இரண்டுமே ஒரே விலையில்தான் விற்பனை... ஆனால் எதை வாங்குவதுனு பார்த்து தேர்வு செய்யனும்!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த பைக்கிற்கு சவாலான போட்டியளிக்கும் வகையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரோனின் பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு பைக்குகளும் கிட்டத்தட்ட ஒரே அளவில் ரூ.1.30 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. க்ரூஸர் வகையை சேர்ந்த இந்த இரு பைக்குகளில் எதை வாங்கலாம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பயண அனுபவம் மற்றும் சவுகரியம்
அமெரிக்கன் க்ரூஸர் பைக்குகளை போன்றதான ஸ்டைலிஷான தோற்றத்தை கொண்டது புதிய அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 பைக் ஆகும். அந்த அளவிற்கு தாழ்வாகவும், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி சற்று முன்னோக்கியும் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த பைக்கின் நீளம் அதிகமாக உள்ளதால் வளைவுகளில் திரும்பும்போது சற்று சிரமமாக இருக்கலாம்.

டிவிஎஸ் ரோனின் பைக்கை பற்றி பார்த்தோமேயானால், இது ஒரு முழுமையான க்ரூஸர் வகையை சேர்ந்த பைக் கிடையாது. ரோட்ஸ்டர் மற்றும் க்ரூஸர் என இரண்டிற்கும் இடைப்பட்ட தோற்றத்தை கொண்டது இந்த பைக் ஆகும். இன்னும் சொல்லப்போனால், ஸ்க்ராம்ப்ளர் வகையை சேர்ந்த பைக்குகளை போன்று நிமிர்ந்து அமர்ந்தப்படி இந்த பைக்கை ஓட்ட வேண்டியுள்ளது.
என்ஜின் & செயல்படுதிறன்
புதிய பஜாஜ் அவெஞ்சர் 220 பைக்கில் DTS-i என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களின் போது மிகவும் மென்மையாக இயங்கக்கூடியதாக உள்ளது. ஆனால், அதிகப்பட்ச என்ஜின் ஆற்றலை பெற இந்த பைக்கில் அதிகமான ஆக்ஸலரேஷனை முறுக்க வேண்டியதாக உள்ளது. இதனால், உடனடி டார்க் திறன் ஆனது இந்த பைக்கில் சற்று மெதுவாகவே கிடைக்கிறது.

மறுபக்கம், டிவிஎஸ் ரோனின் என்ஜின் ஆனது குறைந்த ஆர்பிஎம் வேகத்திலேயே அதிக ஆற்றல் மற்றும் அதிக டார்க் திறனை வழங்கக் கூடியதாக உள்ளது. இதனால், நெரிசலான நகர்புற சாலைகளிலும் அடிக்கடி கியர்களை மாற்றாமல் பயணம் செய்வதற்கு ரோனின் ஏற்றதாக விளங்குகிறது. அத்துடன், இந்த டிவிஎஸ் பைக்கில் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச்சும் வழங்கப்படுகிறது.
தொழிற்நுட்ப வசதிகள்
புதிய அவெஞ்சர் 220 பைக்கை வழக்கம்போல் ஹலோஜன் ஹெட்லைட் மற்றும் அனலாக் டிஜிட்டல் திரை உடன் ஓல்டு-ஸ்கூல் பைக்காக பஜாஜ் பேணி பாதுகாத்து வருகிறது. இதனால், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற மாடர்ன் வசதிகள் எதுவும் இந்த பைக்கில் இல்லை. அத்துடன், இந்த பைக்கில் இன்னமும் பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கே சிங்கிள்-சேனல் ABS உடன் வழங்கப்படுகிறது.
ஆனால், டிவிஎஸ் ரோனின் பைக்கில் LED விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, ப்ளூடூத் இணைப்பு வசதி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அர்பன் & மழை என இரு ரைடிங் மோட்கள் மற்றும் பின் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் என நவீன கால அம்சங்கள் கிடைக்கின்றன.
| Feature | Bajaj Avenger Street 220 | TVS Ronin |
| Engine Capacity | 220 cc | 225.9 cc |
| Max Power | 18.76 bhp @ 8,500 rpm | 20.1 bhp @ 7,750 rpm |
| Max Torque | 17.55 Nm @ 7,000 rpm | 19.93 Nm @ 3,750 rpm |
| Gearbox | 5-speed | 5-speed with Assist & Slipper Clutch |
| Front Suspension | Telescopic Forks | 41mm Upside Down (USD) Forks |
| Rear Suspension | Twin Shock Absorbers | Monoshock |
| Braking Safety | Single-Channel ABS (Rear Drum) | Single or Dual-Channel ABS (Rear Disc) |
| Seat Height | 737 mm | 795 mm |
| Ground Clearance | 169 mm | 181 mm |
| Approx. Mileage | ~40 kmpl | ~42 kmpl |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின் மூலம் பார்க்கும்போது, நீங்கள் ஓர் பக்காவான க்ரூஸர் பைக்கை அதிக வீல்பேஸ் உடன் எதிர்பார்க்கிறீர்கள் எனில் உங்களுக்கு பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 ஏற்றதாக இருக்கும். குறிப்பாக, உயரம் குறைவானவர்களுக்கு ஏற்ற பைக்காக இது இருக்கும் என்பது எங்களது பரிதுரைப்பு. எந்த உயரத்தில் இருப்பவர்களாலும் இந்த பைக்கில் மிகவும் ரிலாக்சான பயணத்தை பெறலாம்.
அதுவே, இன்றைய கால மாடர்ன் பைக்கை எதிர்பார்க்கிறீர்கள் எனில் டிவிஎஸ் ரோனின் சரியானதாக இருக்கும். பயணத்திற்கான வழிக்காட்டி, ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி மற்றும் ட்யூயல்-சேனல் ABS போன்ற அதிநவீன வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, பைக்கின் தோற்றத்தை மெருக்கேற்றிக் காட்டக்கூடிய LED விளக்குகளும் இந்த பைக்கில் பொருத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.
அட்டவணை புதியதாக கூடுதலாக சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications