ஹீரோவை நான்காவது இடத்திற்குத் தள்ளிய பஜாஜ்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே!

எப்போதும் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் என்ற செய்திகளை தான் அடிக்கடி படித்திருப்பீர்கள். ஆனால் வெளிநாடுகளிலும் இந்திய நிறுவனங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. அதில் ஒரு நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ இருக்கிறது. இந்தியாவில் அதிக பைக்குகளை விற்பனை செய்வதில் வேண்டுமானால் ஹீரோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்று எடுத்துக் கொண்டால் பஜாஜ் தான் எப்போதும் டாப்.

ஆம், வெளிநாடுகளுக்கு அதிகளவிலான பைக்குகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக பஜாஜே இருந்து வருகிறது. கடந்த 2026ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 18.80 லட்சம் பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது பஜாஜ். இது இந்தியாவில் கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் விற்பனை செய்த 22 லட்சம் யூனிட்டுகளை விட கொஞ்சம் தான் குறைவு.

Bajaj Pulsar 220F

அப்படியென்றால் ஒவ்வொரு மாதமும் 1.5 லட்சம் பைக்குகளை வெளிநாடுகளில் பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவைத் தவிர்த்து 100-க்கும் மேலான நாடுகளில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது பஜாஜ். மேலும், 2025ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த நிதியாண்டு பஜாஜின் வெளிநாட்டு ஏற்றுமதி அளவு 17 சதவீதம் வரை உயர்ந்தே இருக்கிறது. மேலும், மேற்கூறிய விற்பனை அளவுடன், இந்திய இருசக்கர வாகன ஏற்றுமதி சந்தையின் 36.29 சதவீதம் சந்தைப் பங்குகளையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதிகளவிலான மாடல்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலும் பஜாஜே முன்னணியிலேயே உள்ளது. இந்தியாவில் இருந்து சுமார் 21 பைக் மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது பஜாஜ். ஆனால் முதலிடத்தில் இருப்பது ஹோண்டா தான். சுமார் 22 பைக் மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் விற்பனை அளவு குறைவு தான். ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஹோண்டா கடந்த 2026ம் நிதியாண்டு 6.20 லட்சம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களையே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்திருக்கிறது.

TVS Starcity

இரண்டாவது இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டிவிஎஸ் உள்ளது. இந்தியாவிலிருந்து சுமார் 12 மாடல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்து வரும் டிவிஎஸ், வெளிநாடுகளில் கடந்த நிதியாண்டு 14.31 லட்சம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 31 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜுக்கு அடுத்தபடியாக இருசக்கர வாகன ஏற்றுமதி சந்தையின் 27.28 சதவீதம் பங்களை டிவிஎஸ் கொண்டிருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஹோண்டாவின் சந்தைப் பங்கு 11.97 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹீரோ ஹோண்ட, கடந்த 2026ம் நிதியாண்டு வெறும் 4 லட்சம் பைக்குளை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இடத்தில் யமஹா, ஆறாம் இடத்தில் சுஸூகி மற்றும் ஏழாம் இடத்தில் ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ராயல் என்ஃபீல்டின் ஏற்றுமதி அளவு கடந்த நிதியாண்டு 22.58 சதவீதம் உயர்ந்து 1.31 லட்சம் யூனிட்டுகளாக உள்ளது. இந்தியாவில் இருந்து 9 மாடல் பைக்குகளை வெளிநாடுகளுக்கு ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனங்களைத் தவிர்த்து, ட்ரையம்ப், ஏப்ரிலியா, BMW, வெஸ்பா, ஏத்தர், ஹஸ்க்வர்னா மற்றும் கவாஸாகி ஆகிய நிறுவனங்களும் கனிசமான அளவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்கின்றன. முதல் மூன்று நிறுவனங்களும் 25,000-க்குள்ளான அளவிலும், வெஸ்பா 6,000 யூனிட்டுகள் அளவிலும், ஏத்தர் 3,000 யூனிட்டுகள் அளவிலும், மற்ற இரண்டு நிறுவனங்களும் 500 யூனிட்டுகளுக்குள்ளாகவும் ஏற்றுதி செய்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விவரங்களை வைத்து பஜாஜ் தான் இந்திய இருசக்கர வாகன சந்தையின் ஏற்றுமதி கிங் என்று நாம் தாரளமாகக் கூறலாம். பல்சர், டாமினார், பாக்ஸர், CT எனப் பல்வேறு பைக் மாடல்களை இந்தியாவில் இருந்து பஜாஜ் ஏற்றுமதி செய்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த ஏற்றுமதி அளவு இன்னும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Tuesday, June 23, 2026, 8:57 [IST]
English summary
Bajaj exported more bikes overseas than anyother counterparts in india
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out