100 கிமீ மைலேஜ் கொடுக்கும் பைக்.. என்னென்ன வசதிகளைக் கொண்டுள்ளது? என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது?

உலகின் முதல் மற்றும் ஒரே CNG பைக் எது என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) தான் அது. பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு வகையான எரிபொருள்களிலும் இயங்கும் திறனுடன், பெட்ரோல் மற்றும் CNG-க்கு தனித்தனி டேங்குகளுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பைக் இப்போது எத்தனை வேரியன்ட்களாக, என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறதென்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

இந்த 125 சிசி CNG பைக்கை மூன்று வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது பஜாஜ். NG04 டிரம், NG04 டிரம் LED மற்றும் NG04 டிஸ்க் LED ஆகிய மூன்று வேரியன்ட்களாக ஃப்ரீடம் 125 பைக்கை நாம் வாங்கலாம். மூன்று வேரியன்ட்களிலும் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது. கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களில் மட்டுமே கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கும்.

Bajaj Freedom CNG Tank

இந்த பைக்கில் 124.58 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 8,000 rpm-ல் 9.5 hp பவர் மற்றும் 5,000 rpm-ல் 9.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலே கூறியது போல பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டு வகையிலான எரிபொருள்களிலும் திறம்பட இயங்கும் வகையில் இந்த 125 சிசி இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

NG04 டிரம்:

ஃப்ரீடம் 125 பைக்கின் அடிப்படை வேரியன்ட் இது தான். பெயரில் உள்ளது போலவே இந்த வேரியன்டின் இரண்டு பக்கமும் டிரம் பிரேக் செட்டப்பை பஜாஜ் பயன்படுத்தியுள்ளது. மேலும் ஃபரீடம் பைக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் பின்பக்க வீலில் டிரம் பிரேக் செட்டப்பே ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Bajaj Freedom

இத்துடன் இந்த வேரியன்டில் ஹாலஜன் முகப்பு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஃப்ரீடம் பைக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் பின்பக்க விளக்கு LED தான். குறைவான விலையை மையப்படுத்தியே இந்த வேரியன்டை விற்பனையில் வைத்திருக்கிறது பஜாஜ். இதனை ரூ.91,566 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

NG04 டிரம் LED:

மேலே நாம் பார்த்த டிரம் வேரியன்டில் ஒரேயொரு சின்ன மாற்றம் மட்டும் செய்யப்பட்ட டிரம் LED வேரியன்டாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேரியன்டின் பெயரில் உள்ளது போலவே இதில் ஹாலஜன் முகப்பு விளக்குக்குப் பதிலாக LED முகப்பு விளக்கு செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒரு மாற்றத்தைத் தவிர இந்த வேரியன்டில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இதனை ரூ.1.04 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது பஜாஜ். இது அடிப்படையான டிரம் வேரியன்டை விட ரூ.12,551 அதிகமான விலையாகும் என்பது குறிப்படத்தக்கது.

NG04 டிஸ்க் LED:

இந்த வேரியன்டின் பெயரை வைத்தே இதில் என்ன வசதி கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். ஆம், இந்த டாப் எண்டு ஃப்ரீடம் வேரியன்டில் டிஸ்க் பிரேக் செட்டப்பைக் கூடுதலாகக் கொடுத்துள்ளது பஜாஜ். ஆனால் முன்பக்க வீலில் மட்டுமே. பின்பக்கம் அதே டிரம் பிரேக் செட்டப்பே தொடர்கிறது.

240 மிமீ டிஸ்க் பிரேக்குடன், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை (CBS) இந்த வேரியன்டில் கொடுத்துள்ளது பஜாஜ். இத்துடன் இடைநிலை வேரியன்டில் கொடுக்கப்பட்டது போல LED விளக்குகள் ஆகிய அம்சங்கள் அப்படியே இந்த உயர்நிலை வேரியன்டிலும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வேரியன்டை ரூ.1.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது பஜாஜ்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கம்யூட்டர் பைக்காக, ஹீரோ ஸ்ப்ளெண்டர், பஜாஜ் CT110 ஆகிய பைக்குகளை வாங்கத் திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஃப்ரீடம் 125 பைக்கையும் பரிசீலனை செய்யலாம். இந்தியாவில் தற்போது அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் மாடல் இது தான். CNG எரிபொருளில் இயங்கும் போது கிலோவுக்கு 100 கிமீ வரையிலான மைலேஜை இந்த பைக் கொடுக்கிறது.

பெட்ரோலில் இயங்கும் போது லிட்டருக்கு 65 கிமீ தான். இந்த பைக்கில் 2 கிலோ CNG டேங்க் கொடுக்கப்பட்டிருப்பதனால் ஒரு முறை அதனை ஃபில் செய்தால் 200 கிமீ வரை பயணம் செய்ய முடியும். தினசரிப் பயன்பாட்டிற்கு இது போதுமான அளவாகவே இருக்கும். எனவே புதிய பைக் வாங்கும் போது இதனையும் பரிசீலனையில் வைத்துக் கொள்ளுங்கள்.

Article Published On: Monday, April 27, 2026, 9:38 [IST]
English summary
Bajaj freedom 125 cng bike variants features and price in india check all details here
மேலும்... #Bajaj CNG Bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+