இதுல ஏதாச்சும் ஒரு பைக்ல போனா கூட ஒட்டுமொத்த ஊர் கண்ணும் உங்க மேல பட்றும்! விலைலாம் இவ்ளோதானா!

இந்தியாவில் பிரீமியம் 150 சிசி செக்மெண்ட் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த செக்மெண்ட்டை சேர்ந்த பைக்குகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. இந்தியாவின் பிரீமியம் 150 சிசி செக்மெண்ட்டில் கிடைக்கும் சிறந்த 4 பைக்குகள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

Bajaj Pulsar Classic 150

பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar): மொத்தம் 3 பஜாஜ் பல்சர் பைக்குகள் பிரீமியம் 150 சிசி செக்மெண்ட்டை சேர்ந்தவையாக உள்ளன. இதில், பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 (Bajaj Pulsar Classic 150) ஒன்றாகும். இதில், 149.5 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 14 பிஎஸ் பவரையும், 13.25 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 பைக்கின் ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் என அனைத்திலுமே எல்இடி பல்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டைப் ஏ யூஎஸ்பி சார்ஜர், செல்போன் செயலி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற வசதிகளையும் (Features) பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 பைக்கின் ஆரம்ப விலை 1.09 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதுதவிர பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160) மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 (Bajaj Pulsar NS160) ஆகிய 2 பைக்குகளையும் பஜாஜ் நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் விற்பனை செய்கிறது.

இதில், பஜாஜ் பல்சர் என்160 பைக்கில் 164.82 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 16 பிஎஸ் பவரையும், 14.65 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 1.16 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கில் 160.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17 பிஎஸ் பவரையும், 14.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கின் ஆரம்ப விலை 1.24 லட்ச ரூபாயாக உள்ளது. பஜாஜ் பல்சர் என்160 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 ஆகிய 2 பைக்குகளும் பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்கின்றன.

அதாவது ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங், ஏபிஎஸ் ரைட் மோட்கள், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி போன்ற வசதிகள் எல்லாம் பஜாஜ் பல்சர் என்160 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 என 2 பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளன.

TVS Apache RTR 160 4v

டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache): மொத்தம் 2 டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் இந்த செக்மெண்ட்டை சேர்ந்தவையாக உள்ளன. இதில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 (TVS Apache RTR 160) ஒன்றாகும். மற்றொன்று டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR 160 4v) ஆகும்.

இந்த 2 பைக்குகளிலும் 159.7 சிசி இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் ஸ்போர்ட் மோடில் 16.04 பிஎஸ் பவரையும், 13.85 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் அர்பன் மற்றும் ரெயின் மோட்களில் அதிகபட்சமாக 13.32 பிஎஸ் பவரையும், 12.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

மறுபக்கம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் இதே இன்ஜின் ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 17.55 பிஎஸ் பவர் மற்றும் 14.73 என்எம் டார்க் திறனை உருவாக்கும். அதே நேரத்தில் அர்பன் மற்றும் ரெயின் மோட்களில் அதிகபட்சமாக 15.64 பிஎஸ் பவரையும், 14.14 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்த 2 பைக்குகளுமே முக்கியமான வசதிகளை பகிர்ந்து கொள்கின்றன. இதன்படி இந்த 2 பைக்குகளிலுமே ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் தொழில்நுட்பம், ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் மோட்கள் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகளை எல்லாம் டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் ஆரம்ப விலை 1.03 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் ஆரம்ப விலை 1.14 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறிய மற்றும் கூற போகிற அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Honda Unicorn

ஹோண்டா யூனிகார்ன் (Honda Unicorn): இந்த பைக்கில் 162.71 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 13.18 பிஎஸ் பவரையும், 14.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ஏபிஎஸ் போன்ற வசதிகளை எல்லாம் ஹோண்டா யூனிகார்ன் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 1.13 லட்ச ரூபாயாக உள்ளது.

Yamaha R15M

யமஹா ஆர்15 (Yamaha R15): மொத்தம் 3 வெர்ஷன்களில் யமஹா ஆர்15 பைக் விற்பனை செய்யப்படுகிறது. அவை யமஹா ஆர்15எம் (Yamaha R15M), யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4) மற்றும் யமஹா ஆர்15எஸ் (Yamaha R15S) ஆகியவை ஆகும்.

இந்த 3 வெர்ஷன்களிலுமே 155 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 3 வெர்ஷன்களிலுமே பவர் அவுட்புட் ஒரே மாதிரியாகதான் உள்ளது. அது 18.4 பிஎஸ் பவர் மற்றும் 14.2 என்எம் ஆகும். இந்த 3 வெர்ஷன்களிலும் ட்யூயல் ஹாரன், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் யமஹா ஆர்15எம் மற்றும் யமஹா ஆர்15 வி4 ஆகிய 2 வெர்ஷன்களில் மட்டுமே ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15எஸ் பைக்கில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கிடையாது. இதில், யமஹா ஆர்15எம் வெர்ஷனின் ஆரம்ப விலை 1.88 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் யமஹா ஆர்15 வி4 பைக்கின் ஆரம்ப விலை 1.75 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த வரிசையில் யமஹா ஆர்15எஸ் பைக்கின் ஆரம்ப விலை 1.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் பிரீமியம் 150 சிசி செக்மெண்ட்டில் ஒரு புதிய பைக்கை வாங்க நினைப்பவர்கள் இந்த 4 பைக்குகளில் ஒன்றை பரிசீலனை செய்யலாம். கூடிய விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் ஒரு புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Article Published On: Thursday, July 16, 2026, 12:20 [IST]
English summary
Best premium 150 cc bikes in india bajaj pulsar tvs apache honda unicorn yamaha r15 price features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X