102 கிமீ மைலேஜ் தரும் பைக்கை அடிமாட்டு விலையில் களமிறக்கிய இந்திய நிறுவனம்! மொத்த உலகையும் மிரள விட்டுட்டாங்க!
இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்களின் (CNG Cars) விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. சிஎன்ஜி விலை (CNG Price) மிகவும் குறைவு என்பதும், சிஎன்ஜி மூலம் இயங்கும்போது அதிக மைலேஜ் (Mileage) கிடைக்கும் என்பதும்தான் இதற்கு மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.
கடந்த 2025-26ம் நிதியாண்டில் மட்டும் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிஎன்ஜி மூலமாக இயங்கும் கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து, சிஎன்ஜி மூலமாக இயங்கும் பைக்கை பஜாஜ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இதுதான், உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) ஆகும். தற்போதைய நிலையில் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், NG04 Drum வேரியண்ட்டின் ஆரம்ப விலை 91,566 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் NG04 Drum Led வேரியண்ட்டின் ஆரம்ப விலை 1,04,058 ரூபாயாக இருக்கிறது. இந்த வரிசையில் NG04 Disc வேரியண்ட்டின் ஆரம்ப விலை 1,07,616 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் சிஎன்ஜி மூலமாக மட்டுமல்லாது, பெட்ரோல் மூலமாகவும் இயங்கும். சிஎன்ஜி மூலம் இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 102 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என பஜாஜ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த பைக் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்.
பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 2 தனித்தனி எரிபொருள் டேங்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று சிஎன்ஜி-க்கானது. மற்றொன்று பெட்ரோலுக்கானது. ஓரளவிற்கு குறைவான விலை மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால், இந்திய சந்தையில் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.
ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கிற்கு சிறப்பாக அமையவில்லை. ஆம், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 889 ஃப்ரீடம் 125 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1,394 பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 505 பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 36.23 சதவீத வீழ்ச்சி ஆகும். ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் கூடிய விரைவிலேயே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications