இதுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை ரூ.1.50 லட்சம் கம்மியான விலையில் வாங்கிட்டு போய்டலாம்! TVS ஆலையில் BMW பைக்!

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து புதியதாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) என்கிற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் ஆனது முன்பு விற்பனையில் இருந்த பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (G 310 GS) என்கிற அட்வென்ச்சர் பைக்கின் இடத்தை நிரப்பும் பொருட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.4.70 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக் ஆனது மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவையாவன, பேஸ் (Base), எக்ஸ்க்ளூசிவ் (Exclusive) மற்றும் ஜிஎஸ் டிராபி (GS Trophy) ஆகும். இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

bmw f 450 gs bike variants

பேஸ்: மேலே கூறப்பட்ட ரூ.4.70 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் எண்ட்ரி-லெவல் வேரியண்ட் இதுவாகும். விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், பிஎம்டபிள்யூவின் சிக்னெச்சரான சுழற்றக்கூடிய கண்ட்ரோலர் உடன் பெரிய அளவில் 6.5-இன்ச் டிஎஃப்டி திரை இந்த வேரியண்ட்டில் கிடைக்கும். இதன் மூலமாக பயணத்திற்கான வழிக்காட்டுதலை திரையில் காணலாம்.

அத்துடன், கை வியர்த்து போகாமல் இருக்க, ஹேண்டில்பாரில் ஹீட்டட் க்ரிப்கள், ஏபிஎஸ் (ABS), டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் அட்ஜெஸ் செய்யக்கூடிய பிரேக் & க்ளட்ச் லிவர்கள் உள்ளிட்டவையும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும். சக்கரங்கள் டிராக்‌ஷனை இழக்காமல் இருக்க என்ஜின் ட்ராக் டார்க் கண்ட்ரோல் மற்றும் உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய பின்பக்க பிரேக் லிவர் உள்ளிட்டவற்றையும் பெறலாம். ஆனால், இந்த பேஸ் வேரியண்ட் ஆனது காஸ்மிக் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.

bmw f 450 gs bike variants

எக்ஸ்க்ளூசிவ்: ரூ.4.90 லட்சத்தில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் பேஸ் வேரியண்ட்டில் கிடைக்கும் அம்சங்கள் உள்பட என்ஜின் பாதுகாப்பான், ஹேண்டில்பாரில் கை விரல்களுக்கான பாதுகாப்பான் மற்றும் எதிர்காற்றை தடுக்க சற்று பெரிய அளவிலான விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை கூடுதலாக பெறலாம். இவற்றுடன், ரைடிங் மோட்ஸ் புரோ மற்றும் ஷிஃப்ட் அசிஸ்டண்ட் புரோ போன்ற அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.

இதனால், வழக்கமான சாலை பயணங்கள் மட்டுமின்றி ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றதாக விளங்கும் இந்த வேரியண்ட்டில் அதற்கேற்ப ஆஃப்-ரோடு ரைடிங்கிற்கு உகந்த ஃபுட் பெக்ஸ் (Footpegs) வழங்கப்படுகிறது. பேஸ் வேரியண்ட்டை போன்று, இந்த வேரியண்ட்டும் காஸ்மிக் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ் டிராபி: புதிய எஃப் 450 ஜிஎஸ் பைக்கின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் அட்ஜெஸ் செய்யக்கூடிய ஸ்போர்ட் சஸ்பென்ஷன், ஈசி ரைடு க்ளட்ச் (ERC), அலுமினியத்திலான என்ஜின் பாதுக்காப்பான் மற்றும் டிண்ட் செய்யப்பட்ட ராலி விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக பெறலாம்.

இவற்றை மேற்கூறப்பட்ட மற்ற இரு வேரியண்ட்களிலும் கூடுதல் தொகையை செலுத்தி பெறலாம். எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் இந்த ஜிஎஸ் டிராபி வேரியண்ட் பெறுகிறது. கூடுதலாக, சேசிஸ் மற்றும் ஓட்டுனரின் கை விரல்களுக்கான பாதுக்காப்பான் ஆனது வெள்ளை நிறத்தில் கிடைக்கும். அத்துடன், இந்த வேரியண்ட்டை மட்டுமே பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உண்டான மூன்று வண்ணங்களில் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக்கின் உண்மையான வேரியண்ட்டே ஜிஎஸ் டிராபி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், மற்ற இரு வேரியண்ட்களும் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. குறைந்த விலையில் எப்படியாவது இந்த புதிய பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கை வாங்கிவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு பேஸ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்கள் ஏற்றவையாக இருக்கும்.

Article Published On: Monday, April 27, 2026, 11:00 [IST]
English summary
Bmw f 450 gs bike base exclusive and gs trophy variants comparison check all details here
மேலும்... #bmw motorrad #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+