350 சிசி இன்ஜின் கொண்ட பல்சர் NS400Z.. இந்த விலையில தான் வெளியாகப் போகுது?

350 சிசி இன்ஜின் கொண்ட பஜாஜ் பல்சர் மாடல் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கிவிட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 350 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரியை குறைத்தும் (18%), 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட மாடல்கள் மீதான வரியை உயர்த்தியும் (40%) அறிவித்தது மத்திய அரசு. இது 400 சிசி அல்லது அதற்கு மேலான பிரிவில் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குப் பின்னடைவானது.

அதில் பஜாஜ், ட்ரையம்ப், கேடிஎம் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை. அப்போது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக்குகளில் சற்று சிறிய இன்ஜினைக் கொடுத்து அப்டேட் செய்யவிருப்பதாகத் தெரிவித்தது பஜாஜ். அதன் ஒரு பகுதியாகவே 350 சிசி இன்ஜினுடன் தயாரிக்கப்பட்ட பல்சர் 400Z பைக் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த பைக்கின் விலை குறித்த விவரங்கள் தற்போது கசிந்திருக்கின்றன.

Bajaj Pulsar NS400Z

புதிதாக அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பல்சர் 400Z பைக்கில் 349.13 சிசி இன்ஜினை பஜாஜ் பயன்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு பயன்பாட்டில் இருந்த 373 சிசி இன்ஜினையே கொஞ்சம் மறுவடிவமைப்பு செய்து 349 சிசியாக மாற்றியிருக்கிறது பஜாஜ். இந்த சற்று சிறிய இன்ஜின் கொண்ட பைக் உருவாக்கத்தில் இருக்கும் போது, குறைவான வரி காரணமாக விலை கணிசமான அளவில் குறையும் எனத் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

புதிய 350 சிசி பல்சர் NS400Z பைக்கை ரூ.1,93,500 என்ற விலையில் பஜாஜ் வெளியிடவிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. முந்தைய பெரிய இன்ஜின் கொண்ட பைக்கை ரூ.1,93,900 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் பஜாஜ் விற்பனை செய்து வந்தது. வெறும் ரூ.400 மட்டுமே குறைவான விலையில் அளவு குறைக்கப்பட்ட இன்ஜின் கொண்ட பைக்கை பஜாஜ் வெளியிடவிருக்கிறதா என கேள்விகள் எழுகின்றன.

Bajaj Pulsar NS400Z

இன்ஜின் சிறியது என்றாலும் பல்சர் NS400Z என்ற பெயரிலேயே தொடர்ந்து பைக்கை விற்பனை செய்ய பஜாஜ் முடிவெடுத்துள்ளது. முந்தைய 373 சிசி இன்ஜினானது 42.4 hp பவர் மற்றும் 35 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தது. புதிய 349 சிசி இன்ஜினானது சற்று குறைவாக 40 hp பவர் மற்றும் 33.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்ஜினைத் தவிர வசதிகளில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்பட்டிருக்காது என்றே தெரிகிறது. 43 மிமீ USD ஃபோர்க்ஸ், சின்டர்டு பிரேக் பேடுகள், அப்போலோ H1 டயர்கள், அட்ஜஸ்டபிள் கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், பவர்ஃபுல்லான ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள், டூயல் சேனல் ABS வசதியுடன் கூடிய பெரிய டிஸ்க் பிரேக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய மேம்பட்ட அம்சங்கள் புதிய பைக்கிலும் இடம்பெற்றிருக்கும்.

முந்தைய பைக்குடன் ஒப்பிடும் போது விலையை பஜாஜ் மாற்றாமல் இருக்கும் எனத் தகவல் கசிந்திருக்கும் நிலையில், அதற்கு ஈடுசெய்யும் வகையில் புதிய வசதிகளை அந்நிறுவனம் சேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பைக்கில் இன்ஜினைத் தவிர வேறு என்ன வகையான மாற்றங்களை எல்லாம் பஜாஜ் செய்துள்ளது என்பது விரைவில் தெரிந்துவிடும். தற்போது புதிய பைக் ஷோரூம்களை வந்தடையும் நிலையில், விரைவிலேயே இதன் வெளியீடும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆறு மாத காலமாக, சிறிய இன்ஜின், விலைக் குறைப்பு என்பதே புதிய பைக்குகள் குறித்து திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் நிலையில், அதே விலை என்பது வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வகையில் எதிரொலிக்காது. ஒன்று வரிக்குறைப்பிற்கு ஏற்ற வகையில் கொஞ்சமேனும் குறைவான விலையில் பைக்கை வெளியிட வேண்டும். இல்லையென்றால், புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டுமே இல்லை என்றால், வாடிக்கையாளர்களிடம் அது எதிர்மறையான விமர்சனங்களையே பெறும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 1, 2026, 18:20 [IST]
English summary
Bajaj pulsar ns400z with smaller 350 cc engine price leaked check all details here
மேலும்... #bajaj auto #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+