புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஆர் பைக் அறிமுகம்: கேடிஎம்-க்கு கடுமையான சவால்!

பிரிமீயம் வகை மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பிரபலமான பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது விலை குறைவான பிரிமீயம் பைக் மாடலை உலக அளவில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருந்த அதன் பிரபலமான ஜி310 பைக்கிற்கு மாற்றாக அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

ஏற்கனவே சந்தையில் கவனம் ஈர்த்த எஃப் 450 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கின் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு ஸ்ட்ரீட் நேக்கட் வகை ரோட்ஸ்டெர் என்ற ரக பைக் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் டிசைன் முற்றிலும் மாறுபட்டு, பிஎம்டபிள்யூவின் முதன்மை மாடலான எஸ் 1000 ஆர் பைக்கின் ஆக்ரோஷமான ஸ்ட்ரீட் ஃபைட்டர் தோற்றத்தை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

BMW F 450 R

இந்த புதிய பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் அமைப்புடைய 420 சிசி, லிக்விட்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 8,750 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 48 எச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்மில் 43 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அன்றாட நகரப் பயணம் மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ப இதன் எஞ்சின் டியூனிங் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Also Read

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடுள்ளதுடன், 'ஈஸி ரைடு கிளட்ச்' (Easy Ride Clutch) தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. டிராஃபிக் நிறைந்த இந்திய சாலைகளில் அடிக்கடி கிளட்ச் பிடித்து கியர் மாற்றுவதைக் குறைத்து, சவாரி செய்வதை இது மிகவும் எளிதாக்கும். நகர்ப்புறங்களில் தினசரி அலுவலகம் செல்வோருக்கு இந்த வசதி பெருமளவில் உதவும்.

BMW F 450 R

ஸ்டீல் டியூபியூலர் ஃபிரேம் கட்டமைப்பில் உருவான இந்த பைக்கின் முன் பகுதியில் 43 மிமீ கேஒய்பி (KYB) அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் கேஒய்பி மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 17 அங்குல அலாய் வீல்களில் யூரோகிரிப் புரோடார்க் எக்ஸ்ட்ரீம் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Also Read

முன் பக்கத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பிரெம்போ காலிபரும், பின் பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் இதில் தரமாக இடம்பெற்றுள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 175 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஜிஎஸ் மாடலை விட 3 கிலோ குறைவு என்பதால், வளைவுகளிலும் டிராஃபிக்கிலும் பைக்கை எளிதாகக் கையாளுவதற்கு ஏதுவாக இருக்கும்.

BMW F 450 R

இந்திய ரைடர்களின் உயரத்திற்கு ஏற்ப இதன் சீட் அமைப்பை தேர்வு செய்ய முடியும். தரையிலிருந்து இருக்கை உயரம் 790 மிமீ கொண்டதாக வழங்கப்படுகிறது. மேலும் விருப்பத்தின் பேரில் 775 மிமீ அல்லது 810 மிமீ இருக்கை உயரம் கொண்டதாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப வசதிகளைப் பொறுத்தவரை, 6.5 இன்ச் டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன. குளிர் காலத்தில் கைப்பிடியை கதகதப்பாக வைத்திருக்க Heated Grips வசதியும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்த பைக்கின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், எஃப் 450 ஜிஎஸ் மாடலின் இந்திய வெளியீட்டைத் தொடர்ந்து, இந்த எஃப் 450 ஆர் மாடலும் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எஃப் 450 ஜிஎஸ் பைக்கின் ஆரம்ப விலை ரூ.4.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்ட்ரீட்-நேக்கட் பதிப்பான எஃப் 450 ஆர் பைக் அதைவிடக் குறைவான விலையில், அதாவது சுமார் ரூ.4.50 லட்சம் முதல் ரூ.4.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே கவாஸாகி இசட்500 மற்றும் விரைவில் வரவிருக்கும் புதிய தலைமுறை கேடிஎம் டியூக் மாடல்களுக்கு இந்த புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஆர் மிகப்பெரிய போட்டியாக அமையும்.

Article Published On: Saturday, October 3, 2026, 10:18 [IST]
English summary
Bmw f 450 r revealed 48 hp 420cc engine features specs
மேலும்... #bmw motorrad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X