சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை படைத்த பஜாஜ்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் பஜாஜும் ஒன்று. இந்தியாவில் சேட்டக் பிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது பஜாஜ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் டிவிஎஸ்ஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ், தற்போது அதில் புதிய விற்பனை மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளது.

இந்தியாவில் 8 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பஜாஜ். மேலும், ஓலா எலெக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ்ஸுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையைப் படைத்த மூன்றாவது நிறுவனமாகவும் பஜாஜ் ஆட்டோ ஆகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் 7 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை என்ற மைல்கல்லை ஏத்தர் எனர்ஜி எட்டியது. தற்போது அதனைத் தொடர்ந்து பஜாஜும் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Bajaj Chetak

2020ம் ஆண்டு ஜனவரியில் தான் இந்தியாவில் தங்களது முதல் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் ஆறரை ஆண்டுகளில் 8 லட்சம் யூனிட்டுகள் விற்பனை என்ற இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனமும், ஓலா எலெக்ட்ரிக்கும் இந்தியாவில் 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றை மைல்கற்களையும் எட்டியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட 2020ம் ஆண்டு வெறும் 1,243 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்தது. 2021ல் அது 4,765 யூனிட்டுகளாகவும், 2022ல் 26,758 யூனிட்டுகளாகவும் உயர்ந்தது. 2023ல் தான் பஜாஜின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கி ஒரே ஆண்டில் 75,112 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவை அடைந்தது. அதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் 4 சதவீதமாக இருந்த பஜாஜின் பங்கு 2023ல் 8 சதவீதமாக உயர்ந்தது.

Bajaj Chetak

2024ல் முதல் முறையாக ஒரே ஆண்டில் 2 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லை பஜாஜ் எட்டியது. தொடர்ந்து கடந்த 2025ம் ஆண்டு 2.79 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தது. நடப்பு 2026ம் ஆண்டு முதல் ஆறு மாதங்கள் முடிவடையவிருக்கும் நிலையில், 2025ன் 75 சதவீத விற்பனையை தற்போதே பதிவு செய்துவிட்டது பஜாஜ்.

2026ன் முதல் ஆறு மாதங்களிலேயே சுமார் 2.11 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் ஒரே ஆண்டில் 4 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்ற விற்பனை மைல்கல்லை இந்தாண்டு பஜாஜ் ஆட்டோ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டே 10 லட்சம் யூனிட்டுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லையும் பஜாஜ் எட்டும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்தியாவில் தற்போது 96,504 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி, 1.47 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் வரையிலான விலையில் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது பஜாஜ். ஐந்து வேரியன்ட்களாக இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இன்னும் குறைவான விலையிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடும் திட்டமும் பஜாஜிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜுக்கு இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் வாகனம் என்றால் அது சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். ஸ்பிளெண்டர், ஆக்டிவா போல மக்களின் நிபந்தனையற்ற நம்பிக்கையைப் பெற்ற பைக் அல்லது ஸ்கூட்டர் மாடல் பஜாஜிடம் இல்லை. அந்த வகையில் சேட்டக் தான் பஜாஜின் அதிகம் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனமாக தற்போது இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பல்சரே பஜாஜின் அதிகம் விற்பனை செய்யப்படும் வாகனமாகத் தோன்றும். கடந்த மே மாதம் இந்தியாவில் 1.24 லட்சம் பல்சர் பைக்குகை விற்பனை செய்துள்ளது பஜாஜ். ஆனால் பஜாஜிடம் சுமார் 12 பல்சர் பைக் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன.

இரண்டாவது இடத்தில் இருக்கும் சேட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 38,376 யூனிட்டுகள் விற்பனையை கடந்த மே மாதம் பதிவு செய்துள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது சேட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே பஜாஜின் அதிகம் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனம் என தாரளமாகக் கூறலாம்.

Article Published On: Monday, June 29, 2026, 13:09 [IST]
English summary
Bajaj chetak reaches 8 lakh electric scooter sales milestone
மேலும்... #bajaj auto #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out