எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த கம்பெனியில் வாங்குவதுனு குழப்பமா? இந்த விஷயத்தில் ஏத்தரை அடிச்சிக்க ஆளே இல்ல!

பெட்ரோல் ஸ்கூட்டர்கள் போய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) வந்ததை போல, ஸ்கூட்டரை மைலேஜ் (Mileage) பார்த்து வாங்கிய காலம் போய் ரேஞ்ச் (Range) மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை பார்த்து வாங்க ஆரம்பித்துள்ளோம். பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக ஏத்தர் எனர்ஜி, ஓலா போன்ற ஸ்டார்ட்-அப் இவி நிறுவனங்களும் சிறந்த சாஃப்ட்வேர் உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்குகின்றன.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto): பஜாஜில் இருந்து தற்போதைக்கு சேத்தக் என்கிற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சேத்தக்கை பஜாஜின் சேத்தக் மொபைல் செயலி மூலமாக ஸ்கூட்டருடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கூகுள் மேப்ஸ், ஜிபிஎஸ் டிராக்கிங், மொபைல் போனுக்கு அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வசதி உள்ளிட்டவற்றை ஸ்கூட்டரின் திரை வாயிலாகவே பெறலாம்.

india s electric two-wheeler manufacturers with best software platforms

ஹீரோ விடா (Hero Vida): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் விடா பிராண்ட் மூலமாக பல்வேறு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகிறது. அவற்றில் 'விடா எட்ஜ்' என்கிற சாஃப்ட்வேர் பிளாட்ஃபார்ம் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, நேவிகேஷன், ரியல்-டைம் நோட்டிஃபிகேஷன்ஸ், தூரத்தில் இருந்தே ஸ்கூட்டரை முற்றிலுமாக லாக் செய்யும் வசதி உள்ளிட்டவற்றை விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழங்குகின்றன.

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor): இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் 'ஸ்மார்ட் எக்ஸொனெக்ட்' என்கிற பிளாட்ஃபாரத்தை அதன் ஐக்யூப் மற்றும் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்குகிறது. இதன் மூலமாக, நேவிகேஷன், சார்ஜிங் நிலையங்களின் இருப்பிடம் மற்றும் வாகனம் மோதலுக்கு உள்ளானாலோ அல்லது கீழே விழுந்தாலோ அதுகுறித்த எச்சரிக்கைகளை பெறலாம்.

india s electric two-wheeler manufacturers with best software platforms

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric): ஓலா நிறுவனத்தின் எஸ்1 புரோ ஆனது இந்தியாவில் எலெக்ட்ரிக் 2-வீலர்களில் சாஃப்ட்வேர் விஷயத்தில் புரட்சியை நிகழ்த்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதில் ஓலா நிறுவனம் வழங்கிய 'மூவ் ஓ.எஸ்' சாஃப்ட்வேர் ஃபிளாட்ஃபார்ம் ஆனது டச் ஸ்க்ரீன் கண்ட்ரோல்கள், ஆன்போர்டு மியுசிக் மற்றும் அட்வான்ஸான ரைடு மோட்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

ஏத்தர் எனர்ஜி (Ather Energy): ஓலாவை போன்று பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக 'ஏத்தர் ஸ்டேக் 7' என்கிற சாஃப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போதைக்கு இந்தியாவில் மிகவும் அட்வான்ஸான சாஃப்ட்வேர் ஆக ஏத்தர் ஸ்டேக் 7 விளங்குகிறது. இதன் முக்கிய சிறப்பம்சம், பெரும்பாலான கண்ட்ரோல்களை குரல் மூலம் கட்டுப்படுத்த உதவுவதாகும்.

அத்துடன், கூகுள் மேப்ஸ், நேரலையாக இருப்பிடம் குறித்த விபரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது, மொபைல் போன் அழைப்பு மற்றும் மியுசிக் கண்ட்ரோல்கள், வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன்ஸ், ஆவணங்களை டிஜிட்டலாக சேமித்து வைக்கும் வசதி உள்ளிட்டவற்றையும் ஏத்தர் ஸ்டேக் 7 மூலமாக பெறலாம். மேலும், ஆட்டோஹோல்ட், மேஜிக் ட்விஸ்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் போன்றவற்றிற்கும் ஏத்தரின் இந்த புதிய சாஃப்ட்வேர் வழிவகுக்கக் கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஏத்தர் ஸ்டேக் 7 சாஃப்ட்வேரை ஹைலைட்டாக சுட்டிக் காட்டுவதற்காகவே இந்த தொகுப்பை பார்த்துள்ளோம். அதாவது, ஏத்தரின் இந்த புதிய சாஃப்ட்வேரை மற்ற நிறுவனங்களின் சாஃப்ட்வேர் உடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளோம். ஷோரூமில் இந்த நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும்போது அவற்றின் சாஃப்ட்வேரை நேரில் ஆராய்ந்து பார்ப்பது இன்னும் கொஞ்சம் தெளிவை தரும்.

Article Published On: Wednesday, May 13, 2026, 9:39 [IST]
English summary
Best software platforms from electric two wheeler manufacturers in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+