரண்டு பைக்குகளில் எதனை வாங்குவது என்ற குழப்பம் நமக்கு இருக்கும். காரணம் ஒன்றின் டிசைன் மற்றொன்றின் இன்ஜின் நமக்குப் பிடித்தமானதாக இருக்கும். தற்போது அதனை ஒன்றாக இணைத்து விட்டது பஜாஜ். இரண்டு பைக்குகளுக்கு இடையிலான விலை வித்தியாசமும் 1000 ரூபாய் தான் என்னும் போது தேர்ந்தெடுப்பதற்கும் இனி எளிதாக இருக்கும்.

Article Published On: Tuesday, June 2, 2026, 9:57 [IST]
English summary
Bajaj avenger street 220 bike launched in india at lower price
மேலும்... #bajaj auto #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out