டிவிஎஸ்ஸுடன் கூட்டணி அமைத்து BMW வெளியிட்டுள்ள புதிய பைக்.. வசதிகள் எல்லாம் மிரட்டி விட்டாங்க

நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்தியாவில் புதிய 'F 450 GS' அட்வென்சர் பைக்கை வெளியிட்டுள்ளது பிஎம்வி (BMW). முதன் முதலாக 2024ம் ஆண்டு EICMA நிகழ்விலேயே இந்த பைக்கின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அப்போதே இதனை இந்தியாவிலும் வெளியிடத் திட்டங்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. அதேபோல் தற்போது இந்தியாவில் இந்தப் புதிய அட்வென்சர் பைக் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் தங்களுடைய குறைவான விலை அட்வென்சர் பைக்காக 'G 310 GS'-ஐ விற்பனை செய்து வந்தது பிஎம்வி. கடந்த ஆண்டு இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாகவே புதிய தொடக்க நிலை அட்வென்சர் பைக்காக F 450 GS வெளியிடப்பட்டிருக்கிறது. 310 GS உடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிக விலையில் வெளியாகியுள்ளது. எனவே நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் இல்லை என்பது குறை தான்.

BMW F 450 GS

இந்தப் புதிய அட்வென்சர் பைக்கை ரூ.4.70 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது பிஎம்பி. அதுவும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இந்த விலை. இல்லையென்றால் இன்னும் கூடுதல் விலையைக் கொண்டிருந்திருக்கும் அல்லது இந்தியாவிலேயே வெளியாகியிருக்கிறது. இங்கே டிவிஎஸ் நிறுவனமே பிஎம்விக்காக இந்த பைக்கை ஓசூர் தொழிற்சாலையில் தயாரிக்கவுள்ளது. இதனை விடக் குறைவான விலையில் பைக் வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள், இதன் டிவிஎஸ் வெர்ஷனுக்காக காத்திருக்கலாம் (டிவிஎஸ் வெளியிடும் என்றே நம்புகிறோம்).

முதலில் இதன் மெக்கானிக்கல் அம்சங்களைப் பார்த்துவிடலாம். இந்த பைக்கில் புத்தம் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 420 சிசி, பேரலல் ட்வின், லிக்விட்-கூல்டு இன்ஜினை பிஎம்வி பயன்படுத்தியுள்ளது. இந்த இன்ஜினானது 8,750 rpm-ல் 48 hp பவர் மற்றும் 6,750 rpm-ல் 43 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

BMW F 450 GS

இந்த பைக்கில் ஷிப்ட் அசிஸ்டன்ட் ப்ரோ (Shift Assistant Pro) என்ற தங்களுடைய மேம்பட்ட தொழில்நுட்பம் ஒன்றையும் பிஎம்வி கொடுத்திருக்கிறது. இதன் மூலம் கிளட்ச்சின் பயன்பாடு மேனுவலாக இல்லாமலேயே கியரை அப்ஷிப்ட் அல்லது டவுன்ஷிப்ட் செய்ய முடியும். மூன்று வேரியன்ட்களாக இந்த பைக் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், டாப் இரண்டு வேரியன்ட்களில் இந்த வசதியினை பிஎம்வி ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது.

சஸ்பென்ஷனுக்காக KYB அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் செட்டப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரியர் சஸ்பென்ஷனை ப்ரீலோடு மற்றும் ரீபவுண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். பிரேக்கிங்கிற்கு முன்பக்கம் பிரெம்போ 4 பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 310 மிமீ டிஸ்க்கும், பின்பக்கம் 240 மிமீ டிஸ்க்குடன் கூடிய பைபிரே செட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் கேஸ்ட் அலுமினியம் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியது போல இந்த F 450 GS அட்வென்சர் பைக்கை, பேஸ், எக்ஸ்க்ளூஸிவ் மற்றும் டிராபி என மூன்று வேரியன்ட்களாக வெளியிட்டுள்ளது பிஎம்வி. அடிப்படையான பேஸ் வேரியன்டில் 6.5 இன்ச் TFT டேஷ்போர்டு, LED விளக்குகள், ஹீட்டட் கிரிப்கள், இன்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல், அட்ஜஸ்டபிள் கிளட்ச், ABS ப்ரோ ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த அடிப்படை வேரியன்டை காஸ்மிக் பிளாக் என்ற ஒரேயொரு நிறத்தில் மட்டுமே நாம் வாங்க முடியும்.

இடைநிலை எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்டில், ஆஃப்-ரோடு ஃபுட் பெக்குகள், ஹேண்டு கார்டுகள், ரைடிங் மோடுகள், ஷிப்ட் அசிஸ்டன்ட் ப்ரோ மற்றும் கிளியர் விண்டு-ஷீல்டு ஆகிய அம்சங்கள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பேஸ் வேரியன்டில் இருக்கும் வசதிகள் இந்த எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்டிலும் இருக்கும். இந்த வேரியன்டையும் காஸ்மிக் பிளாக் நிறத்தில் மட்டுமே நாம் வாங்க முடியும்.

இறுதியாக டாப் எண்டான டிராபி வேரியன்ட். இந்த வேரியன்டில் டின்டட் ரேலி விண்டு ஷீல்டு, ஸ்போர்ட் சஸ்பென்ஷன், அலுமினியம் இன்ஜின் கார்டு மற்றும் ஈஸி ரைடு கிளட்ச் ஆகிய வசதிகள் மேற்கூறிய வேரியன்ட்களின் வசதிகளோடு கூடுதலாகக் கொடுக்கப்படுகின்றன. இந்த வேரியன்டை பிஎம்வியின் ஐகானிக்கான ப்ளூ, ரெட் மற்றும் ஒயிட் இணைந்த ட்ரை கலரில் நாம் வாங்கலாம்.

178 கிலோ எடையுடன் பெரும்பான்மையானோர் சமாளிக்கும் அளவிலான எடையையே புதிய பிஎம்வி அட்வென்சர் பைக் கொண்டிருக்கிறது. சீட் உயரம் 845 மிமீ அளவில் கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது. ஆனால் ஆஃப்-ரோடு பயணங்களின் போது ரைடர் மற்றும் பில்லியன் இருவருக்குமே சொகுசானவையாகவே இந்த சீட்கள் இருக்கும்.

இந்த F 450 GS பைக்கின் அடிப்படையான பேஸ் வேரியன்டை மேலே குறிப்பிட்டது போல ரூ.4.70 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது பிஎம்வி. இடைநிலை எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்டானது ரூ.4.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் எண்டு டிராபி வேரியன்டானது ரூ.5.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

விலையை வைத்துப் பார்க்கும் போது ஹோண்டாவின் NX500 அட்வென்சர் பைக்கிற்குப போட்டியாகவே இந்த பிஎம்வி F 450 GS இருக்கிறது. ஆனால், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட கேடிஎம் 390 அட்வென்சர் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாகவும் இதனைக் கூறலாம்.

பிஎம்வியின் அட்வென்சர் பைக்கை வாங்க வேண்டும் என்பது நிறைய இந்திய வாடிக்கையாளர்களின் கனவாக இருக்கும். தனித்துவமான அடையாளத்தை கொண்டவை அவை. ஆனால் தொடக்கநிலை பைக் மாடலே 800 சிசிக்கும் மேலான இன்ஜினுடன் ரூ.10 லட்சத்தைய ஒட்டிய விலையைக் கொண்டிருக்கும். அதனுடன் ஒப்பிடும் போது தற்போது அதில் பாதி விலையிலேயே முழுமையான பிஎம்வி அனுபவத்தைத் தரக்கூடிய ஒரு அட்வென்சர் பைக்கை இந்திய வாடிக்கையாளர்களால் இப்போது வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொஞ்சம் கூடுதலான விலையைக் கொண்டிருந்தாலும் இது ஒரு மிகச்சிறப்பான இந்திய சந்தையில் கண்டிப்பாக விற்பனையில் இருக்க வேண்டிய பைக் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சற்று குறைவான விலையில் இதே போன்ற அம்சங்களுடை கூடிய பைக் வேண்டும் என்பவர்கள் மேலே கூறியது போல இதன் டிவிஎஸ் வெர்ஷனுக்காகக் காத்திருக்கலாம். இதே 450 சிசி இன்ஜினைப் பயன்படுத்தி டிவிஎஸ்ஸும் புதிய பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருப்பது ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, April 24, 2026, 0:07 [IST]
English summary
Bmw f 450 gs adventure bike launched in india check all details here
மேலும்... #bmw #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+