அடிமாட்டு விலையில் உலகையே மிரள விட்ட ஸ்கூட்டர்! தமிழ்நாட்டு நிறுவனத்திடம் மண்டியிட்ட பஜாஜ்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooter) ஒன்று பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak). இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 28,004 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 21,240 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 6,764 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 31.85 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters February 2026), பஜாஜ் சேத்தக் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter), சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5வது இடத்தை பிடித்துள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 3 சீரிஸ்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவை சீரிஸ் 25 (Series 25), சீரிஸ் 30 (Series 30) மற்றும் சீரிஸ் 35 (Series 35) ஆகியவை ஆகும். இதில், சீரிஸ் 25-ன் கீழ் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அது சி2501 (C2501) ஆகும்.
இதில், 2.5 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) 113 கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் ஆரம்ப விலை 87,100 ரூபாயாக இருக்கிறது. இதேபோல் சீரிஸ் 30-ன் கீழும் ஒரே ஒரு வேரியண்ட் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பெயர் 3001 ஆகும்.
இதில், 3.0 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் 127 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. இதன் ஆரம்ப விலை 99,605 ரூபாயாக உள்ளது. ஆனால் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சீரிஸ் 35-ன் கீழ் மொத்தம் 3 வேரியண்ட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை 3501, 3502 மற்றும் 3503 ஆகியவை ஆகும்.
இந்த 3 வேரியண்ட்களிலுமே 3.5 kWh பேட்டரி ஆப்ஷன்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் 3501 மற்றும் 3502 ஆகிய 2 வேரியண்ட்களின் ரைடிங் ரேஞ்ச் 153 கிலோ மீட்டர்கள் ஆகவும், 3503 வேரியண்ட்டின் ரைடிங் ரேஞ்ச் மட்டும் 151 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது. இவற்றின் விலை முறையே 1,29,848 ரூபாய் ஆகவும், 1,22,605 ரூபாய் ஆகவும், 1,09,605 ரூபாய் ஆகவும் உள்ளன.
இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரைடிங் ரேஞ்ச் ஆகும். அத்துடன் இந்த செய்தியில் நாங்கள் தெரிவித்துள்ள அனைத்து விலைகளும் பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெங்களூர் விலை (Bangalore) என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சரியான விலையை நிர்ணயம் செய்துள்ளது. அத்துடன் இதன் ரைடிங் ரேஞ்ச், நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இது போன்ற காரணங்களால்தான், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளனர் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இருப்பினும் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையில், தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வீழ்த்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவை இரண்டும் போட்டி மாடல்களாக இருந்து வரும் நிலையில், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில், 38,054 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் டிவிஎஸ் ஐக்யூப் 4வது இடத்தை பிடித்துள்ளது.
ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வெறும் 28,004 என்ற விற்பனை எண்ணிக்கையுடன், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. அதாவது டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடும்போது 10,050 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.
பாஸ் (BAAS - Battery As A Service) முறையில் வாங்கினால், டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 59,999 ரூபாய் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








