ரூ.4.83 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் பல்சர் பைக்.. ஏன் இவ்வளவு விலை உயர்த்திட்டாங்க?

இந்தியாவில் புதிதாக 350 சிசி இன்ஜினுடன் கூடிய பல்சர் மற்றும் டாமினார் மாடல்களை வெளியிட பஜாஜ் திட்டமிட்டு வருவதற்கு இடையில் வெளிநாடுகளிலும் புதிய பைக்கை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் புதிய பல்சர் NS400Z பைக் மாடலை வெளியிட்டுள்ளது பஜாஜ். இதனை பல்சர் NS400 என்ற பெயரில் அந்நாட்டில் வெளியிட்டுள்ளது.

இந்த பைக் மட்டுமின்றி, பல்சர் NS125 பைக்கும், டாமினார் 400 பைக்கானது மாஸ்டர் 400 என்ற பெயரிலும் அந்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய பஜாஜ் பல்சர் NS400 பைக் மாடல் என்ன விலையில் ஸ்பெயினில் வெளியாகியிருக்கிறது என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

Bajaj Pulsar NS400

என்னென்ன வேறுபடுகிறது? கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் பல்சர் NS400Z தான் அப்படியே NS400 ஆக ஸ்பெயினில் வெளியாகியிருக்கிறது. எனினும் இந்திய மாடலில் இருக்கும் சில அம்சங்கள் ஸ்பெயின் மாடலில் இல்லை. குறிப்பாக அதில் கூடுதல் பவரைக் கொடுக்கும் ஸ்போர்ட் மோடு கொடுக்கப்படவில்லை.

இந்திய மாடல் மற்றும் ஸ்பெயின் மாடல் இரண்டிலுமே 373 சிசி, சிங்கள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது முன்னர் கேடிஎம்மின் 390 சீரிஸ் பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. கேடிஎம் புதிய மேம்படுத்தப்பட்ட இன்ஜினை பயன்படுத்தத் தொடங்கியவுடன் இந்த முந்தைய தலைமுறை இன்ஜின் பஜாஜ் பைக்குகளுக்கு வந்துவிட்டது. இந்த இன்ஜினானது 40 hp பவர் மற்றும் 35 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Bajaj Pulsar NS400

முன்னதாக இந்த பைக்கில் ரோடு, ரெயின் மற்றும் ஆஃப்-ரோடு ஆகிய மூன்று ரைடிங் மோடுகளை மட்டுமே கொடுத்து வந்தது பஜாஜ். கடந்தாண்டு நான்காவதாக ஸ்போர்ட் மோடு என்ற புதிய ரைடிங் மோடையும் கொடுத்தது. இந்த மோடில் பவர் 3 hp வரை உயர்ந்து 43 hp ஆக ரைடருக்குக் கிடைக்கும். இந்தக் கூடுதல் பவரைக் கொடுக்கும் அம்சம் ஸ்பெயின் பல்சர் NS400 பைக்கில் கொடுக்கப்படவில்லை.

இதுதவிர சில அடிப்படை பாகங்களிலும் வேறுபாடுகள் இருக்கிறது. குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் ஸ்பெயின் பைக் மாடலில் பின்பக்கம் 140 செக்ஷன் MRF ஸாப்பர் டயர்களைக் கொடுத்துள்ளது பஜாஜ். இந்திய மாடலில் 150 செக்ஷன் அப்போலோ ஆல்ஃபா H1 டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இது போன்ற சில அம்சங்களைத் தவிர ஸ்பெயின் பைக் மாடலுக்கும் இந்திய பைக் மாடலுக்கும் பெரியளவில் வேறு எந்த வேறுபாடுகளும் இல்லை.

விலை என்று வரும் போது ஸ்பெயினில் 4,499 யூரோ என்ற விலையில் புதிய பல்சர் NS400 பைக் மாடலை வெளியிட்டுள்ளது பஜாஜ். இது இந்திய மதிப்பிற்கு ரூ.4.83 லட்சமாகும். ஆனால் இது ஸ்பெயினில் சற்று குறைவான விலை தான். குறிப்பாக கேடிஎம் டியூக் 125 பைக் மாடலின் 5,299 யூரோ (இந்திய மதிப்பிற்கு ரூ.5.69 லட்சம்) என்ற விலையை விடக் குறைவான விலையையே பஜாஜ் பல்சர் NS400 கொண்டுள்ளது.

125 டியூக்கை விடக் குறைவான விலை, ஆனால் அதனை விட அதிக பெர்ஃபாமன்ஸ் என்பது சிறப்பான விற்பனைப் புள்ளியாக இருக்கும். இந்தியாவில் பல்சர் NS400Z பைக் மாடலை ரூ.1.94 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது பஜாஜ். தற்போதைய பைக்கில் இருப்பதை விட சற்று சிறியதாக 350 சிசி இன்ஜின் கொண்ட பல்சர் மாடலையும் விரைவில் அந்நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

125 டியூக்கை விட குறைவான விலை என்றாலும், மற்ற 350 சிசி மற்றும் 400 சிசி பைக்குகளுக்கு இணையாகவே ஸ்பெயினில் பல்சர் NS400 பைக்கின் விலை உள்ளது. ஆனால் இந்தியாவில் 150 சிசி பைக்குகளுக்கு இணையான விலையிலேயே இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையில் விலைக்கேற்ற பைக் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் பல்சர் NS400Z தான் அனைத்து மாடல்களையும் பின்தள்ளி முதலிடத்தில் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 6, 2026, 9:07 [IST]
English summary
Bajaj pulsar ns400 launched in spain check all details here
மேலும்... #bajaj auto #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+