அடிமாட்டு விலையில் புத்தம் புதிய பைக் மாடலை வெளியிட்ட நிறுவனம்.. ஷோரூமில் குவியும் வாடிக்கைாளர்கள்!

கடந்தாண்டு ஜிஎஸ்டி மறுசீரமைப்பிற்குப் பிறகு இந்தியாவில் தாங்கள் தயாரித்து வரும் அனைத்து 400 சிசி பைக் மாடல்களிலும் 350 சிசி இன்ஜினைக் கொடுக்கவிருப்பதாக அறிவித்திருந்தது பஜாஜ். ட்ரையம்ப் மற்றும் கேடிஎம்மின் 400 சிசி பைக்குகளையும் இந்தியாவில் பஜாஜ் நிறுவனமே தயாரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களில் ட்ரையம்ப், கேடிஎம் மற்றும் தங்களது டாமினார் உட்பட அனைத்து 400 சிசி பைக்குகளிலும் 350 சிசி இன்ஜினைக் கொடுத்து அப்டேட் செய்துவிட்டது.

ஒரே ஒரு பைக்கைத் தவிர. அது வேறெதுவும் இல்லை, இந்தியாவின் விலை குறைவான 400 சிசி பைக் மாடலான பஜாஜின் பல்சர் NS400Z தான். இந்த பைக்கிலும் 350 சிசி இன்ஜினை பஜாஜ் பயன்படுத்தவிருப்பதாக தகவல்கள் மட்டும் வெளியானது, ஆனால் வெளியீடு குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லை. இந்த நிலையில் தான் பல்சர் NS400Z பைக்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தைப் பார்வையிட்டோம்.

Bajaj pulsar NS400Z

சத்தமில்லாமல் 350 சிசி இன்ஜினை இந்த பைக் கொண்டிருப்பதாக அப்டேட் செய்துள்ளது பஜாஜ். ஆம், 400 சிசி இன்ஜின் இல்லை இப்போது 350 சிசி இன்ஜினுடனேயே பல்சர் NS400Z விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பிற்கு முன்பு என்ன விலையில் பல்சர் NS400Z விற்பனை செய்யப்பட்டு வந்ததோ, அதே ரூ.1.94 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை தான் புதிய 350 சிசி இன்ஜின் கொண்ட பைக்கிற்கும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனை வரும் நாட்களில் பஜாஜ் அப்டேட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்டேட் இருந்தால், நாங்களும் இங்கே அப்டேட் செய்து புதிய விலையைக் குறிப்பிடுகிறோம். தற்போது பல்சர் NS400Z பைக்கில் 349.13 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜினானது 9,000 rpm-ல் 40.6 hp பவர் மற்றும் 7,500 rpm-ல் 33.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Bajaj Pulsar NS400Z

இது முன்பை விட 2.4 hp வரை குறைவான பவர் மற்றும் 1.8 Nm வரை குறைவான டார்க்காகும். இதற்கு முன்பு இந்த பல்சர் NS400Z பைக் மாடலில் 43 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 373 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த 373 சிசி இன்ஜினில் ஸ்ட்ரோக்கின் அளவைக் குறித்து 349.13 சிசியாக மறுவடிவமைப்பு செய்துள்ளது பஜாஜ். மற்றபடி முற்றிலும் புதிய இன்ஜின் எல்லாம் இல்லை.

டாமினார் 400 பைக்கிலும் தற்போது இதே 350 சிசி இன்ஜினே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய இன்ஜினுடன் அப்டேட் செய்யப்பட்ட பிறகு வரிக்குறைப்பிற்கு ஏற்ற வகையில் டாமினார் 400 பைக்கின் விலையையும் ரூ.37,000 வரை குறைத்தது பஜாஜ். முன்னதாக ரூ.2.40 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய இன்ஜினுடன் ரூ.2.03 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியானது.

பல்சர் பைக்கிற்கு இதே போல் பஜாஜ் விலையைக் குறைக்குமா என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது, 350 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக்குகள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதேபோல் 350 சிசிக்கு மேலான இன்ஜினைக் கொண்டிருந்த பைக்குகள் மீதான வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்சர் NS400Z ஏற்கனவே குறைவான விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து கூடுதல் வரி உயர்வை வாடிக்கையாளர்களுக்குக் கடத்தாமல் தானே ஏற்றுக் கொண்டு தான் வருகிறது பஜாஜ். ஏற்கனவே குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பல்சர் NS400Z பைக்கின் விலையை பஜாஜ் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 21, 2026, 17:06 [IST]
English summary
Bajaj pulsar ns400z with updated 350 cc engine launched in india
மேலும்... #bajaj pulsar #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+