இப்போ புக் பண்ணா கூட இந்த பைக்கை வாங்க ஒரு வருஷம் காத்திருக்கனும்.. அவ்ளோ டிமாண்டு!

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் புத்தம் புதிய F 450 GS அட்வென்சர் பைக்கை வெளியிட்டது BMW. அந்நிறுவனத்தின் பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ் மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்தப் புதிய அட்வென்சர் பைக் வெளியிடப்பட்டது. இந்த பைக்கின் டெலிவரியையே இன்னும் BMW தொடங்காத நிலையில், தற்போது முன்பதிவு நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதிக டிமாண்டு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த சில வாரங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கும் கூட வெயிட்டிங் பீரியட் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீள்கிறது. ஆம், இப்போது இந்த பைக்கை ஏதாவது ஒரு வகையில் முன்பதிவு செய்தால் கூட ஒரு வருடம் கழித்தே டெலிவரி கிடைக்கும். அவ்வளவு டிமாண்டு இருக்கிறது.

BMW F 450 GS

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இந்த பைக்கிற்கான முன்பதிவு மீண்டும் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மற்றம் டிசம்பர் மாதங்களிலேயே இந்த பைக்கிற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சில டீலர்ஷிப்களால் பெறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போது பதிவு செய்தவர்களுக்கே அடுத்த மாதம் முதலில் டெலிவரி கொடுக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகின்றன.

அதிக டிமாண்டு என்று கூறினாலும், தயாரிப்பிற்கு மேலான முன்பதிவினால் டிமாண்டா அல்லது முன்பதிவுக்கு ஏற்ப தயாரிப்பு இல்லாததால் டிமாண்டா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் டிவிஎஸ்ஸின் அப்பாச்சி RTX பைக்கிற்கு இதேபோல் வெளியான சமயத்தில் டிமாண்டு அதிகம் இருந்தது. டிவிஎஸ்ஸின் ஓசூர் தொழிற்சாலையில் அந்த பைக் தயாரிக்கப்பட்டது. அதே தொழிற்சாலையிலேயே புதிய F 450 GS பைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

BMW F 450 GS

குறைவாக தயாரிக்கப்படும் காரணத்தினாலும் அதிக டிமாண்டு இருக்கலாம். மேலும் இந்த அட்வென்சர் பைக்கை இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் BMW விற்பனை செய்யவிருக்கிறது. முதன் முதலில் ஐரோப்பாவின் EICMA நிகழ்வில் தான் இந்த பைக் அறிமுகப்படுத்தவேபட்டது. எனவே ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகக் கூட, இந்திய விற்பனையில் டிமாண்டு ஏற்பட்டிருக்கலாம்.

எப்படியோ உடனடியாக இந்த பைக்கை நீங்கள் வாங்க நினைத்தால் இப்போது முடியாது. ஒரு ஆண்டு வரை கண்டிப்பாகக் காத்திருக்க வேண்டும். கண்டிப்பாக இதனை நீங்கள் வாங்கியே ஆக வேண்டும் என்றால், அடுத்த முன்பதிவு காலம் தொடங்கும் போது உடனடியாகப் பதிவு செய்துவிடுங்கள். அப்படி செயதாலும் ஆறு மாதங்கள் முதல் எட்டு மாதங்கள் வரை டெலிவரிக்காக காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான விலையில் நல்ல அம்சங்களுடன் ஒரு BMW பைக்கை வாங்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் முதலில் பார்க்க வேண்டிய பைக் இந்த F 450 GS தான். இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பைக்குகளின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இதற்கு கீழே G 310 RR என்ற ஸ்போர்ட் பைக் ஒன்றும் விற்பனையில் இருக்கிறது. ஆனால் முழுமையான BMW அனுபவத்தை அந்த பைக்கில் பெற முடியாது.

இந்த F 450 GS அட்வென்சர் பைக்கை 4.70 லட்சம் ரூபாய் முதல் 5.30 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது BMW. 48 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 420 சிசி, பேரலல் ட்வின், லிக்விட்-கூல்டு இன்ஜின், ப்ரீமியமான சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப்புகள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அனைத்து விதமான எலெக்ட்ரானிக் வசதிகளையும் இந்த பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலையில் முறையான BMW பைக்கை வாங்க விரும்பிய வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக வந்து அமைந்திருக்கிறது இந்த F 450 GS அட்வென்சர் பைக். தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும் விரைவில் அடுத்தகட்ட முன்பதிவை அந்நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, June 10, 2026, 20:10 [IST]
English summary
Bmw f 450 gs bookings stopped as demand soared
மேலும்... #bmw #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out