பல்சர் 150 பைக்கை அப்டேட் செய்த பஜாஜ்.. இப்போ பைக்க வாங்க ஷோரூம்ல கூட்டம் அள்ளுது
பல்சர் 150 பைக்கிற்கு புதிய நிறத்தைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது பஜாஜ். சில நாட்களுக்கு முன்பு தான் முற்றிலும் புதிய பல்சர் 180 பைக் மாடலை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். அந்த பைக்கில் பல்வேறு நிறத் தேர்வுகளை பஜாஜ் கொடுத்திருந்தது. அதில் பிளாக் கோல்டு நிறமும் ஒன்று. அந்த பிளாக் கோல்டு நிறத்தை தற்போது பல்சர் 150 பைக்கிலும் கொடுத்து அப்டேட் செய்துள்ளது பஜாஜ்.
இந்த சிறிய அப்டேட்டைத் தவிர பல்சர் 150 பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதே பிளாக் கோல்டு நிறமானது பல்சர் 125 பைக் மாடலிலும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் கோல்டு நிறம் கொண்ட பைக் மாடலானது பிரதானமாக கருப்பு நிறத்தையே முழுவதுமாகக் கொண்டிருக்கும். அதில், ஹெட்லைட் கவுல், எரிபொருள் டேங்க் மற்றும் ரியர் செக்ஷனில் மட்டும் கோல்டு நிற ஹைலைட் கொடுக்கப்பட்டிருக்கும். இது பைக்கிற்கு ஸ்டைலான லுக்கைக் கொடுக்கிறது.

இந்த பிளாக் கோல்டு நிறத்தைத் தவிர்த்து, எபோனி பிளாக் செர்ரி ரெட், எபோனி பிளாக் இன்க் ப்ளூ, எபோனி பிளாக் டார்க் கிரே மற்றும் பாட்டில் கிரீன் வித் காப்பர் பெய்ஜ் ஆகிய நிறத்தேர்வுகளையும் இந்த பஜாஜ் பல்சர் 150 பைக் மாடல் கொண்டிருக்கிறது. 150 SD, 150 SD UG மற்றும் 150 TD UG என மூன்று வேரியன்ட்களாக இந்த 150 சிசி பைக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது பஜாஜ்.
மேலே குறிப்பிட்டிருப்பது போல இந்தப் புதிய நிறம் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து பைக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 13.8 hp பவர் மற்றும் 13.25 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

மேலே கூறிய மூன்று வேரியன்ட்களிலும் டயர்கள், சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் பிரேக்கிங் செட்டப் ஆகிய அம்சங்களில் வேறுபாடுகள் இருக்கிறது. SD, SD UG மற்றும் TD UG ஆகிய மூன்று வேரியன்ட்கள். இங்கே SD என்பது சிங்கிள் டிஸ்க் பிரேக் செட்டப்பையும், TD என்பது ட்வின் டிஸ்க் பிரேக் செட்டப்பையும் குறிக்கிறது.
அடிப்படையான SD மற்றும் இடைநிலை SD UG ஆகிய வேரியன்ட்களில் 17 இன்ச் அலாய் வீல்களும், முன்பக்கம் 80 மற்றும் பின்பக்கம் 100 செக்ஷன் டயர்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 31 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வேரியன்ட்களில் முன்பக்கம் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வேரியன்ட்களும் முறையே ரூ.1.10 லட்சம் மற்றும் ரூ.1.13 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டாப் எண்டான TD UG வேரியன்டானது ரூ.1.17 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இந்த வேரியன்டில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்டப்போடு, முன்பக்கமும் பின்பக்கம் 90 செக்ஷன் மற்றும் 120 செக்ஷன் டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரேக்கிங்கிற்காக இந்த பைக்கில் முன்பக்கம் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இளைஞர்களின் மனதைக் கவர்த்த சில பைக் மாடல்களில் இந்த பல்சர் 150-யும் ஒன்று. நல்ல பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜைத் தரக்கூடிய பைக்காக இருப்பதுடன், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான சற்று பிராக்டிகலான பைக்காவும் இது இருப்பது இந்தியாவில் இந்த பைக் பிரபலமாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








