100 கிமீ மைலேஜ் தரும் பைக்கின் விலை வெறும் 66 ஆயிரம்தானா! ஹீரோ, ஹோண்டாவிற்கு எமனாக மாறிய முன்னணி நிறுவனம்!
இந்தியாவில் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு (Commuter Bikes) மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. கம்யூட்டர் ரக பைக்குகளின் விலை (Price) மிகவும் குறைவு. அத்துடன் அவற்றை பராமரிப்பதும் (Maintenance) மிகவும் எளிமையான விஷயமாக இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூட்டர் ரக பைக்குகள் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன.
இதன் காரணமாகவே இந்தியாவில் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளின் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கம்யூட்டர் ரக பைக்குகளின் பட்டியலை எடுத்தால், அதில் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) பைக்கிற்கு மிகவும் முக்கியமான ஒரு இடம் உண்டு.

பஜாஜ் பிளாட்டினா என்றாலே, அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது நிச்சயம் அதன் சிறப்பான மைலேஜாகதான் இருக்கும். பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 90-100 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருவதாக, அதன் உரிமையாளர்கள் ஒரு சிலர் பதிவு செய்துள்ளனர்.
ஓட்டும் விதம், பைக்கை பராமரிக்கும் விதம் மற்றும் சாலைகளின் கண்டிஷன் ஆகியவற்றை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம் என்றாலும் கூட, பஜாஜ் பிளாட்டினா பைக்கை வாங்கும் ஒருவர் மைலேஜ் விஷயத்தில் ஏமாற்றமடைய மாட்டார் என்பது உறுதி. இதன் காரணமாக அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் கூட (2006ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகமானது), இன்னமும் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. பஜாஜ் பிளாட்டினா பைக்கின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 33,520 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் 27,336 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 6,184 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 23 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியுடன், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Most Sold Bikes January 2026), பஜாஜ் பிளாட்டினா 10வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் எக்ஸ்எல், டிவிஎஸ் ரைடர், ஹோண்டா யூனிகார்ன் மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஆகிய பைக்குகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் பிளாட்டினா பைக் 100 சிசி மற்றும் 110 சிசி என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் ஆரம்ப விலை முறையே 66,015 ரூபாய் மற்றும் 69,832 ரூபாயாக உள்ளது. இவை பஜாஜ் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை சிறப்பாக இருக்கிறது என நாங்கள் கருதுகிறோம். ஹீரோ ஸ்பிளெண்டர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹோண்டா ஷைன் போன்ற பைக்குகளுக்கு எல்லாம் பஜாஜ் பிளாட்டினா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








