நாடே எதிர்பார்க்கும் பல்சர் பைக் மீண்டும் பஜாஜ் ஷோரூமில்... 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வந்துட்டனு சொல்லு!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் பொதுவாகவே அதன் பைக்குகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்கிரேட் செய்வது வழக்கம். பெரும்பாலும் இந்த அப்கிரேட்கள் மிகவும் சில மாற்றங்களாக மட்டுமே கொண்டுவரப்படுவதால் அந்த அப்கிரேட்கள் குறித்த அறிவிப்பு எதுவும் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வெளிவருவது இல்லை; சைலண்ட்டாக அப்கிரேட் செய்யப்பட்டு டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும்.
சில நேரங்களில் புதிய பஜாஜ் பைக்குகள் கூட அறிமுகத்திற்கு முன்பாகவே டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்படுவது உண்டு. அந்த வகையில், மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ள பல்சர் 180 (Pulsar 180) எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி அப்கிரேட் செய்யப்பட்டு ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 'சுராஜ் பஜாஜ் எக்ஸ்பர்ட்' (Suraj Bajaj Expert) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தின் மூலம் கிடைத்துள்ள படங்களை இங்கே காணலாம்.

இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்தே பல பல்சர் பைக்குகள் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான், பல்சர் 180 ஆகும். இருப்பினும், புதிய பல்சர் பைக்குகளின் அறிமுகத்தால் பல்சர் 180 பைக்கின் விற்பனையை நிறுத்திய பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதனை மீண்டும் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
இதற்கிடையில், தனது வழக்கமான பாணியில் அறிமுகத்திற்கு முன்னதாக புதிய பல்சர் 180 பைக்குகளை அறிமுகத்திற்கு முன்னதாக டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பான படங்களை வைத்து பார்க்கும்போது, புதிய பல்சர் 180 பைக் முன்பு கொண்டிருந்த செமி-ஃபேரிங் (Semi-fairing) டிசைனை கொண்டில்லை. அதாவது, பைக்கை சுற்றிலும் வழங்கப்பட்டு இருந்த சில பேனல்கள் நீக்கப்பட்டு, பைக் எளிமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

இதே போன்றதான தோற்றத்தை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த 2026 பல்சர் 125 மற்றும் பல்சர் 150 பைக்குகளிலும் பார்க்க முடிந்தது. புதிய பல்சர் 180 பைக்கிலும் வழக்கம்போல் அடிப்படையான நிறமாக கருப்பு உள்ளது. பெட்ரோல் டேங்க் பகுதியில் சிவப்பு மற்றும் கிரே நிற ஷேட்கள் வழங்கப்பட்டுள்ளன. '180' எண்ணை பைக்கின் பின்பக்கத்தில் பார்க்க முடிகிறது.
2026 பஜாஜ் பல்சர் 180 பைக் பல்வேறு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் தற்போது ஷோரூமில் காட்சித் தந்துள்ள பல்சர் 180 பைக் சிங்கிள்-பீஸில் இருக்கை மற்றும் பின்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகளை கொண்ட வேரியண்ட்டாக உள்ளது. ஹேண்டில்பாருக்கு மத்தியில் ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை இருப்பினும், அதில் நேவிகேஷன் (Navigation) வசதி இல்லை.
இதனால், புதிய பல்சர் 180 பைக்கில் இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை உடன் நேவிகேஷன் உள்ளிட்ட அட்வான்ஸ்டு வசதிகளை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையை கொண்ட டாப் வேரியண்ட்கள் எதிர்பார்க்கலாம். தற்போது ஷோரூமுக்கு வந்துள்ள பல்சர் 180 பைக்கில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் புதிய பல்சர் 125 மற்றும் பல்சர் 150 பைக்குகளில் உள்ளதை போன்று காட்சி தருகின்றன.
பைக்கின் முன்பக்க ஃபெண்டர்களில் கார்பன் ஃபைபர் பேட்டர்னையும் பார்க்க முடிகிறது. புதிய பல்சர் 180 பைக்கில் முக்கிய மாற்றம் என்னவென்றால், அதன் எக்ஸாஸ்ட் குழாய் ஆகும். 2026 பல்சர் 180 பைக்கில் ஸ்டைலான தோற்றத்தில் கருப்பு நிறத்தில் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய எக்ஸாஸ்ட் குழாய் தற்போதைக்கு பல்சர் 220எஃப் (220F) பைக்கில் மட்டுமே வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரபலமான பஜாஜ் பல்சர் பைக்குகளுள் பல்சர் 180 ஒன்று என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இத்தகைய பைக்கை பஜாஜ் நிறுவனம் மீண்டும் கொண்டுவருவது, மார்க்கெட்டில் பல்சர் பைக்குகளின் விற்பனையை அதிகரிக்கும் என்பது உறுதி. தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், புதிய பல்சர் 180 பைக்கின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








