ஒட்டுமொத்த நாடும் கொண்டாடிய பல்சர் பைக்! மீண்டும் யு-டர்ன் போட்டு வருது!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்த தலைமுறை பல்சர் 150 பைக்கை இந்த ஜூலை மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்சர் பைக்குகளின் 25 ஆண்டுகால நிறைவை கொண்டாடும் விதமாக புதிய பல்சர் 150 பைக் அறிமுகம் செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புனேவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் அடையாளமே அதன் பல்சர் பைக்குகள் தான் என சொன்னால் அதில் ஆச்சிரியம் இல்லை. முதன்முதலாக 2001ஆம் ஆண்டில் முதல் பல்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பல்சர் பைக்குகளுக்கு வயது இப்போது 25. 2001ஆம் ஆண்டின் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் பைக் மாடல், பல்சர் 150 ஆகும்.

2001ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பல்சர் 150, அதுவரையில் எந்த பட்ஜெட் விலை பைக்கிலும் இல்லாத வகையில் மஸ்குலரான ஸ்டைல், நேர்த்தியான இயக்கம் மற்றும் நீண்ட கால செயல்திறனை வழங்கியதால் மக்கள் விரைவாகவே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால், அதன்பின் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த பல்சர் பைக்குகளும் பெரிய வரவேற்பை பெற்று சந்தையில் தனி அடையாளத்தை ஏற்படுத்தின.
எத்தனை பல்சர் பைக் மாடல்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டாலும், பல்சர் 150 மட்டும் எப்போதுமே தனி ஸ்பெஷல் ஆகும். கடந்த பல வருடங்களில் பல்சர் 150 இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக உருவெடுத்து நிற்கிறது. இத்தகைய சிறப்புமிக்க பல்சர் 150 பைக் தான் விரைவில் நியூ ஜென்ரேஷனுக்கு அப்கிரேட் செய்யப்பட உள்ளது.

இதன்படி, பல்சர் 150 பைக்கில் புதிய அப்டேட்களை பஜாஜ் நிறுவனம் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலமாக, புதிய சேசிஸ், அப்டேட்டான என்ஜின், திருத்தப்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் மாடர்ன் வசதிகளை பல்சர் 150 பெறலாம். இவ்வாறு மார்க்கெட் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை பெற்றாலும், அதேநேரம் பல்சர் 150 பைக்கிற்கே உண்டான அடையாளத்துடன் தான் புதிய பல்சர் 150 பைக்கும் இருக்கும் என்பது உறுதி.
இவற்றை விட முக்கியமான ஒரு தகவலும் நமக்கு தற்போது கிடைக்க பெற்றுள்ளது. அது என்னவென்றால், பழைய கிளாசிக் தோற்றத்திலான பல்சர் 150 பைக்கையும் கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் அறிமுகம் செய்யவும் பஜாஜ் திட்டமிட்டுள்ளதாம். அதாவது, தொடர்ந்து விற்பனை செய்யும் வகையில் இல்லாமல், குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யும் வகையில் லிமிடெட் எடிஷனாக இது அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
இந்த கிளாசிக் பல்சர் 150 பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், ஸ்போக் சக்கரங்கள் மற்றும் ட்வின்-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரையை எதிர்பார்க்கலாம். விற்பனையில் பஜாஜ் பல்சர் 150 பைக்கிற்கு TVS அப்பாச்சி RTR160 2V, ஹோண்டா யூனிகார்ன் மற்றும் யமஹா FZ-Fi உள்ளிட்ட பைக்குகள் போட்டியாக விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தில் இருந்து முதன்முதலாக பல்சர் 150 பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 125சிசி-யிலும் பல்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது, அதேநேரம் 220சிசி வரையிலும் பல்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், பல்சர் 150 பைக் மட்டும் தனித்துவமாக நிற்கிறது.
இத்தகைய பைக் புதிய தலைமுறை அப்கிரேட் உடன் அறிமுகம் செய்யப்படுவதால், மீண்டும் பல்சர் பைக்குகளின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி. குறிப்பாக, கிளாசிக் தோற்றத்திலான பழைய பல்சர் 150 பைக் மீண்டும் அறிமுகம் செய்யப்படுவது பெரிதும் கவனத்தை ஈர்க்கிறது. யார் யாரெல்லாம் புதிய பல்சர் 150 பைக்கிற்காக காத்திருக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications