நாடே இந்த வண்டிக்காக தான் வெயிட்டிங்! இதுல அப்படி என்ன இருக்குது?

பஜாஜ் நிறுவனம் தனது புதிய சேத்தக் சி25 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ91,399 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் 35 மற்றும் 30க்கு கீழ் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன லைனப்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் அடுத்த தலைமுறை சேத்தக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. இதன்படி சேத்தக் சி25 என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ91,399 என்ற விலையில் இந்த வாகனம் அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் சேத்தக் அடிப்படை கட்டமைப்பு மாறாமல் உருவாக்கியுள்ளது.

இதன் வடிவமைப்பு சற்று ஸ்லீக்காவும்,. அதே நேரம் புதிய கலர் ஆப்ஷன்கள் உடனும் ஸ்போர்ட்டியான டீக்கல் உடன் வருகிறது. இந்த சேத்தக் சி25 ஸ்கூட்டர் அதன் அடிப்படையான ரெட்ரோ ஸ்டைலில் முழு மெட்டல் பாடி கட்டமைப்பில் விஷூவல் ஐடென்டிட்டியுடவன் வருகிறது. வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், பின்பக்கம் குதிரை ஷூ வடிவிலான ஐஸ் க்யூப் டெயில் லைட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பின்பக்கம் அலுமினியம் கேஸ்ட் கிராப் ஹேண்டில் வடிவமைப்பு பாராமெட்ரிக் பேட்டர்ன் உடன் வருகிறது. இதில் சேத்தக் லோகோ உள்ளது.

இந்த சேத்தக் சி 25 ஸஅகூட்டர் உடன் 2.5 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. இது சிங்கிள் சார்ஜில் 113 கி.மீ வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் என்எம்சி பேட்டரிவழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 0-80 சதவீத சார்ஜை வெறும் 2மணி நேரம் 25 நிமிடத்தில் ஏற்றிவிடும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 55 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் கலர் எல்இடி ஸ்பீடோ மீட்டர் உள்ளது. கண்ட்ரோல் நாப்கள் தனியாக வழங்கப்பட்டுள்ளுது. இதில் கால்களை எடுப்பது ரிஜெக்ட் செய்வது, மியூசிக் பிளே, பாஸ் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்சன் மற்றும் முன்பக்கம் டிஸ்க் பிரேக் உள்ளது. பின்பக்கம் டிரம் பிரேக் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 650 மிமீ நீளம் கொண்ட சீட் உள்ளது. 25 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில் முழு ஹெல்மெட்டை உள்ளே வைக்க முடியும்.

மேலும் இதில் எக்கோ மற்றும் ஸ்போர்ட் மோடு உள்ளது. ரிவர்ஸ் மோடு, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆகிய அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்கூட்டர் பின்பக்கம் பயணியுடன் 19 டிகிரி வரையிலான ஏற்றத்தில் ஏறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 108 கிலோ எடை கொண்டதாக இருக்கிறுது. 22 கிலோ குறைவான எடை கொண்டதாக இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் 765 மிமீ உயரத்தில் சீட் அமைக்கப்பட்டுள்ளுது. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஐபி67 வாட்டர் ரெஸிஸ்டென்ஸ், 1.825 மிமி டர்னிங் ரேடியஸ், 1225 மிமீ வீல் பேஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த வாகனம் நிச்சயம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Bajaj Chetak C25

iடிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. இந்த இந்த வாகனம் குறைவான விலையில் மக்கள் தேவையை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 14, 2026, 20:35 [IST]
English summary
Bajaj chetak c25 launched in india price 91399
மேலும்... #bajaj auto #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+