100 கிமீ மைலேஜ் தரும் பைக்கை அடிமாட்டு விலையில் விக்கறாங்க... ஹீரோ, ஹோண்டாவிற்கு எமனாக மாறிய முன்னணி நிறுவனம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina). அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாக திகழும் பஜாஜ் பிளாட்டினாவின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24,390 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 20,923 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 3,467 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Bajaj Platina

இதன் மூலம் பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனையில் 16.57 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes February 2026), பஜாஜ் பிளாட்டினா பைக் 9வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 8 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஷைன் (Honda Shine), பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe), டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ஹோண்டா சிபி யூனிகார்ன் (Honda CB Unicorn), டிவிஎஸ் ரைடர் (TVS Raider) ஆகிய பைக்குகள் உள்ளன.

Hero HF Deluxe

இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா பைக் 9வது இடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் பிளாட்டினா பைக் 100 சிசி மற்றும் 110 சிசி என மொத்தம் 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 100 சிசி வெர்ஷனில் 99.59 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8.2 பிஎஸ் பவரையும், 8.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இதன் விவை 66,015 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மறுபக்கம் இதன் 110 சிசி வெர்ஷனில் 115.06 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9.5 பிஎஸ் பவர் மற்றும் 9.9 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 69,832 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

பஜாஜ் பிளாட்டினா பைக்கின் 2 வெர்ஷன்களிலும் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்தான் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது இந்திய சந்தையில் கிடைக்கும் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 90-100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என அதை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஓட்டும் விதம் மற்றும் பைக்கின் கண்டிஷன் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பஜாஜ் பிளாட்டின பைக்கின் குறைவான எடை மற்றும் DTS-i இன்ஜின் உள்ளட்ட அம்சங்கள்தான், அதன் சிறப்பான மைலேஜிற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலை, நிறைவான மைலேஜ் ஆகியவை மட்டும் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் ப்ளஸ் பாயிண்ட்கள் கிடையாது. கூடவே பராமரிப்பு செலவு குறைவு, கையாள்வதற்கு எளிமையானது ஆகியவையும், பஜாஜ் பிளாட்டினா பைக்கின் மிகவும் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களாக உள்ளன.

டெலிவரி ஏஜெண்ட்கள் போன்ற வேலைகளை செய்து வருபவர்களுக்கு இது மிகவும் ஏற்ற பைக் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹோண்டா ஷைன் ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், பஜாஜ் பிளாட்டினா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 27, 2026, 14:11 [IST]
English summary
Bajaj platina sales report february 2026 17 per cent growth
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+