கம்மி விலையில புது 180 சிசி பைக்கை வெளியிட்டுள்ளது பஜாஜ்.. இப்போ புதுசா அதிக பெர்ஃபாமன்ஸோட அட்டகாசமா இருக்கு!

இந்தியாவில் புதிய பல்சர் 180 மாடலை வெளியிட்டுள்ளது பஜாஜ். 2022ம் ஆண்டு இந்த பைக் மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது அந்நிறுவனம். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு தற்போது மீண்டும் இந்த பைக்கை இந்தியாவில் தற்போது வெளியிட்டுள்ளது. ரூ.1.22 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய பைக் மாடலை வெளியிட்டுள்ளது பஜாஜ். இந்த பைக் மாடல் குறித்த முழுமையான விவரங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

இன்ஜின்:

இந்த பைக்கில் 176.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைக் கொடுத்துள்ளது பஜாஜ் நிறுவனம். இந்த இன்ஜினானது 8,500 rpm-ல் 17 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 15 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2022ல் விற்பனை நிறுத்தப்பட்ட மாடலிலும் அதே அளவு பவரை வெளிப்படுத்தும் இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருந்தது.

Bajaj Pulsar 180

தற்போது டார்க்கின் அளவு மட்டும் 0.8 Nm வரை அதிகரித்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மிகவும் பிரபலமான பல்சர் 150 பைக் மாடலுடன் ஒப்பிடும் போது, புதிய பல்சர் 180 பைக்கின் இன்ஜினானது 3 hp வரை கூடுதல் பவரையும், 1.75 Nm வரை கூடுதல் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

பிற அம்சங்கள்:

புதிய 180 சிசி பைக்கின் இரண்டு பக்கமும் 17 இன்ச் வீல்களும், அதில் 90/120 செக்ஷன் டயர்களும் (முன்பக்கம்/பின்பக்கம்) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டயர்கள் இரண்டும் டியூப்லெஸ் தான். பிரேக்கிங்கிற்காக முன்பக்கம் 280 மிமீ டிஸ்க்கும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஷனுக்காக வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் செட்டப்புகளே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Bajaj Pulsar 180

15 லிட்டர் எரிபொருள் டேங்க்கைக் கொண்டிருக்கும் இந்த பைக் 156 கிலோ எடையையும் கொண்டுள்ளது. கிரௌண்டு கிளியரன்ஸ 165 மிமீ ஆக உள்ளது. பெரும்பாலான சாலைகளுக்கு இது போதுமானதாக இருக்கும். பிரதானமாக கருப்பு நிறத்தைக் கொண்ட பைக்காகவே இந்த பல்சர் 180-யை வடிவமைத்துள்ளது பஜாஜ். கருப்பு நிறத்திற்கு மேலே ஹைலைட்கள் போலவே, கோல்டு, ப்ளூ, கிரே, ரெட் மற்றும் ஒயிட் ஆகிய நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் தான் பல்சர் 150 பைக்கை புதிய LED விளக்குகள், நெகடிவ் LCD டேஷ்போர்டு ஆகிய அம்சங்களுடன் அப்டேட் செய்தது பஜாஜ். அந்த அனைத்து அம்சங்களும் புதிய பல்சர் 180 பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக கிளாஸியான பல்சர் 150 பைக்கில் சற்று பெரிய இன்ஜினைக் கொடுத்தது பல இருக்கிறது புதிய பஜாஜ் பல்சர் 180 பைக்.

என்ன விலையில் வெளியாகியுள்ளது?

இந்தப் புதிய பெரிய இன்ஜின் கொண்ட பல்சர் 180 மாடலை ரூ.1.22 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது பஜாஜ். இது பல்சர் 150 பைக்கை விட ரூ.12,000 வரை கூடுதலான விலையாகும். இந்த 180 சிசி பைக்கிற்கு நேரடி போட்டி என்றால் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் தான். இந்த போட்டியாளரை விட ரூ.4,000 வரை குறைவான விலையைக் கொண்டுள்ளது புதிய பஜாஜ் பல்சர் 180.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2022ல் இதன் விற்பனை நிறுத்தப்பட்ட பின்பு பல்சர் 150 மற்றும் பல்சர் 220F ஆகிய மாடல்களுக்கு இடையே போட்டி இல்லாமல் வெற்றிடமாக இருந்தது 180 சிசி பிரிவு. போட்டியின்றி தனியாக விற்பனையாகி வந்தது அப்பாச்சி 180. தற்போது மீண்டும் இந்த களமிறங்கியிருக்கிறது. 2022ல் போதிய விற்பனை இல்லை என்று தான் இதன் விற்பனையை நிறுத்தியது பஜாஜ். இப்போது இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் எந்தளவிற்கு வரவேற்பைப் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2026, 15:20 [IST]
English summary
Bajaj launched brand new pulsar 180 in india check all details here
மேலும்... #bajaj pulsar #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+