இனி கிடைக்காது! பல்சர் பைக்கை ஷோரூம்களுக்கு அனுப்புவதை நிறுத்திய பஜாஜ்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar). பஜாஜ் நிறுவனம் பல்சர் பைக்கின் ஏராளமான வேரியண்ட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதில், பஜாஜ் பல்சர் என் 125 பைக்கும் (Bajaj Pulsar N 125) ஒன்றாகும்.

கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் பஜாஜ் பல்சர் என் 125 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள்ளாக பஜாஜ் நிறுவனம் பல்சர் என் 125 பைக்கின் விற்பனையை நிறுத்தி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bajaj Pulsar N 125

பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இன்னமும் பல்சர் என் 125 பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் பஜாஜ் நிறுவனம் தனது டீலர்ஷிப்களுக்கு பல்சர் என் 125 பைக்கை அனுப்புவதை நிறுத்தி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் என் 125 பைக்கானது, மற்ற பல்சர் பைக்குகள் உடன் பிளாட்பார்ம்மை பகிர்ந்து கொள்ளவில்லை. மாறாக புத்தம் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் போதுமான வசதிகள் இல்லை போன்ற காரணங்களால் அதன் விற்பனை சிறப்பாக இல்லை. எனவேதான் பஜாஜ் நிறுவனம் பல்சர் என் 125 பைக்கின் விற்பனையை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

Bajaj Pulsar N 125 Side View

ஆனால் இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட, நேபாளம், பெரு, மொராக்கோ மற்றும் கொலம்பியா போன்ற வெளிநாடுகளில் பஜாஜ் பல்சர் என் 125 பைக் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பஜாஜ் நிறுவனம் பல்சர் என் 125 பைக்கை புதிய வசதிகள் உடன் அப்டேட் செய்து இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

அல்லது பஜாஜ் பல்சர் என் 125 பைக் உருவாக்கப்பட்டுள்ள பிளாட்பார்ம் அடிப்படையில் வேறு ஏதாவது ஒரு புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன. எனவே இந்த விவகாரத்தில் என்ன நடக்க போகிறது? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் (Hero Xtreme 125 R) மற்றும் ஹோண்டா சிபி 125 ஹார்னெட் (Honda CB 125 Hornet) போன்ற பைக்குகள் உடன், பஜாஜ் பல்சர் என் 125 போட்டியிட்டு வந்தது. பஜாஜ் பல்சர் என் 125 பைக்கில் 124.59 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

அதிகபட்சமாக 12 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் 94,258 ரூபாய் என்ற விலையில் பஜாஜ் பல்சர் என் 125 விற்பனையாகி கொண்டிருந்தது. இது பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை (Tamil Nadu Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் நிறுவனம் விற்பனையில் சோபிக்க தவறும் வாகனங்களின் விற்பனையை நிறுத்துவது என்பது புதிதல்ல. பஜாஜ் மட்டுமல்லாது, அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற தவறிய பல்வேறு வாகனங்களின் விற்பனை கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியலில் பஜாஜ் பல்சர் என் 125 பைக்கும் இணைந்துள்ளது.

Article Published On: Wednesday, July 1, 2026, 14:40 [IST]
English summary
Bajaj pulsar n 125 discontinued due to low sales
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out