ஆரம்பத்திலேயே பேட்டரிக்கு காசுக்கு கொடுக்க வேண்டாம்! நிறைய வாகனங்களின் விலை 1 லட்ச ரூபா கூட இல்ல!
பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் (BaaS) எனப்படும் பேட்டரிக்கு அதன் சேவையை பொறுத்து கட்டணம் வசூலிக்கும் முறை இந்தியாவில் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை நிகழ்த்தி வருகிறது. வாகனத்தின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடிவதாலும், சார்ஜ் ஆகுவதற்காக காத்திருக்க வேண்டிய நேரம் குறைவதாலும் பல எலெக்ட்ரிக் 2-வீலர் கம்பெனிகள் BaaS முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், பல வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு சோபிக்காமல் போன எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கு கூட BaaS திட்டத்தை அறிமுகம் செய்து ஹிட் அடிக்க வைத்துள்ளனர்.
இருப்பினும், இன்னமும் BaaS குறித்து தெரியாமல் சில இருக்க தான் செய்கின்றனர். ஆதலால், முதலில் BaaS குறித்தும், பின்னர் இந்த திட்டத்துடன் கிடைக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். BaaS என்பது பேட்டரியை சேவையாக வழங்கும் முறையாகும். அதாவது, எலெக்ட்ரிக் வாகனத்துடன் வழங்கப்படும் பேட்டரியை சார்ஜ் காலியான பின் கொடுத்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம்.

பேட்டரியில் சார்ஜ் எந்த அளவிற்கு காலியாகி உள்ளது என்பதை பொறுத்தோ அல்லது அந்த பேட்டரி உடன் வாகனம் எவ்வளவு தொலைவிற்கு ஓடியுள்ளது என்பதை பொறுத்தோ கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் மாத சந்தா முறையில் கூட BaaS திட்டத்தை வழங்கி வருகின்றன. இன்று (மார்ச் 5) அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனம் அதன் எக்ஸ்47 (X47) எலெக்ட்ரிக் பைக்கில் மாத சந்தா திட்டத்துடன் BaaS திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் மார்க்கெட்டில் கிடைக்கும் சில விலை குறைவான எலெக்ட்ரிக் 2-வீலர்கள் இதோ...
ஹீரோ விடா விஎக்ஸ்2 (Hero Vida VX2): இந்தியாவில் தற்போதைக்கு மிகவும் குறைந்த விலையில் BaaS திட்டத்துடன் கிடைக்கும் எலெக்ட்ரிக் 2-வீலர் இதுவாகும். BaaS இல்லாமல் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.99,490 ஆக இருக்கும் நிலையில், BaaS திட்டத்துடன் வெறும் ரூ.44,990 மட்டுமே ஆகும். இந்த திட்டத்தில் கிமீ-க்கு ரூ.90 பைசாவில் இருந்து ரூ.1.24 வரை செலுத்த வேண்டியிருக்கும்.

ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta): இந்திய 2-வீலர்கள் மார்க்கெட்டில் ஃபேமலி ஸ்கூட்டராக அறியப்படும் இதனை BaaS திட்டத்தில் வாங்கினால் விலை ரூ.75,999 ஆகும். பேட்டரிக்கான கட்டணம் ஆனது ஒரு கிமீ-க்கு ரூ.1 ஆகும். முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 80கிமீ ஆகும்.
ஏத்தர் 450எக்ஸ் & 450எஸ் (450X & 450S): ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான இவை BaaS திட்டத்தில் ரூ.84,341 என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றன. ரிஸ்டாவை போன்று இவையும் கிமீ-க்கு 1 ரூபாய் என்கிற BaaS கட்டணத்தில் கிடைக்கின்றன. ஆனால், ரிஸ்டாவை விட வேகமாக மணிக்கு 90கிமீ வேகத்தை எட்டக்கூடிய இவற்றில் கூகுள் மேப் (Google Map) மற்றும் வ்ராப் மோட் (Wrap Mode) வழங்கப்படுகின்றன.

லெக்ட்ரிக்ஸ் எல்.எக்ஸ்.எஸ் (Lectrix LXS): விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இது நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளது. BaaS திட்டத்தில் இன்னும் குறைவாக ரூ.49,999-இல் இந்த இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது. முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 89கிமீ ரேஞ்சை கொடுக்கக்கூடிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.3kWh பேட்டரி பொருத்தப்படுகிறது.
அல்ட்ராவயலட் எக்ஸ்47: மிக சமீபத்தில் BaaS ஆப்ஷனை பெற்றுள்ள எலெக்ட்ரிக் பைக் இதுவாகும். மேலும், இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்கும் ஒரேயொரு எலெக்ட்ரிக் பைக் இதுவாகும். விலையுயர்ந்த எலெக்ட்ரிக் பைக்காக இருப்பினும், BaaS திட்டத்தில் ரூ.1.49 லட்சம் இந்த பிரீமியம் எலெக்ட்ரிக் பைக்கின் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் BaaS திட்டத்துடன் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, சிறந்த மாடல்களையும் பார்த்துள்ளோம். ஆதலால், BaaS திட்டத்தில் வாகனம் வாங்க விரும்புபவர்கள் இதில் ஒரு எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications









