பல்சர் 220F பைக்கை அப்டேட் செய்துள்ளது பஜாஜ்.. புதிதாக என்னென்ன மாறியிருக்கிறது?

இந்தியாவில் பஜாஜ் விற்பனை செய்து வரும் டைம்லெஸ் பைக்கான பல்சர் 220F (Bajaj Pulsar 220F) அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த பைக்கிற்கு புதிய கிராஃபிக்ஸைக் கொடுத்து, இரண்டு புதிய நிறங்களுடன் பஜாஜ் அப்டேட் செய்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அப்டேட் செய்திருக்கிறது.

கடந்த முறை இந்த 20 சிசி பைக்கிற்கு காஸ்மெடிக் அப்டேட்களை மட்டும் பஜாஜ் கொடுக்க நிலையில், இந்த முறை வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய வசதியுடன் அப்டேட் செய்துள்ளது. இதுவரை பல்சர் 220F-ல் ஹாலஜன் முகப்பு விளக்கையே பஜாஜ் கொடுத்து வந்தது. தற்போது அதனை LED முகப்பு விளக்காக மேம்படுத்தியிருக்கிறது பஜாஜ். LED முகப்பு விளக்குகளுடனேயே LED DRL-களும் சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Bajaj Pulsar 220F

இந்த ஒரு கூடுதல் வசதி மேம்படுத்தப்பட்டிருப்பதைத் தவிர பைக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இன்ஜினும் அதே 220 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு தான். இந்த இன்ஜினானது 20.9 hp பவர் மற்றும் 18.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

வசதிகள் கூடும் போது விலையும் கொஞ்சம் கூடுவது இயல்பு தான். ஆனால் இந்த முறை கொஞ்சம் அதிமாகவே பல்சர் 220F பைக்கின் விலையை உயர்த்தியிருக்கிறது பஜாஜ். சுமார் 8,000 ரூபாய் வரை புதிய பைக்கின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. ஒரே ஒரு வேரியன்டாக மட்டுமே பல்சர் 220F விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை 1.36 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் இனி வாங்கலாம்.

Bajaj Pulsar 220F

பஜாஜின் பல்சர் லைன்-அப்பில் பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் பைக்காக இந்த பல்சர் 220F இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கக்கூடிய பல்சர் பைக்குகளில் ஒன்றாகவும் இந்த 220 சிசி பைக் உள்ளது. இந்த பைக்கின் டிசைனில் பஜாஜ் எந்த மாற்றத்தையும் செய்யாது, செய்தாலும் வாடிக்கையாளர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது தான் உண்மை.

ஆம், சில பைக்குகள் மாற்றமின்றி அப்படியே இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள். அப்படியான பைக்குகளில் இந்த பல்சர் 220F-ம் ஒன்று. செமி ஃபேரிங்குடன் இந்தியாவில் வேறு எந்த குறைவான விலை பைக்கும் கொண்டிராத தனித்துவமான மற்றும் கிளாஸியான டிசைனை இந்த பைக் கொண்டுள்ளது.

2022ல் புதிதாக 250 சிசி பல்சர் பைக்குகளை பஜாஜ் வெளியிட்டது. அவற்றின் மீது வாடிக்கையாளர்களின் கவனத்தை திருப்பும் பொருட்டு இந்த பல்சர் 220F பைக்கின் விற்பனையை நிறுத்தியது. ஆனால், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்ததன் காரணமாக 2023ம் ஆண்டே இந்த பைக்கை எந்த வித மாற்றமும் இன்றி மீண்டும் வெளியிட்டது பஜாஜ்.

கிளாஸிக் பல்சர் 125 மற்றும் பல்சர் 150 ஆகிய பைக்குகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பஜாஜ் திட்டமிட்டிருக்கிறது. புதிய பிளாட்ஃபார்ம், புதிய டிசைன் என புதிய பைக்குகளைக அவை மாறவிருக்கின்றன. ஆனால் ஒரு பைக் மட்டும் அப்படியே தான் இருக்கும். சரிதான், அது இந்த கிளாஸியான பல்சர் 220F பைக் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றாலும் ஒரே அடியாக 8,000 ரூபாய் விலை உயர்வு என்பது 1.50 லட்சம் விலைக்குள்ளான பைக்கிற்கு கொஞ்சம் அதிகம் தான். எனினும் ஹாலஜன் முகப்பு விளக்குகளுக்கு, LED விளக்குகள் எவ்வளவோ சிறப்பானவை என்பதால் இந்த விலை கொடுக்கலாம் தான். கடந்த அப்டேட்டிலேயே இந்த பைக்கிற்கு LED இன்டிகேட்டர்களை பஜாஜ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, June 18, 2026, 20:14 [IST]
English summary
Bajaj pulsar 220f updated with new useful features and price hiked
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out