குறைவான விலையில் 2 புதிய பைக்குகள்! ராயல் என்பீல்டு சோலியை முடிக்க போகும் பஜாஜ்! இந்த பேருக்காகவே வாங்கலாம்!
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி (GST) வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி முன்பு 28 சதவீதமாக இருந்தது. ஆனால் அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான பைக் நிறுவனங்கள் தற்போது விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன.
ஆனால் மறுபக்கம் 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி முன்பு 31 சதவீதமாக இருந்தது (28 சதவீத ஜிஎஸ்டி வரி + 3 சதவீத செஸ்). ஆனால் இது தற்போது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சற்று தடுமாறி கொண்டுள்ளன.

350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பஜாஜ் (Bajaj) நிறுவனமும் ஒன்றாகும். இந்த பிரச்சனையை சமாளிக்க பஜாஜ் நிறுவனம் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு பிரச்சனையை சமாளிப்பதற்காக கூடிய விரைவில் 2 பைக்குகளின் 350 சிசி வெர்ஷன்களை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவை பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400) மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்400இஸட் (Bajaj Pulsar NS400Z) ஆகியவை ஆகும்.

இந்த 2 பைக்குகளிலும் தற்போது 373.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் சில மாற்றங்களை செய்து, 350 சிசி திறன் கொண்டதாக மாற்றுவதற்கு பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வரி குறையும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும்.
எனவேதான் பஜாஜ் டோமினார் 400 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்400இஸட் ஆகிய 2 பைக்குகளின் 350 சிசி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் ஆரம்ப விலை 2.40 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ்400இஸட் பைக்கின் ஆரம்ப விலை 1.94 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom price) ஆகும். பஜாஜ் டோமினார் 400 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்400இஸட் ஆகிய 2 பைக்குகளின் 350 சிசி வெர்ஷன்களிலும், இன்ஜினில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
350 சிசி வெர்ஷன்கள் என்பதால், தற்போதைய விலையை காட்டிலும் சற்று குறைவான விலையில் இந்த 2 புதிய பைக்குகளையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் பவர் அவுட்புட்டில் சற்று மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் பவர் அவுட்புட் 40 பிஎஸ்/35 என்எம் ஆகவும், பஜாஜ் பல்சர் என்எஸ்400இஸட் பைக்கின் பவர் அவுட்புட் 43 பிஎஸ்/35 என்எம் ஆக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. பஜாஜ் நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் குறைவான விலையில் 2 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








