ஸ்கூட்டர்களைக் குறிவைத்துத் திருடும் திருடர்கள்.. உங்கள் வாகனத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
மும்பையில் உள்ள தானே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரை அப்பகுதி போலீஸார் கைது செய்துள்ளனர். தானே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்களை மூன்று சில நாட்கள் இடைவெளியில் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இவர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பொது இடங்களில் சைடு லாக் செய்யப்படாமல் இருக்கும் இருசக்கர வாகனங்களைக் குறிவைத்து திருடியுள்ளனர். இவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புடைய சுமார் எட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் மூன்று ராயல் என்ஃபீல்டு ஹண்டர் பைக்குகளும், ஐந்து சுஸூகி பர்க்மன் ஸ்கூட்டர்களும் அடங்கும்.

இந்த பைக் மற்றும் ஸ்கூட்டரை தனியே எடுத்துச் சென்று இக்னிஷன் வயரை கட் செய்து பின்னர் ஓட்டிச் சென்றதாக இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த மிலிண்டு மனோகர் சவான்ட் விசாரணையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். மேலும் இவர் மேல் மும்பையில் 70 முதல் 80 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பொது இடங்களில் நம்முடை பைக் அல்லது ஸ்கூட்டரை பார்க் செய்யும் போது சைடு லாக் செய்து எவ்வளவு அவசியம் என்று தெரிகிறது. திருடர்களுக்கு சைடு லாக்கை உடைப்பது பெரிய செயல் இல்லை. அதுவும் கைவந்த கலை தான். ஆனால் பொது இடங்களில், பகல் நேரங்களில் சைடு லாக்கை எளிதாக உடைக்க முடியாது. எனவே அவர்களால் பைக்கை வேறு இடத்திற்கு நகர்த்திச் சென்று பின்னர் எளிதாக ஓட்டிச் செல்ல முடியாது.

இந்த காரணத்தினால் தான் அவசியம் சைடு லாக்கை உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதுதவிர இருசக்கர வாகனங்களின் திருட்டைத் தவிர்கக் தொழில்நுட்ப ரீதியிலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு வழக்கமான பைக் சாவியுடன், பைக்கின் டிஸ்க் பிரேக்குகளுடன் இணைத்துப் பூட்டும் வகையில் இருக்கும் டிஸ்க் லாக்கைப் பயன்படுத்தலாம். இது நம்முடைய பைக்கை திருடர்கள் எளிதாகத் திருடுவதைத் தடுக்க உதவும்.
இல்லையெனில் டிஸ்க் லாக்குடன் கூடிய அலார்மை கூட உபயோகிக்கலாம். இதன் மூலம் டிஸ்க் லாக்கைத் திறக்காமல் பைக்கை யாராவது நகர்த்த முயன்றால், அல்லது அதனை நீக்க முயன்றால் உடனடியாக ஓசை எழுப்பி நம்மை அலர்ட் ஆக்கும். பைக்கில் எப்போதும் ஒரு GPS ட்ராக்கை வைத்திருக்கலாம். அதிகாரப்பூர்வமாக இருசக்கர வாகனங்களுக்கு இது கிடைப்பதில்லை. ஆனால் பொதுச் சந்தையில் நிறைய GPS ட்ராக்கர்கள் பைக்குகளுக்காவே விற்பனை செய்யப்படுகின்றன.
பட்ஜெட் விலையில் பைக்கை பாதுகாப்பாக வைத்திருக்க மேலே கூறியது போல நிறைய பூட்டுகளைப் பயன்படுத்தலாம். பைக்கின் சாவி மற்றும் டிஸ்க் லாக்கைத் தவிர்த்து, பைக் அல்லது ஸ்கூட்டரின் பின்பக்க சக்கரங்களையும் அருகில் இருக்கும் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து லாக் செய்யலாம். மேலே கூறியது போல இது திருடர்கள் நம்முடைய பைக்கை எளிதாகத் திருடும் தன்மையைக் குறைக்கும். பகல் நேரங்களிலேயே பார்க்கிங் லாட்களில் கூட இப்போது நிறைய பைக்குகள் திருடுபோகின்றன. எனவே கவனம் தேவை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பான இடங்களில் வசிப்பவர்களுக்குப் பிரச்சினையில்லை. தனி வீடு அல்லது திருட்டு பயம் அதிகம் உள்ள இடங்களில் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். முடிந்த அளவிற்கு உங்கள் வீடுகளுக்கு அருகில் சிசிடிவி இருந்தால் அதன் கண்களில் படும் வகையிலும் பைக்கை நிறுத்தி வைக்க முயற்சி செய்யலாம். இவையெல்லாம் பைக் அல்லது ஸ்கூட்டர் திருடுபோவதைத் ஓரளவிற்கு சிறப்பாகவே தடுக்கும் வழிமுறைகளாக கவால்துறையாலும் சொல்லப்படுகிறது. அலாரமுடன் கூடிய டிஸ்க் லாக்கே 1,000 ரூபாய்க்குள்ளான விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications