ரூ.1.46 லட்சத்தில் புதிய பிகாஸ் C12 MaxR எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 178 கி.மீ ரேஞ்ச்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு கணிசமாக அதிகரித்து வரும் இவ்வேளையில், அனைத்து முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், பிகாஸ் நிறுவனமும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் குடும்ப பயன்பாட்டு ரகத்தில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள் உள்ளன. பிகாஸ் சி12 மேக்ஸ்ஆர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.1.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Bgauss C12 MaxR

இந்த புதிய பிகாஸ் சி12 மேக்ஸ்ஆர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8kWh திறன் கொண்ட LFP பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில், அதிகபட்சமாக 178 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று ஐடிசி சான்றுப்படி தெரிவிக்கப்படுகிறது. இதன் பேட்டரிக்கு ஐபி67 பாதுகாப்பு தர ரேட்டிங்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.2 kW அதிகபட்ச திறனை வழங்கும் மோட்டார் இடம்பெற்றுள்ளது. இதன் டாப்ஸ்பீடு மணிக்கு 75 கிமீ வேகம் வரை தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் Eco, Ride மற்றும் Sport என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. சாலைநிலைகளை பொறுத்தும், தேவைக்கேற்பவும் மாற்றி வைத்து இயக்க முடியும்.

இதனுடன் ரிவர்ஸ் மோடு, க்ரூஸ் கன்ட்ரோல், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக நகரப் போக்குவரத்தில் அடிக்கடி நிறுத்தி இயக்க வேண்டிய சூழலில் இந்த அம்சங்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த சி12 மேக்ஸ்ஆர் ஸ்கூட்டரில் 5 இன்ச் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வேகம், பேட்டரி நிலை, ரேஞ்ச் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பார்க்க முடியும். Turn-by-turn navigation உள்ளிட்ட கனெக்டட் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

Also Read

கீழே விழும் நிலையை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, சைடு ஸ்டான்டில் நிற்கும்போது வண்டி ஸ்டார்ட் செய்ய முடியாத தொழில்நுட்பம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், அவசர கால தொடர்பு வசதிகளும் உள்ளன.

இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய Nitrox gas-emulsion சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிபிஎஸ் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீ ஆக உள்ளது. அதிகபட்சமாக 150 கிலோ எடையை சுமக்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பயன்பாட்டை கருத்தில் கொண்டு ஸ்டோரேஜுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு கீழே 38 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதி உள்ளது. இதனால் ஹெல்மெட் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களை எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும். புதிய பிகாஸ் சி12 மேக்ஸ்ஆர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.1,45,990 எக்ஸ்ஷோரூம் விலையாக என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பிரிமீயம் அம்சங்களை விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

Article Published On: Thursday, September 10, 2026, 9:48 [IST]
English summary
Bgauss c12 maxr electric scooter launched 178 km range price features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out