ஐரோப்பிய நாடுகளை அலறவிடும் இந்திய பைக் தயாரிப்பு நிறுவனம்.. அடிச்சு தூள் கிளப்புறாங்க!

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவைலட் (Ultraviolette) நிறுவனம், ஐரோப்பாவில் மேலும் ஆறு நாடுகளில் கால்பதித்திருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் முதன்முதலாக ஐரோப்பாவில் கால்பதித்தது அல்ட்ராவைலட். தற்போது அங்கே விரிவாக்கம் செய்துள்ளது. புதிதாக கால் பதித்திருக்கும் 6 நாடுகளுடன், தற்போது ஐரோப்பாவில் சுமார் 19 நாடுகளில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் பைக் தயாரிப்பு முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என அனைத்துமே பட்ஜெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் தொடக்கநிலை எலெக்ட்ரிக் பைக்குகளிலேயே கவனம் செலுத்தி வர, சொகுசு மற்றும் பெஃர்பாமன்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் உருவாக்கத்தில் முழு கவனத்தையும் செலுத்தியது அல்ட்ராவைலட் நிறுவனம்.

Ultraviolette F77

அதன் பலனாக F77 என்ற ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் பைக் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. இதே பைக்கின் மேம்பட்ட 'F77 மாக் 2' மற்றும் 'F77 சூப்பர்ஸ்ட்ரீட்' ஆகிய பைக் மாடல்களையே ஐரோப்பாவில் விற்பனை செய்கிறது. புதிதாக கால் பதித்திருக்கும் ஆறு நாடுகளிலும் கூட இந்த எலெக்ட்ரிக் பைக் மாடல்களையே விற்பனை செய்யவுள்ளது அல்ட்ராவைலட்.

தற்போது புதிதாக ஹங்கேரி, குரோஷிா, ஸ்லோவாக்கியா, ரோமானியா, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய ஆறு நாடுகளில் நுழைந்திருக்கிறது அல்ட்ராவைலட். இந்த நாடுகளில் தங்களுடைய எலெக்ட்ரிக் பைக்குகளை அதிகாரப்பூர்வமாக இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் ஹங்கேரியைச் சேர்ந்த எலெக்ட்ரோரைடர் (Elektrorider) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது அல்ட்ராவைலட்.

Ultraviolette F77 Side

இந்தியாவில் F77 மாக் 2 மற்றும் F77 சூப்பர்ஸ்ட்ரீட் ஆகிய இரண்டு பைக் மாடல்களையும் ரூ.2.99 லட்சம் என்ற விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது அல்ட்ராவைலட். ஆனால், ஐரோப்பாவில் இந்திய மதிப்பிற்கு அதிக விலையிலேயே இந்த பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு ஹங்கேரியில் இந்த பைக் மாடல்கள் இந்திய மதிப்பிற்கு ரூ.10.12 லட்சம் என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் பைக் மாடல்களின் டாப் எண்டு ரெகான் (Recon) வேரியன்ட்களையே ஐரோப்பாவில் விற்பனை செய்கிறது அல்ட்ராவைலட். மேம்பட்ட வசதிகள் கொண்ட ரெகான் வேரியன்ட்களானது இந்தியாவில் ரூ.3.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு பைக்குகளிலும் 10.3 kWh பேட்டரி பேக்குடன், 30 kW (40 hp) பவர் மற்றும் 100 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைக் கொடுத்துள்ளது அல்ட்ராவைலட். இந்த எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் செட்டப்புடன் சுமார் 323 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் கொண்டிருக்கின்றன. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் இந்த பைக்குகள் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெர்ஃபாமன்ஸை விரும்பும் எலெக்ட்ரிக் பைக் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தேர்வாக இந்த இரண்டு அல்ட்ராவைலட் எலெக்ட்ரிக் பைக் மாடல்களும் இருக்கும். இந்த இரண்டு மாடல்களைத் தவிர்த்து, X47, X47 டெஸர்ட் விங், டெஸராக்ட் மற்றும் ஷாக்வேவ் ஆகிய பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அல்ட்ராவைலட். அட்வென்சர் வகை எலெக்ட்ரிக் பைக் மாடல்களான X47 சீரிஸின் டெலவரியை கடந்தாண்டு தான் தொடங்கியது அந்நிறுவனம்.

தொடர்ந்து டெஸராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஷாக்வேவ் டூயல் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் பைக் ஆகியவற்றுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. டெஸராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.6,000 செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். ரூ.1.45 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்யவுள்ளது அந்நிறுவனம். அதேபோல் ஷாக்வேவ் எலெக்ட்ரிக் பைக்கை ரூ.1.75 லட்சம் என்ற தொடக்க விலையில் விற்பனை செய்யவுள்ளது அல்ட்ராவைலட்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய நிறுவனம் ஒன்று ஐரோப்பாவின் தரத்திற்கு தயாரிப்புகளை விற்பனை செய்து வருவது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயம் தான். இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் என்பதால் இதன் தரமான தயாரிப்புகளை குறைவான விலையிலேயே நாம் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் எல்லாம் பட்ஜெட்டை மையமாக வைத்து செயல்பட, பெர்ஃபாமன்ஸை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது அல்ட்ராவைலட்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 8, 2026, 9:42 [IST]
English summary
Bengaluru based e2w manufacturer ultraviolette entres 6 more european countries
மேலும்... #ultraviolette #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+