ரூ.40,000 வரை விலை குறையும் பஜாஜ் பைக்.. இப்போவே போய் புக் பண்ணுங்க இல்லைனா கிடைக்காது!

பஜாஜ் நிறுவனமானது மேம்படுத்தப்பட்ட புதிய டாமினார் 400 பைக் மாடலை விரைவில் வெளியிடவுள்ளது. மேம்பாடு என நாம் கூறினாலும் உண்மையில் இதனை மேம்பாடாகக் கூறமுடியாது. ஏனெனில் தற்போது விற்பனையில் இருக்கும் பைக் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்ஜினை விட சிறிய இன்ஜினையே புதிய டாமினார் 400 பைக்கில் கொடுக்கவுள்ளது பஜாஜ். அது ஏன்?

கடந்த ஆண்டு 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரியை 40% ஆக உயர்த்தியது மத்திய அரசு. அதே நேரத்தில் 350 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரி 18% ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது விற்பனையில் இருக்கும் டாமினார் 400 பைக் மாடலில் 373.3 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Bajaj Dominor 400

350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் உடனடியாக அதன் விலையை உயர்த்தின. ஆனால் பஜாஜ் அதற்கு மாறாக இன்ஜின் அளவை 350 சிசிக்குக் கீழாக குறைக்கும் வேலையில் இறங்கியது. அதன் பயனாகவே தற்போதிருப்பதை விட சற்று சிறிய இன்ஜின் கொண்ட புதிய டாமினார் 400 பைக்கை விரைவில் இந்தியாவில் வெளியிடவுள்ளது. தற்போது இந்தப் புதிய பைக் குறித்த சில தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன அது குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

குறைவான வரி என்னும் போது பைக்கின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. நாம் எதிர்பார்த்ததைப் போலவே புதிய பைக்கின் விலையை பஜாஜ் குறைக்கவுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் 373.3 சிசி இன்ஜின் கொண்ட டாமினார் 400 பைக் மாடலானது ரூ.2.40 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. ஆனால், 350 சிசி இன்ஜின் கொண்ட புதிய டாமினார் 400 பைக் மாடலை ரூ.2 லட்சம் என்ற விலையில் பஜாஜ் வெளியிடலாம் என நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

Bajaj Dominor 400 rear

பெர்ஃபாமன்ஸும் குறைந்திருக்குமா?

விலை இவ்வளவு குறைகிறதென்றால், அதற்கேற்ப வசதிகள் அல்லது பெர்ஃபாமன்ஸில் குறை இருக்குமா என உங்களுக்கு எழும் சந்தேகம் எங்களுக்கும் எழுந்தது. ஆனால் அப்படியெதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது. தற்போதைய பைக்கில் இருத்தும் அதே வசதிகள் எந்த மாற்றமும் இன்றி புதிய பைக்கிலும் இருக்கும். மேலும், இன்ஜின் அளவு சிறியதானாலும், பெர்ஃபாமன்ஸ் பெரியளவில் குறையவில்லை என்றே நமக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய டாமினார் 400 பைக்கின் இன்ஜினானது 39.5 hp பவர் மற்றும் 35 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. புதிய பைக்கின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இன்ஜினோ 38.5 hp பவர் மற்றும் 33.2 Nm டார்க்கைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால் பெர்பாமன்ஸில் நாம் கவனிக்கும் வகையில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. மேலும் குறைந்த பவர் மற்றும் டார்க்கை தினசரி பயன்பாட்டில் நாம் உணரக்கூட மாட்டோம்.

இன்ஜினில் என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது?

பைக்கின் இன்ஜினில் இருக்கும் சிலிண்டரின் கொள்ளளவைத் தான் சிசி (CC- Cubic Centimeter) எனக் குறிப்பிடுகிறோம். இந்தக் கொள்ளளவு குறைக்கப்படும் போது சிசியும் குறைகிறது. வட்ட வடிவ சிலிண்டரின் விட்டத்தை 'போர்' (Bore) என்றும் நீளத்தை 'ஸ்ட்ரோக்' (Stroke) என்றும் குறிப்பிடுகின்றனர். தற்போதைய டாமினார் 400 பைக்கின இன்ஜினில் உள்ள சிலிண்டரானது 60 மிமீ போரையும், 89 மிமீ ஸ்ட்ரோக்கையும் கொண்டிருக்கிறது.

இதில் தற்போது போரின் அளவை 56.1 மிமீ ஆகக் குறைத்திருக்கிறது பஜாஜ். இதன் மூலம் இன்ஜின கொள்ளவும் 350 சிசிக்கு கீழாகக் குறைந்திருக்கிறது. ஒரு இன்ஜினின் சிலிண்டரில் தான் எரிபொருள் மற்றும் காற்றுக் கலவை சேர்ந்து எரிந்து பைக்கிற்கான பவர் மற்றும் டார்க் கிடைக்கிறது. எனவே இதன் அளவைப் பொருத்து பவர் மற்றும் டார்க்கின் அளவுகளும் மாறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இன்ஜின் மாற்றத்தைத் தவிர புதிய டாமினார் 400 பைக்கில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது. விரைவில் இந்தப் புதிய, விலை குறைவான டாமினார் பைக்கின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். இது வரை டாமினார் பைக்கை வாங்கத் தயங்கியவர்கள் கூட இனி தாராளமாக வாங்கலாம். தற்போது இன்னும் விலைக்கேற்ற பைக்காக மாறியிருக்கிறது பஜாஜ் டாமினார் 400.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2026, 11:14 [IST]
English summary
Bajaj dominor 400 updated bike with 350 cc engine to launch at lowest price in india
மேலும்... #bajaj auto #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+