டிராஃபிக்கில் ஈஸியாக ஓட்டுவதற்கு சிறந்த 5 'லைட் வெயிட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது பெரும்பாலானோர் முதலில் பேட்டரி ரேஞ்ச், விலை மற்றும் சார்ஜிங் நேரத்தையே கவனிக்கிறார்கள். ஆனால், தினமும் அலுவலகம், கல்லூரி அல்லது நகரத்திற்குள் பயன்படுத்தும் எடை அதிகமுடைய ஸ்கூட்டர்கள் பலருக்கு அசௌகரியத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில் அடிக்கடி நிறுத்தி, மீண்டும் இயக்க வேண்டிய சூழலில் அதிக எடை கொண்ட ஸ்கூட்டர்களை கையாள்வது சிரமமாக இருக்கும். அதனால், இப்போது மைலேஜ் மற்றும் விலையைப் போலவே ஸ்கூட்டரின் எடையையும் கவனித்து வாங்குவது அவசியமாகியுள்ளது. பார்க்கிங் செய்வது, யூ-டர்ன் எடுப்பது, சென்டர் ஸ்டாண்ட் போடுவது போன்ற அன்றாட செயல்களில் லைட் வெயிட் ஸ்கூட்டர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.

தற்போது பெரும்பாலான குடும்பங்களில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அனைவரும் பகிர்ந்து பயன்படுத்தும் நிலை உள்ளது. கணவன், மனைவி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் என அனைவரும் எளிதாக ஓட்டக்கூடிய மாடல்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள எளிதான கையாளுமையை வழங்கும் 5 லைட் வெயிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்க்கலாம்.

Best Light Weigh EV Scooters India

1. டிவிஎஸ் ஐக்யூப்

TVS iQube தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். சுமார் 110 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த ஸ்கூட்டர், நகரப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற மாடலாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் முதல் முறையாக ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கும் இதை எளிதாக கையாள முடியும்.

இந்த ஸ்கூட்டர் 2.2 kWh, 3.1 kWh, 3.5 kWh, 4.7 kWh மற்றும் 5.3 kWh பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. வேரியண்டைப் பொறுத்து 94 கி.மீ முதல் 212 கி.மீ வரை IDC ரேஞ்சை வழங்குகிறது. சென்னையில் இதன் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.74 லட்சம் உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 5 இன்ச் TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேகம், பேட்டரி அளவு, மீதமுள்ள ரேஞ்ச் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெளிவாக பார்க்க முடியும். புளூடூத் இணைப்பு மூலம் ஸ்மார்ட்போனை இணைத்து அழைப்புகள் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை டிஸ்ப்ளேயிலேயே பார்க்கலாம். Turn-by-Turn Navigation வசதி இருப்பதால் புதிய இடங்களுக்கு செல்லும்போது மொபைலை கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. Reverse Assist வசதி மூலம் பார்க்கிங்கில் இருந்து ஸ்கூட்டரை பின்னோக்கி எளிதாக நகர்த்தலாம். Hill Hold வசதி மேம்பாலம் அல்லது சரிவான சாலைகளில் பின்னோக்கி நகராமல் பாதுகாக்கும். அதேபோல் Cruise Control வசதி நீண்ட தூரத்தில் ஒரே வேகத்தில் பயணிக்க உதவுவதால் கை சோர்வு குறையும்.

2. ஹீரோ விடா விஎக்ஸ்2

Hero MotoCorp நிறுவனத்தின் Vida VX2, நகரப் பயன்பாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். சுமார் 116 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த மாடல், தினசரி அலுவலகப் பயணம் மற்றும் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் 2.2 kWh, 3.4 kWh மற்றும் 4.4 kWh பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. வேரியண்டைப் பொறுத்து 92 கி.மீ முதல் 187 கி.மீ வரை IDC ரேஞ்சை வழங்குகிறது. இதன் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.14 லட்சமாக உள்ளது.

Vida VX2-ல் 4.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு மூலம் மொபைலை இணைத்து அழைப்புகள் மற்றும் நேவிகேஷன் தகவல்களை பார்க்கலாம். OTA Software Update வசதி இருப்பதால், சர்வீஸ் சென்டருக்கு செல்லாமல் புதிய மென்பொருள் அப்டேட்களை இணையம் வழியாகவே பெற முடியும். Keyless Start வசதி இருப்பதால் சாவியை எடுக்காமல் ஸ்கூட்டரை இயக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் மிகப்பெரிய சிறப்பம்சம் Removable Battery ஆகும். பேட்டரியை எளிதாக கழற்றி வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ எடுத்துச் சென்று சார்ஜ் செய்ய முடிவதால், வீட்டில் சார்ஜிங் பாயிண்ட் இல்லாதவர்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்.

3. ஹோண்டா ஆக்டிவா இ

பெட்ரோல் Activa பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பரிச்சயமான அனுபவத்தை வழங்கும் வகையில் Honda நிறுவனம் Activa e மாடலை உருவாக்கியுள்ளது. சுமார் 118 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த ஸ்கூட்டர், மென்மையான ஹேண்ட்லிங் மற்றும் நிலையான ரைட் குவாலிட்டியை வழங்குகிறது.

இந்த மாடலில் இரண்டு Swappable Battery Pack-கள் வழங்கப்பட்டுள்ளன. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் சுமார் 102 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. இதன் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. Honda RoadSync Duo மூலம் புளூடூத் இணைப்பு செய்து, நேவிகேஷன், அழைப்பு மற்றும் பிற தகவல்களை திரையிலேயே பார்க்கலாம். Smart Key வசதி இருப்பதால் சாவியை பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு ஸ்கூட்டரை திறந்து இயக்க முடியும். Reverse Assist வசதி பார்க்கிங்கில் இருந்து பின்னோக்கி எளிதாக வெளியே வர உதவுகிறது. Riding Modes வசதி இருப்பதால் நகரப் பயன்பாடு அல்லது அதிக ரேஞ்ச் தேவைப்படும் பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஓட்டும் முறையை மாற்றிக்கொள்ளலாம். மேலும் Swappable Battery வசதி இருப்பதால், பேட்டரி காலியானதும் சார்ஜ் ஆகும் வரை காத்திருக்காமல் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டேஷன்களில் புதிய பேட்டரியை மாற்றிக்கொண்டு உடனடியாக பயணத்தை தொடர முடியும்.

4. ஏத்தர் ரிஸ்டா

Ather Rizta குடும்ப பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். சுமார் 119 கிலோ கெர்ப் எடை கொண்டிருந்தாலும், எடை சமநிலையாக பகிரப்பட்டிருப்பதால் நகர சாலைகளில் ஓட்டும்போது அதிக கனமாக உணரப்படாது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில் திருப்புவது, யூ-டர்ன் எடுப்பது மற்றும் பார்க்கிங் செய்வது போன்றவற்றில் இந்த ஸ்கூட்டர் எளிதான கையாளுமையை வழங்குகிறது.

இந்த ஸ்கூட்டர் 2.9 kWh மற்றும் 3.7 kWh என்ற இரண்டு பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. வேரியண்டைப் பொறுத்து ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 123 கி.மீ முதல் 159 கி.மீ வரை IDC ரேஞ்சை வழங்கும். இதன் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.80 லட்சமாக உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் முக்கிய பலம் இதில் வழங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப அம்சங்கள்தான். 7 இன்ச் டீப்வியூ டிஸ்ப்ளே மூலம் வாகனத்தின் அனைத்து தகவல்களையும் தெளிவாக பார்க்க முடியும். இதில் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் வசதி இருப்பதால், புதிய இடங்களுக்கு செல்லும்போது மொபைலை தனியாக பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. புளூடூத் இணைப்பு மூலம் ஸ்மார்ட்போனை இணைத்து, வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் வரும் தகவல்களையும் டிஸ்ப்ளேயிலேயே பார்க்க முடியும். போக்குவரத்து சிக்னல் அல்லது மேம்பாலம் போன்ற இடங்களில் வாகனத்தை நிறுத்தும்போது AutoHold வசதி தானாகவே ஸ்கூட்டரை நகராமல் நிலையாக வைத்திருக்கும். இதனால் பிரேக்கை தொடர்ந்து அழுத்திப் பிடிக்க வேண்டிய அவசியம் குறையும். Magic Twist வசதி மூலம் ஆக்சிலரேட்டரை எதிர்திசையில் திருப்பி வேகத்தை மெதுவாகக் குறைக்க முடியும். 56 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பூட் ஸ்பேஸில் இரண்டு ஹெல்மெட்டுகள் மட்டுமல்லாமல், லேப்டாப் பேக், மளிகைப் பொருட்கள் மற்றும் தினசரி தேவையான பொருட்களையும் எளிதாக வைத்துச் செல்ல முடியும்.

5. பஜாஜ் சேத்தக்

முழுமையான மெட்டல் பாடி கட்டுமானம் காரணமாக Bajaj Chetak பட்டியலில் உள்ள மற்ற மாடல்களை விட சற்று அதிக எடை கொண்டதாக இருந்தாலும், Low Centre of Gravity காரணமாக ஓட்டும்போது அந்த எடை பெரிதாக உணரப்படாது. அதனால், நகர சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலிலும் நிலையான ஹேண்ட்லிங்கை வழங்குகிறது. உறுதியான கட்டுமானத்தை விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த ஸ்கூட்டர் 3.0 kWh மற்றும் 3.5 kWh பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. வேரியண்டைப் பொறுத்து 123 கி.மீ முதல் 153 கி.மீ வரை IDC ரேஞ்சை வழங்குகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.39 லட்சமாக உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு மூலம் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் நேவிகேஷன் தகவல்களை திரையில் பார்க்க முடியும். Music Control வசதி இருப்பதால் மொபைலில் இயங்கும் பாடல்களை நேரடியாக ஸ்கூட்டரிலிருந்தே கட்டுப்படுத்தலாம். Reverse Mode வசதி பார்க்கிங் இடங்களில் ஸ்கூட்டரை பின்னோக்கி நகர்த்துவதை மிகவும் எளிதாக்குகிறது. Hill Hold வசதி மேம்பாலங்களில் பின்னோக்கி நகராமல் பாதுகாப்பை அதிகரிக்கிறது. முழுமையான மெட்டல் பாடி இருப்பதால் பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் உறுதியான தரத்தை வழங்குவதுடன், சிறிய மோதல்களிலும் நீடித்த தன்மையை வெளிப்படுத்துகிறது.

எது சிறந்தது?

நகரத்தில் தினசரி பயன்படுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது பேட்டரி ரேஞ்ச் மட்டும் பார்த்தால் போதாது. எடை, ஹேண்ட்லிங், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அன்றாட பயன்பாட்டில் கிடைக்கும் சௌகரியங்களையும் சேர்த்து மதிப்பிட வேண்டும். அந்த வகையில் குறைந்த எடை மற்றும் எளிதான கையாளுமையை விரும்புபவர்களுக்கு TVS iQube மற்றும் Hero Vida VX2 சிறந்த தேர்வுகளாக இருக்கின்றன. குடும்ப பயன்பாடு மற்றும் அதிக வசதிகளை விரும்புபவர்களுக்கு Ather Rizta ஏற்றது. Honda Activa e பரிச்சயமான ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது. உறுதியான மெட்டல் பாடி மற்றும் நீண்டகால தரத்தை விரும்புபவர்களுக்கு Bajaj Chetak சிறந்த தேர்வாக இருக்கும். பட்ஜெட் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு ஒவ்வொருவருக்கும் தேர்வு மாறுபடலாம். எந்த மாடலை வாங்க விரும்பினாலும், அனைத்து ஸ்கூட்டர்களையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து முடிவு செய்யவும்.

Article Published On: Monday, July 20, 2026, 15:56 [IST]
English summary
Best lightweight electric scooters india 2026
மேலும்... #hero motocorp #electric scooter #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out