விலை மிகவும் குறைவு! மைலேஜ் அதிகம்! இந்தியாவின் சிறந்த 100 சிசி பைக்குகளின் பட்டியல்!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை (Petrol Price) மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் (ஜூலை 15) சென்னையில் (Chennai) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 107.76 ரூபாயாக உள்ளது. பெட்ரோல் விலை இந்த அளவிற்கு மிக கடுமையாக உயர்ந்துள்ளதால், விலை குறைவான (Most Affordable) அதே நேரத்தில் நல்ல மைலேஜ் (Mileage) தரக்கூடிய 100 சிசி பைக்குகளை பைக்குகளை வாங்க பலரும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதில், நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், இந்தியாவில் கிடைக்க கூடிய 4 சிறந்த 100 சிசி பைக்குகள் (Best 100 cc Bikes) குறித்த தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். எந்த பைக்கை வாங்கலாம் என்ற முடிவை நீங்கள் விரைவாக எடுப்பதற்கு இந்த செய்தி உதவி செய்யும் என நாங்கள் நம்புகிறோம்.

Hero Splendor Plus

ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus): ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கை தவிர்த்து விட்டு இந்த பட்டியலை கண்டிப்பாக உருவாக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற பைக்குகளில் ஒன்றாக ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் திகழ்ந்து வருகிறது.

ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கானது மொத்தம் 4 வெர்ஷன்களில் கிடைக்கிறது. அவை ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் (Hero Splendor Plus XTEC), ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 (Hero Splendor Plus XTEC 2.0) மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் (Hero Splendor Plus Flex Fuel) ஆகியவை ஆகும்.

இந்த 4 வெர்ஷன்களிலும் 97.2 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.9 kW பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது (ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் தவிர). அதே நேரத்தில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

i3S போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இந்த சிறப்பான மைலேஜ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 77,694 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 81,081 ரூபாயாக இருக்கிறது.

இந்த வரிசையில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 82,651 ரூபாயாக உள்ளது. இவை அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும் (Chennai Ex-showroom Price). மறுபக்கம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனிலும் 97.2 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற வெர்ஷன்களை போலல்லாமல் இது E20-E85 வரையிலான எரிபொருட்களில் இயங்கும் தன்மை கொண்டது.

பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட எரிபொருள் E20 எனவும், பெட்ரோல் உடன் 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் E85 எனவும் அழைக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனை வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதன் இன்ஜின் E85 எரிபொருள் மூலமாக இயங்கும்போது அதிகபட்சமாக 6.3 kW பவரையும், 8.30 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். மற்ற 3 வெர்ஷன்களை விட ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனின் பவர் அவுட்புட் அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. இதன் விலை 78,606 ரூபாயாக இருக்கிறது.

Hero HF Deluxe

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe): ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 63,966 ரூபாயாக இருக்கிறது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கை போலவே, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கிலும் 97.2 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கை போலவே இந்த பைக்கிலும் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 5.9 kW பவர் மற்றும் 8.05 என்எம் டார்க் ஆகதான் உள்ளது. மைலேஜூம் கூட 2 பைக்குகளுக்கும் ஒன்றுதான். அதாவது ஒரு லிட்டருக்கு 70 கிலோ மீட்டர். ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

அவை ட்யூப்லெஸ் டயர்கள், யூஎஸ்பி சார்ஜர், ஐ3எஸ் தொழில்நுட்பம், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எக்ஸ்சென்ஸ் ஸ்மார்ட் சென்சார் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கை போலவே, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனும் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனிலும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு ஃப்ளக்ஸ் ஃப்யூயல் பைக்குகளின் பவர் அவுட்புட்டும் ஒரே மாதிரியாகதான் இருக்கிறது. அதேபோல் இதுவும் E20 முதல் E85 வரையிலான எரிபொருட்களில்தான் இயங்கும்.

ஆனால் விலை மட்டும் வேறு. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனின் விலை 67,767 ரூபாயாக இருக்கிறது. ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களின் டெலிவரி (Delivery) வரும் ஜூலை 30ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது.

Honda Shine 100 Side Design

ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100): இந்த பைக் மொத்தம் 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. அவை ஹோண்டா ஷைன் 100 மற்றும் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100 DX) ஆகியவை ஆகும். இந்த 2 வெர்ஷன்களிலும் 98.98 சிசி இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.43 kW பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா ஷைன் 100 மற்றும் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்குகள் ஒரு லிட்டருக்கு 60-70 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அவற்றை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர்.

eSP போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இந்த சிறப்பான மைலேஜ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆரம்ப விலை 67,255 ரூபாய் ஆகவும், ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 72,962 ரூபாய் ஆகவும் உள்ளது. இவை தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை (Tamil Nadu Ex-showroom Price) ஆகும்.

Bajaj Platina

பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100): இந்த பைக்கில் 99.59 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6.03 KW பவரையும், 8.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 90-100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக, பஜாஜ் பிளாட்டினா பைக்கை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

DTS-i தொழில்நுட்பம் மூலம் இந்த சிறப்பான மைலேஜ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 70,676 ரூபாயாக இருக்கிறது. இது தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதில், எலெக்ட்ரிக் ஸ்டார்ட், நீளமான அதே நேரத்தில் மென்மையாக இருக்கை மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு புத்தம் புதிய பைக்கை வாங்க வேண்டும் என யோசித்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Wednesday, July 15, 2026, 13:34 [IST]
English summary
Best 100 cc bikes hero splendor plus hf deluxe honda shine bajaj platina price mileage features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X