40 எச்பி பவர், TFT டிஸ்ப்ளே... வந்துவிட்டது புதிய பல்சர் NS400Z பைக்.. வெறும் ரூ.1.90 லட்சம் மட்டுமே!!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் உயரிய வகை மாடலாக பல்சர் NS400Z பைக் விற்பனையில் உள்ளது. இந்தியாவின் 350சிசி மார்க்கெட்டில் தற்போது சரியான பட்ஜெட்டில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள், அதிக செயல்திறன் மிக்க மாடலாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில், பயணங்களின்போது இளம் ரைடர்களுக்கு தேவைப்படும் நடைமுறை பயன்பாட்டுக்கு உகந்த சில புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்த்து NS400Z பைக்கை சந்தையில் களமிறக்கி உள்ளது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். புதிய தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த பைக்கிற்கு ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலில் மிக முக்கிய அம்சமாக 5 அங்குல TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுடன் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக விற்பனையில் இருந்த Pulsar NS400Z உடன் ஒப்பிடும்போது, இது ரைடர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும். மேலும், தகவல்களை புதிய TFT திரை மூலம் தெளிவாகப் பார்க்க முடிவதுடன், ஸ்மார்ட்போன் இணைப்பு சார்ந்த பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.
புதிய TFT கன்சோல்
இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள புதிய 5 அங்குல TFT டிஸ்ப்ளேவில் பைக்கின் வேகம், எஞ்சின் சுழல் வேகம், எரிபொருள் அளவு, ரைடிங் மோடு உள்ளிட்ட வழக்கமான தகவல்களுடன் கூடுதல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்போனை பைக்குடன் இணைத்த பிறகு மிரரிங் முறையில் கூகுள் மேப் வழிகாட்டுதல் வசதியை TFT திரையில் பார்க்க முடியும்.

புளூடூத் இணைப்பு மூலம் பாடல் கேட்பதற்கான கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகளையும் பயன்படுத்த முடியும். பயணத்தின்போது தேவையான ஆவணங்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரைடர்கள் தங்களது சுற்றுப் பயண நேரத்தை பதிவு செய்ய Lap Timer வசதியும் உள்ளது.
பாதுகாப்பிலும் கூடுதல் வசதிகள்
புதிய Pulsar NS400Z-ல் பானிக் பிரேக் அலர்ட் என்ற பாதுகாப்பு வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. திடீரென பிரேக் பயன்படுத்தும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை வழங்கும் வகையில் இந்த வசதி செயல்படும். இந்த பைக்கில் 4 ரைடிங் மோடுகள் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.
சக்திவாய்ந்த எஞ்சின்
புதிய TFT கன்சோல் வந்திருந்தாலும், பல்சர் NS400Z பைக்கின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. இதில் 349சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 40 பிஎஸ் பவரையும் 33 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் (USD) ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகரப் பயன்பாடு மட்டுமின்றி நெடுஞ்சாலை பயணத்திற்கும் இந்த பைக் ஏற்றதாக இருக்கும்.
விலை எவ்வளவு?
புதிய பஜாஜ் பல்சர் NS400Z TFT மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,90,015 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது விலை ரூ.4,000 அளவுக்கு உயர்த்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், கூடுதல் விலைக்கு பதிலாக நவீன TFT கன்சோல், Google Maps mirroring, Bluetooth connectivity, USB Type-C சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதால், தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் இளம் ரைடர்களுக்கு இந்த புதுப்பிக்கப்பட்ட NS400Z கூடுதல் மதிப்பை வழங்கும் என்று கூற முடியும்.


Click it and Unblock the Notifications


