4 வால்வு எஞ்சின், கூடுதல் வசதிகளுடன் பஜாஜ் என்160 எஸ் பைக் அறிமுகம்... விலை, சிறப்பம்சங்கள் விபரம்!

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வரும் பல்சர் வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய N160 S மற்றும் N160 SS மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 160சிசி பிரிவில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், புதிய எஞ்ஜின், ரைடிங் மோடுகள், ரைடு பை வயர் த்ராட்டில் கன்ட்ரோல் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப அப்டேட்களுடன் இந்த இரண்டு மாடல்களும் களமிறங்கியுள்ளன.

புதிய பஜாஜ் பல்சர் என்160 மாடலுக்கு ரூ.1.34 லட்சமும், என்160 எஸ்எஸ் மாடலுக்கு ரூ.1.43 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தற்போதைய என்160 எஸ் மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bajaj N160 S

புதிய 4-வால்வு எஞ்ஜின்

இந்த புதிய மாடல்களில் மிகப்பெரிய சிறப்பம்சம் 4 வால்வு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 164.5சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 18.5எச்பி பவரையும், 14.5என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. தற்போதைய 2 வால்வு இன்ஜினுடன் ஒப்பிடும்போது இந்த மாடலின் எஞ்சின் 2.5எச்பி கூடுதல் பவரை வழங்கும் திறன் கொண்டதாக வந்துள்ளது. மேலும், ரைடு பை வயர் த்ராட்டில் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

நான்கு ரைடிங் மோடுகள்

புதிய என்160 எஸ் மற்றும் என்160 எஸ்எஸ் பைக்குகளில் ரோடு (Road), ரெயின் (Rain), ஸ்போர்ட் (Sport) மற்றும் ஆஃப்ரோடு (off-road) என நான்கு ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மழை, நகரப் போக்குவரத்து, வேகமான சாலைப் பயணம் மற்றும் மோசமான சாலை போன்ற வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப பைக்கின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள முடியும். இதனுடன் Crawl Technology என்ற வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் குறைந்த வேகத்தில் அதிக கிளட்ச் பயன்பாடு இல்லாமல் பைக்கை கட்டுப்படுத்துவதற்கு இந்த தொழில்நுட்பம் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Bajaj N160 S

பிரீமியம் அம்சங்கள்

இந்த இரண்டு புதிய மாடல்களில் என்160 எஸ்எஸ் தான் அதிக பிரீமியம் அம்சங்களை பெறுகிறது. குறிப்பாக 5-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், Google Maps மிரரிங் மற்றும் ஸ்மார்ட் நேவிகேஷன் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், என்160 எஸ்எஸ் மாடலில் டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் வழுக்கும் சாலைகளில் பைக்கை சிறப்பாக கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மறுபுறம், என்160எஸ் மாடலில் எல்சிடி கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதில் புளுடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் போன்ற வசதிகள் இடம்பெறுகின்றன.

Bajaj N160 SS

பிரேக்குகளிலும் மாற்றம்

புதிய என்160 எஸ் மாடல்களின் எஞ்சின் கூடுதல் பவர் வெளிப்படுத்துவதற்கு ஏற்ப பிரேக் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய பிரேக் டிஸ்க்குகள் உள்ளிட்ட அப்டேட்டுகள் பைக்கின் பிரேக்கிங் திறனை மேம்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. தோற்றத்திலும் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றாலும், கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில் அதிக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

வண்ணத் தேர்வுகள்

புதிய என்160எஸ் மற்றும் என்160 எஸ்எஸ் ஆகிய இரண்டும் அட்லாண்ட்டிக் புளூ (Atlantic Blue), பியர்ல் மெட்டாலிக் ஒயிட் (Pearl Metallic White) மற்றும் புரூக்ளின் பிளாக் (Brooklyn Black) ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

Bajaj N160 S

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மொத்தத்தில், வெறும் எஞ்ஜின் அப்டேட் என்ற அளவில் இல்லாமல், எலக்ட்ரானிக் த்ராட்டில் கன்ட்ரோல், நான்கு ரைடிங் மோடுகள், TFT டிஸ்ப்ளே, நேவிகேஷன் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற அம்சங்களை சேர்த்து என்160 இன்னும் பிரீமியம் தயாரிப்பாக மாற்றியுள்ளது பஜாஜ். குறிப்பாக அதிக பவர் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை விரும்பும் 160cc பைக் வாடிக்கையாளர்களுக்கு புதிய என்160 எஸ் மற்றும் என்160 எஸ்எஸ் குறிப்பிடத்தக்க தேர்வுகளாக மாற வாய்ப்புள்ளது.

Article Published On: Saturday, August 8, 2026, 9:21 [IST]
English summary
Bajaj pulsar n160 s and n160 ss launched india 4 valve engine tft features price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X